ஐ.யூ.எம்.எல் கட்சியின் இளைஞரணி அரசியல் எழுச்சிப் பொதுக்கூட்டம் நேற்று சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “2029-ல் எல்லோரும் இணைந்து வென்றாக வேண்டும். இந்தியாவின் வெற்றி தமிழ்நாட்டிலிருந்து உருவாக்கப்படும். மதச்சார்பற்ற கொள்கையின் வெற்றியாக அது இருக்கும். இதை உடைப்பதற்கு புதிய புதிய நடிகர்கள் டெல்லி சென்று அமர்ந்திருக்கிறார்கள். அதெல்லாம் எதுவும் நடக்காது. யார் வேண்டுமானாலும் வரட்டும் எதுவும் நடக்காது.
திமுக சைத்தான்களின் பிள்ளைகளாக ஆகிவிட்டதே என நினைத்தால், புதிது புதிதாக சைத்தான்களின் பிள்ளைகள் வந்துகொண்டே இருக்கிறார்கள். எல்லாம் டெல்லியிலிருந்து பேக் செய்துகொண்டு வருகிறார்கள். எந்த நடிகர் பொங்கலுக்கு டெல்லி சென்றிருந்தார் என்றெல்லாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். வரக்கூடிய தேர்தல்களுக்காக பூத் லெவலில் திட்டங்களை தீட்டி வேலைகளை செய்துகொண்டிருக்கிறோம். மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி என்றும் உறுதியான கூட்டணி. நான் எதிர்க்க வேண்டியவர்கள் மதச்சார்பின்மைக்கு எதிராக இருப்பவர்கள்.
கம்யூனிஸ்ட் தோழர்களும் இதில் எங்களுடன்தான் இருக்கிறார்கள். அரசியலில் தவறுகள் நடக்கும்போது, அதைச் சரி செய்யும் இடத்தில் முதலமைச்சரும், நாங்களும் இருக்கிறோம். அமைச்சர் என்கிற முறையில் அதிகாரத்தை மனதில் வைத்து கைது செய்வோம் என்ற எண்ணம் எங்களுக்குக் கிடையாது. முதல்வர் இன்றும் ஒரு சாமானிய வீட்டுப் பிள்ளையாகத்தான் இருக்கிறார்.

எனவே, 2029-ன் வெற்றி மற்றும் வரக்கூடிய உள்ளாட்சித் தேர்தலின் வெற்றி, ஒட்டுமொத்த மதச்சார்பின்மையில் இருந்து வரக்கூடிய தலைவர்களால்தான் சாத்தியமாகும். காயிதே மில்லத் எல்லாரும் சமம் என்றக் கொள்கையுடையவர். பெரியார், அண்ணா, அம்பேத்கர் ஆகியோரைப் போல, காயிதே மில்லத் அவர்களையும் மக்களிடம் கொண்டு செல்லும் அரசியலை உருவாக்க வேண்டும்.” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb
WPL AUCTION : 15 வயதிலேயே புதிய வரலாறு! கிரிக்கெட் உலகைத் திரும்பிப் பார்க்க வைத்த சிறுமி!
October 28, 2026
SIR விவகாரம்: நவம்பர் 1 -ல் ஒன்றினையும் INDIA BLOC's – CJP ! எகிறும் எதிர்பார்ப்பு !
October 28, 2026
RATHAVETTAI EPISODE 12 :ஆம்ஸ்ட்ராங் கொலை பின்னணியில் ஆற்காடு சுரேஷின் ரத்த சரித்திரம் !
October 28, 2026
“தேவையற்ற வதந்திகள்.. "- கொளத்தூர் எம்.எல்.ஏ வி.எஸ் பாபு உடல்நிலை குறித்து அமைச்சர் மரிய வில்சன்
October 28, 2026
அனிருத் – காவ்யா மாறன் வரவேற்பு INVITATION விலை தெரியுமா? டிசைன் செய்யவே இத்தன மாசமா !
October 28, 2026
இனிக்க இனிக்க காதல் சொல்லும்….என்னை தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன் பேரும் என்னடி!
October 28, 2026
Babydoll singer says life will 'never be the same again' after UK number one
October 28, 2026
Sam Fender pre-sale moved after 'bot attack'
October 28, 2026
Russell Brand tells trial sexual consent is 'fundamental'
October 28, 2026
Government minister calls for review of 'unacceptable' BBC Scotland channel closure
October 28, 2026
Chris Mason: Budget felt cautious despite its range of small measures
October 28, 2026
Your pay, energy bills and savings: How the Budget affects you
October 28, 2026