நேற்று அமெரிக்காவின் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்கோஃப் ரஷ்யாவில் அந்த நாட்டு அதிபர் புதினைச் சந்தித்தார்.
இந்தச் சந்திப்பு குறித்து புதின் தெரிவித்துள்ளதாவது…
“உக்ரைன் நெருக்கடிக்குத் தீர்வு காண்பதில் நீங்கள் செலுத்தும் கவனத்திற்கும், அதிபர் ட்ரம்பின் கவனத்திற்கும் நன்றி.
குறிப்பாக மனிதநேய அடிப்படையில் அதிபர் ட்ரம்ப் இந்தப் பிரச்னைக்கு முக்கியத்துவம் அளிக்கிறார் என்பதை நான் அறிவேன்.

எங்களது சமீபத்திய தொலைபேசி உரையாடல் உட்படப் பல்வேறு பேச்சுவார்த்தைகளில், இரு தரப்பிலும் உள்ள ராணுவ வீரர்களின் உயிரிழப்புகளைக் கருத்தில் கொண்டு, இந்த மோதலை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.
ஆனால், இது ராணுவ வீரர்களின் இழப்புகள் பற்றியது மட்டுமல்ல. பொதுமக்கள் படும் துயரங்களைப் பற்றியதும் கூட.
ஈரான் போரில்…
ஈரானுடனான எங்களுடைய தனித்துவமான நம்பிக்கைக்குரிய உறவு உங்களுக்குத் தெரியும்.
ஈரானுடனான நெருக்கடியைத் தீர்க்க எங்களால் ஏதாவது செய்ய முடியும் என்றால், அதை நாங்கள் மகிழ்ச்சியுடன் செய்வோம்.
அமெரிக்கா – ரஷ்யா டீசல் ஒப்பந்தம்
அமெரிக்காவிற்கு ரஷ்யாவிலிருந்து டீசல் விநியோகிக்கப்படும் என்று இரு தரப்பும் அறிவித்த உடனேயே, சர்வதேசச் சந்தையில் டீசல் விலை உடனடியாக 5 முதல் 6 சதவிகிதம் வரை சரிந்தது.
40,000 டன்கள் கொள்ளளவு கொண்ட முதல் கப்பல் இன்னும் இரண்டு, மூன்று நாட்களில் ரஷ்யாவிலிருந்து அமெரிக்காவிற்குப் புறப்படும்.
அதைத் தொடர்ந்து மற்ற கப்பல்களும் ஒன்றன்பின் ஒன்றாகப் புறப்படும். அனைத்தும் முறையாக நடப்பதை உறுதி செய்ய நிதி ஏற்பாடுகள் சரியாக இருப்பதை உறுதி செய்வதே இங்கு முக்கியமானது.

உரம்…
அதிபர் ட்ரம்ப் தொலைபேசி உரையாடலின்போது, விவசாயிகளைப் பற்றிப் பேசினார். எங்களால் அமெரிக்கச் சந்தைக்குக் கணிசமான அளவில் உரங்களையும் விநியோகிக்க முடியும்”
இப்போது புதின் சொல்லியிருப்பதைப் பார்த்தால், ரஷ்யாவுடன் அமெரிக்கா டீசல் ஒப்பந்தத்துடன், உர ஒப்பந்தத்தையும் விரைவில் போடுமோ?
ஈரான் காட்டும் சாவு பயம்.. மத்திய கிழக்கை விட்டு அமெரிக்கர்கள் ஓடுவது ஏன்? உளவுத்துறை வார்னிங்
October 24, 2026
நடுவானில் பயங்கரமாக மோதிய 2 விமானங்கள்.. விமானத்தில் பயணித்த 4 பைலட்டுகளும் பலி
October 24, 2026
பரிதாப நிலையில் பாகிஸ்தான்.. கேஸ் சிலிண்டர் விலை ரூ.10,000 ஆக உயர்வு! மக்கள் கடும் பாதிப்பு!
October 24, 2026
அரசு விடுதி மாணவர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு! அமைச்சரின் அதிரடி அறிவிப்பு !
October 24, 2026
8 குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கிவைத்த நாட்டாமை.. இறந்தவர் உடலை எரிக்க ரூ.2 லட்சம் அபராதம்!
October 24, 2026
GOOGLE நிறுவனம் ஏற்படுத்திய இயற்கை பேரழிவு! பின்லாந்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம் !
October 24, 2026
இந்தியாவின் மின்தட்டுப்பாட்டு பிரச்சனைக்கு இதுதான் தீர்வா..?
October 24, 2026
3 நாளுக்கான உணவு, தண்ணீர், பணம் சேமித்துக்கொள்ளுங்கள்.. பிரிட்டன் பிரதமர் எச்சரிக்கை..!!
October 24, 2026
iPhone Duo: 5 நிமிடத்தில் 'Out Of Stock'.. 4.5 லட்சம் ரூபாய் போனுக்கு இவ்வளவு டிமாண்டா..?
October 24, 2026
பழைய பொருட்களைத் தூக்கி எறியும் காலம் முடியப்போகிறது! – வணிகத்தில் AI-ன் அடுத்தகட்டப் பாய்ச்சல்
October 24, 2026
Rybakina readies for title defence at Ningbo Open in final with Fernandez
October 24, 2026
Sudan’s soaring fuel prices make getting by harder for workers
October 24, 2026