கன்னியாகுமரியில் கல்லூரி மாணவி ஒருவருக்கு தவெக நிர்வாகி பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

“கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் அருகே பேருந்துக்காகக் காத்திருந்த கல்லூரி மாணவிக்கு உதவுவது போல நடித்து ஆளுங்கட்சி தவெக மாவட்ட செயற்குழு உறுப்பினர் கிறிஸ்டோபர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.

‘பெண்களைக் காப்பதில் நம்பர் 1 ஆட்சியாக இருக்கும்’ என்று சொல்லியபோது தனது கட்சிக்காரர்கள் இருப்பதை இன்றைய முதல்வர் மறந்துவிட்டாரோ என்னவோ,

இப்படி ஆளுங்கட்சி தவெகவின் காமுக SIR-களால் பெண்களுக்குப் பாலியல் தொந்தரவு ஏற்படுவது அதிகரித்து வருகிறது.

ஆட்சிதான் மாறியதே தவிர, காட்சி மாறவில்லை என்பதைப் போல், தற்போது பாலியல் SIR-களுக்கான Address-ஆக தவெக மாறி நிற்கிறது.

இவ்வளவு கொடுமைகளுக்கும் நடுவே ‘சிங்கப்பெண் அதிரடிப் படை’ எங்கே போனது என்றும் தெரியவில்லை? Hibernation Mode?

மாணவிக்குப் பாலியல் தொல்லை அளித்த தவெக நிர்வாகி கிறிஸ்டோபர் மீது எந்தவித அரசியல் குறுக்கீடும் இன்றி, உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த அரசை வலியுறுத்துகிறேன்.

தமிழகப் பெண்களுக்கும், சிறுமிகளுக்கும் ஒரு அன்பான வேண்டுகோள் – உங்களுக்கு உதவி செய்வதாக முகம் தெரியாத நபர்கள், குறிப்பாக தவெகவினர் என்றால், உடனடியாகக் காவல்துறையைத் தொடர்பு கொள்ளுங்கள்.

உங்களை யாரேனும் தவறாக நெருங்க வருவதாக நினைத்தால், உடனே உங்களைத் தற்காத்துக் கொள்வதற்கான அனைத்து உபகரணங்களையும் உங்கள் கைப்பையில் வைத்துக்கொள்ளுங்கள்.

‘நமக்கு நாமே பாதுகாப்பு’ என்பதே இந்த ஆட்சியின் அவல நிலை!”

More in TamilNews
பெரும்பான்மையை எட்ட முடியாமல் தவிக்கும் நெதன்யாகு.. தேர்தல் திருடப்பட்டு விட்டதாக பரபர குற்றச்சாட்டு பெரும்பான்மையை எட்ட முடியாமல் தவிக்கும் நெதன்யாகு.. தேர்தல் திருடப்பட்டு விட்டதாக பரபர குற்றச்சாட்டு October 28, 2026 WPL AUCTION : 15 வயதிலேயே புதிய வரலாறு! கிரிக்கெட் உலகைத் திரும்பிப் பார்க்க வைத்த சிறுமி! WPL AUCTION : 15 வயதிலேயே புதிய வரலாறு! கிரிக்கெட் உலகைத் திரும்பிப் பார்க்க வைத்த சிறுமி! October 28, 2026 SIR விவகாரம்: நவம்பர் 1 -ல் ஒன்றினையும் INDIA BLOC's – CJP ! எகிறும் எதிர்பார்ப்பு ! SIR விவகாரம்: நவம்பர் 1 -ல் ஒன்றினையும் INDIA BLOC's – CJP ! எகிறும் எதிர்பார்ப்பு ! October 28, 2026 RATHAVETTAI EPISODE 12 :ஆம்ஸ்ட்ராங் கொலை பின்னணியில் ஆற்காடு சுரேஷின் ரத்த சரித்திரம் ! RATHAVETTAI EPISODE 12 :ஆம்ஸ்ட்ராங் கொலை பின்னணியில் ஆற்காடு சுரேஷின் ரத்த சரித்திரம் ! October 28, 2026 ராணிப்பேட்டையில் மாயமான குழந்தை! ஆந்திராவில் மீட்ட போலீஸ்! தவெக ஆதரவாளர் அதிரடி கைது! பரபர பின்னணி! ராணிப்பேட்டையில் மாயமான குழந்தை! ஆந்திராவில் மீட்ட போலீஸ்! தவெக ஆதரவாளர் அதிரடி கைது! பரபர பின்னணி! October 28, 2026 “தேவையற்ற வதந்திகள்.. "- கொளத்தூர் எம்.எல்.ஏ வி.எஸ் பாபு உடல்நிலை குறித்து அமைச்சர் மரிய வில்சன் “தேவையற்ற வதந்திகள்.. "- கொளத்தூர் எம்.எல்.ஏ வி.எஸ் பாபு உடல்நிலை குறித்து அமைச்சர் மரிய வில்சன் October 28, 2026

See all 605 in TamilNews →

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *