தமிழகத்தில் கடந்த 3 மாதங்களாக அரிசியின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. ஒரு கிலோ ரூ.55 -க்கு விற்கப்பட்டது இன்று ரூ.75 ஆகவும், 26 கிலோ மூட்டை ரூ. 700 வரை விலை உயர்ந்துள்ளதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருந்தார். அதில் , ” முதலமைச்சர் அவர்கள் லண்டன் போகிறார், கர்நாடகா போகிறார், ஆந்திரா போகிறார், போகட்டும்…அப்படியே உள்ளூரில் உள்ள மளிகைக் கடைக்கும் ஒரு எட்டுப்போய் விலைவாசி உயர்வைக் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். தயவு செய்து மாண்புமிகு உணவுத் துறை அமைச்சரிடம் கேட்டு விட வேண்டாம். அவர் எல்லாம் ‘நார்மலாக’ இருக்கிறது என்பார். மக்கள் பண்டிகைக் காலத்தின் மகிழ்ச்சிக்குப் பதிலாக பயத்தில் உறைந்து போய் இருக்கிறார்கள். அவர்களிடம் கேளுங்கள்” என்று முதல்வரை விமர்சித்து பதிவிட்டிருந்தார்.

அரிசி

இதுகுறித்து தலைமைச் செயலகத்தில் அமைச்சர் வெங்கட் ரமணன் பேசுகையில், ” விலைவாசி உயர்வில் தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது என்பதை கடந்த 5 ஆண்டுகாலப் புள்ளிவிவரங்களோடும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். கிராமப்புறங்களில் 90% மக்கள் ரேஷன் அரிசியை வாங்கித் தான் பயன்படுத்துகிறார்கள். நகர்ப்புறங்களில் தான் விலைவாசி உயர்வு தெரிகிறது.

நகர்ப்புறங்களில் கர்நாடகா பொன்னி, ஆந்திரா பொன்னி உட்பட சில வகை அரிசிகளை சாப்பிடுகிறார்கள். அந்த அரிசிகளின் வரத்து குறைவாக இருப்பதால் விலைவாசி உயர்ந்திருப்பதைப் போலத் தெரிகிறது. தமிழகத்திலேயே விளையும் அரிசிகளின் விலை இயல்பாகத் தான் இருக்கிறது. பதுக்கல்களைத் தடுப்பதற்காக மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டிருக்கிறது” என்றார்.

இது குறித்து திருச்சி பார்த்திபன் மாடர்ன் ரைஸ்மில் உரிமையாளர் பார்த்திபன் கூறுகையில், “இந்த விலையேற்றம் என்பது செயற்கையாக உருவாக்கப்பட்டது அல்ல. சம்பா அறுவடையில் தான் சன்ன ரகமான பொன்னி விளைச்சல் வரும் . இந்த வருடம் மழை இல்லாததால் வருகின்ற தை மாதத்திலும் விளைச்சல் குறைவாக இருக்கும். மற்ற மாநிலங்களிலும் மழை இல்லாத காரணத்தால் அங்கேயும் விளைச்சல் குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது . இந்த நிலையில், தற்போது உள்ள நெல் இருப்பு, அரிசி இருப்பு குறுகிய காலத்திற்குத் தான் உள்ளது . எனவே விலை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. ஏப்ரல் , மே மாதங்களில் 300 முதல் 400 மூட்டைகள் வரை கொடுத்துக் கொண்டு இருந்தார்கள். இன்றைக்கு மொத்த வியாபாரிகளே, தினமும் ஒவ்வொரு விலையில் வாங்க வேண்டிய சூழல் உள்ளது. மழை பெய்து, விளைச்சல் அதிகரித்து வருகின்ற காலங்களில் இந்த நிலை எப்போது சீராகும் என்பது கேள்விக்குறியாக உள்ளது” என்றார்.

More in TamilNews
கொல்கத்தா துர்கா பூஜை பந்தலில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது ஏன்? 7 நிமிடங்களில் துக்கமாக மாறிய கொண்டாட்டம் கொல்கத்தா துர்கா பூஜை பந்தலில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது ஏன்? 7 நிமிடங்களில் துக்கமாக மாறிய கொண்டாட்டம் October 18, 2026 அருண்ராஜூக்கே இந்த நிலையா.. ரோட்டில் மோதி கொண்ட தவெகவினர்.. தர்மசங்கடத்தில் முடிந்த நிகழ்ச்சி அருண்ராஜூக்கே இந்த நிலையா.. ரோட்டில் மோதி கொண்ட தவெகவினர்.. தர்மசங்கடத்தில் முடிந்த நிகழ்ச்சி October 18, 2026 காணொளி: சுரங்க பாதையில் தேங்கிய மழைநீரில் சிக்கிய கார் மீட்பு காணொளி: சுரங்க பாதையில் தேங்கிய மழைநீரில் சிக்கிய கார் மீட்பு October 18, 2026 சென்னையில் கனமழை: 'இது வழக்கமான நிகழ்வல்ல' – அடுத்தடுத்த நாட்களில் நிலைமை எப்படி மாறும்? சென்னையில் கனமழை: 'இது வழக்கமான நிகழ்வல்ல' – அடுத்தடுத்த நாட்களில் நிலைமை எப்படி மாறும்? October 18, 2026 "தனுஷ் அதிமுகவில் இணைந்தால் இருகரம் கூப்பி வரவேற்போம்"- அதிமுக ராஜேந்திர பாலாஜ பாலாஜி கூறியதென்ன? "தனுஷ் அதிமுகவில் இணைந்தால் இருகரம் கூப்பி வரவேற்போம்"- அதிமுக ராஜேந்திர பாலாஜ பாலாஜி கூறியதென்ன? October 18, 2026 'சோர்வு என்றே நினைத்தோம்' – குழந்தைகளிடம் எளிதில் கவனிக்க தவறக்கூடிய 4 புற்றுநோய் அறிகுறிகள் 'சோர்வு என்றே நினைத்தோம்' – குழந்தைகளிடம் எளிதில் கவனிக்க தவறக்கூடிய 4 புற்றுநோய் அறிகுறிகள் October 18, 2026

See all 718 in TamilNews →

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *