ஆளும் த.வெ.க-வினர்தான் ரீல்ஸ் போட்டுக் கொண்டிருக்கிறார்கள் எனப் பார்த்தால், சரித்திர பதிவேடு குற்றவாளிகளும் இன்ஸ்டாகிராமில் ஆக்ட்டிவ்வாக இருப்பது தமிழக காவல்துறையை திணறடித்திருக்கிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில், கொலை செய்யப்பட்ட ஒரு ரௌடியின் புகைப்படத்தை போட்டு, ‘விரைவில்…’ என்று வீடியோ பதிவு செய்திருக்கிறார் ‘பண்டிகை’ பெயர் கொண்ட சரித்திர பதிவேடு ரௌடி.
அதைக் கவனித்த ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸார், அந்த ரௌடியைப் பிடித்து மாவட்ட போலீஸிடம் ஒப்படைத்திருக்கிறார்கள். அதைத் தொடர்ந்து நடத்திய விசாரணையில், தன்னுடைய கூட்டாளியின் கொலைக்குப் பழிக்குப்பழியாக எதிர் தரப்பைச் சேர்ந்த டீமுக்கு ஸ்கெட்ச் போட்ட அதிர்ச்சி தகவல் தெரியவந்திருக்கிறது. இனி ரெளடிகளின் ரீல்ஸுகளை கண்காணிக்கச் சொல்லி மேலிடம் உத்தரவிட்டிருக்கிறார்களாம்.
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் முடிவுகள் வந்தபிறகு, த.வெ.க கூட்டணியில் ஐக்கியமாவோம் என பா.ம.க-வினர் எதிர்பார்த்த நிலையில், அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதற்கிடையில், ‘நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் தொடர்கிறோம்’ என்றிருந்தார் செளமியா அன்புமணி. ‘ஒருவேளை த.வெ.க-விடமிருந்து முறையான அழைப்பு வரவில்லை என்றால் தி.மு.க கூட்டணிக்கு போகலாமா…’ என்ற ஆலோசனையும் கட்சிக்குள் இருக்கிறதாம்.

‘நம்ம கூட்டணிக்கு வாங்க.. ஓ.பி.சி கன்சாலிடேஷன் நமக்கு உதவும்’ என அறியாலய ஐயப்ப பிரமுகர் தொடர்ச்சியாக பேசிவருகிறாராம். அறிவாலயம் பக்கம் சாய்வதா, இல்லை இருக்கும் கூட்டணியிலேயே தொடர்வதா என ஏக குழப்பத்தில் இருக்கிறார்கள் மாம்பழக் கட்சியினர்.
த.வெ.க அரசு மீதும் தமிழக முதல்வர் மீதும் மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள் நாம் தமிழர் கட்சியின் முன்னணி நிர்வாகிகள். குறிப்பாக, சாட்டை துரைமுருகனின் வீடியோக்கள் பொதுமக்களிடம் த.வெ.க-வுக்கு அவப்பெயரை ஏற்படுத்துகிறது.

இதனால் கொதிப்படைந்த த.வெ.க முகாம், ‘இனியும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது.. நா.த.க-வினரை கட்டம் கட்ட வேண்டும்’ என முடிவெடுத்திருக்கிறார்கள். ‘துரைமுருகனை தூக்கினால் பிரச்னை பூதாகரமாகிவிடும்… பிரபலமில்லாதவர்களை தூக்கலாம்’ எனக் கணக்குப்போட்டுதான் கோவை கார்த்திகா உள்ளிட்ட 10 நா.த.க-வினரை கைது செய்திருக்கிறார்களாம். இந்த ஆப்ரேஷனுக்கு பின்னணியில் மூத்த மாண்புமிகு இருப்பதாகச் சொல்கிறார்கள் விவரமறிந்தவர்களாம்.
ஆனால், எதிர்பாராத விதமாக தி.மு.க தலைவர் தொடங்கி அனைத்துக் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்துவிட்டதால் நெருக்கடியில் சிக்கியிருக்கிறது த.வெ.க அரசு.
நாகையில் 137 கிலோ மெத்தப்பட்டமைன் போதைப்பொருள் கடத்தப்பட்ட விவகாரத்தில் சிக்கியிருக்கிறார் த.வெ.க நிர்வாகி பூபாலன்.
அதன் இந்திய சந்தை மதிப்பு சுமார் ரூ.100 கோடிக்கும் அதிகம் என்கிறார்கள் மத்திய புலனாய்வுத்துறை அதிகாரிகள். இதைத் தொடர்ந்து பூபாலன், சுகன், வேளாங்கண்ணியைச் சேர்ந்த மணிகண்டன், பிரதாபராமபுரம் சதீஷ்குமார் ஆகிய நான்கு பேரைக் கைதுசெய்திருக்கிறது வருவாய் புலனாய்வுப் பிரிவு. மற்றொரு முக்கிய நிர்வாகிக்கும் இதில் தொடர்பிருப்பதாக சொல்லப்படுகிறது.

நாகை த.வெ.க-வின் முதன்மை பொறுப்பில் இருக்கும் அந்த நிர்வாகியின் நிழலாகத்தான் பூபாலன் வலம் வந்திருக்கிறார். நாகை மாவட்ட தேர்தல் செலவுகளையே பூபாலன்தான் பார்த்துக் கொண்டதாக தெரிகிறது. இந்நிலையில், நாகை மாவட்ட த.வெ.க நிர்வாகிகள் பலருக்கும் இதில் தொடர்பிருப்பதாக அடித்துச் சொல்கிறார்கள் விவரமறிந்தவர்கள். மேலும், அம்மாவட்ட த.வெ.க வேட்பாளர்கள் சிலர், கணிசமான தொகையை தலைமைக்கு கொடுத்து சீட் வாங்கியதாகவும் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது!
தி.மு.க-வின் கல்வியாளர் அணியின் மாநிலத் துணைத் தலைவராக இருக்கும் மைத்ரேயன், மீண்டும் பா.ஜ.க பக்கம் சாயத் தொடங்கியிருக்கிறார். பா.ஜ.க-வில் தன் அரசியல் பயணத்தைத் தொடங்கிய மைத்ரேயன், ஜெயலலிதா காலத்தில் அ.தி.மு.க-வில் இணைந்து மாநிலங்களவை எம்.பி-யாக இருந்தார். பின்னர் பா.ஜ.க-வுக்குச் சென்றவர், அங்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றதும் மீண்டும் அ.தி.மு.க-வுக்குத் தாவினார். அங்கும் தனக்கு போதிய மரியாதை தரப்படவில்லை என்ற பொருமலோடு, தி.மு.க-வில் இணைந்தார் மைத்ரேயன். தி.மு.க-வில், கல்வியாளர் அணியில் மாநில அளவிலான பொறுப்பு அவருக்கு அளிக்கப்பட்டது.

இந்தச் சூழலில், தேர்தலில் தி.மு.க தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, மீண்டும் பா.ஜ.க-வில் இணைய பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் அவர். சமீபகாலமாக, பா.ஜ.க தலைவர்களுடன் தனக்கிருந்த பழைய கால தொடர்புகளை நினைவுபடுத்துவதுபோல, தொடர்ச்சியாக பதிவுகளை செய்துவருகிறார் மைத்ரேயன். சமீபத்தில் பிறந்தநாள் கொண்டாடிய துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனுக்குக் கூட தன்னுடைய எக்ஸ் வளைதள பக்கத்தில் வாழ்த்துச் செய்தி பதிவிட்டார். ஆனாலும், அவரை கண்டுக்கொள்ள கமலாலயத்தில் யாரும் தயாராக இல்லாததால், விரக்தியில் இருக்கிறாராம் மைத்ரேயன்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb
ஈரான் காட்டும் சாவு பயம்.. மத்திய கிழக்கை விட்டு அமெரிக்கர்கள் ஓடுவது ஏன்? உளவுத்துறை வார்னிங்
October 24, 2026
நடுவானில் பயங்கரமாக மோதிய 2 விமானங்கள்.. விமானத்தில் பயணித்த 4 பைலட்டுகளும் பலி
October 24, 2026
பரிதாப நிலையில் பாகிஸ்தான்.. கேஸ் சிலிண்டர் விலை ரூ.10,000 ஆக உயர்வு! மக்கள் கடும் பாதிப்பு!
October 24, 2026
அரசு விடுதி மாணவர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு! அமைச்சரின் அதிரடி அறிவிப்பு !
October 24, 2026
8 குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கிவைத்த நாட்டாமை.. இறந்தவர் உடலை எரிக்க ரூ.2 லட்சம் அபராதம்!
October 24, 2026
GOOGLE நிறுவனம் ஏற்படுத்திய இயற்கை பேரழிவு! பின்லாந்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம் !
October 24, 2026
Spurs earn rare win at Stamford Bridge in chaotic end to game
October 24, 2026
Hamilton fastest from Verstappen ahead of US GP Qualifying
October 24, 2026
Spurs earn deserved win at Chelsea after Penders error and Palmer red
October 24, 2026
Tel's sensational solo goal seals Spurs' win
October 24, 2026
Burnley sack head coach Hayen with 26-word statement
October 24, 2026
'Lost his head!' – Disaster for Chelsea as Palmer sent off for second yellow
October 24, 2026