சென்னை OMR இல் உள்ள தனியார் கல்லூரியில் நடிகர் தனுஷ் தனது நற்பணி இயக்கத்தின் மகளிரணி நிர்வாகிகளை இன்று சந்திக்கிறார்.

‘தனுஷ் அரசியலுக்கு வருகிறாரா?’ எனும் கேள்வி அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியிருக்கும் சூழலில் இந்தச் சந்திப்பு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. தனுஷுக்கு நெருக்கமான வட்டத்தில் விசாரித்ததில் இந்தச் சந்திப்புக்காக நிர்வாகிகளுக்கு அவர் கொடுத்த அசைன்மெண்டை பற்றியும் இந்தச் சந்திப்புக்காக ஒரு மாதமாக நடந்து வந்த பின்னணி வேலைகள் பற்றியும் தெரிய வந்தன.

Dhanush
Dhanush

இந்தச் சந்திப்பு தொடர்பாக நம்மிடம் பேசிய தனுஷ் நற்பணி இயக்க நிர்வாகிகள் சிலர், ”திருவள்ளூரில் நடந்த பிரமாண்ட இரத்தத்தான முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிலேயே தலைவர் ரசிகர் கட்டமைப்பை வலுப்படுத்தி நற்பணிகளை விரிவுப்படுத்த உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்தே ரசிகர் மன்றத்தில் புதிய உறுப்பினர்களை நியமித்து, ஆக்டிவாக இல்லாத நிர்வாகிகளை விலக்கி புதிய நிர்வாகிகளுக்குப் பொறுப்புக் கொடுத்தோம். மன்றரீதியாக 58 மாவட்டங்கள் இருக்கின்றன. அத்தனை மாவட்டங்களிலும் உறுப்பினர் சேர்க்கை வேகமாக நடத்தப்பட்டது.

இந்நிலையில்தான், அக்டோபர் முதல் வாரத்தில் தலைமை இன்னொரு அசைன்மெண்டையும் எங்களுக்குக் கொடுத்தது. விரைவில் ரசிகர் மன்றத்தை நற்பணி இயக்கமாக மாற்றப் போகிறோம். இயக்கத்தை வலுப்படுத்த பெண்களின் ஆதரவு அதி முக்கியம். மன்றம் இல்லாத இடங்களில் மன்றம் தொடங்குங்கள்.

Dhanush
Dhanush

எல்லா மன்றத்திலும் மகளிரணியை உருவாக்கி வலுப்படுத்துங்கள். இயக்கத்தில் புதிய பெண் உறுப்பினர்களைச் சேர்த்து அவர்களுக்குப் பொறுப்பு கொடுத்து நிர்வாகிகளாகவும் மாற்றுங்கள் என்றனர். இதைத் தொடர்ந்து ‘பெண்கள் உயர்ந்தால் சமூகத்தின் எதிர்காலமும் உயரும்’ என ஒரு பிரசார இயக்கம் போல நற்பணி இயக்கம் பற்றி ஆன்லைனிலும் வெளியேயும் விளம்பரப்படுத்தி தலைவரின் பெண் ரசிகைகளை மன்றத்துக்குள் கொண்டு வந்து அவர்களுக்குப் பொறுப்பும் கொடுத்திருக்கிறோம்.

கணிசமான அளவில் பெண்களையும் உள்ளே கொண்டு வந்திருக்கிறோம். அப்படி இயக்கத்துக்குள் வந்த பெண்களைத்தான் தலைவர் இன்று சந்தித்து ஊக்கப்படுத்தி புகைப்படம் எடுத்துக் கொள்கிறார். ரசிகர் மன்றம் நற்பணி இயக்கமாக மாறிய பிறகு முதல் நிகழ்ச்சியே மகளிரணி நிகழ்ச்சியாக நடப்பதில் தலைவரும் மகிழ்ச்சி, நாங்களும் மகிழ்ச்சி” என்றனர்.

திட்டம் தீட்டும் தனுஷ்?

More in TamilNews
"கட்டணமில்லா அரிசியை பாலிஷ் போட்டு ரூ.30-க்கு விற்றுக் கொள்ளை அடிப்பதுதான் மாற்றமா?" – உதயநிதி சாடல் "கட்டணமில்லா அரிசியை பாலிஷ் போட்டு ரூ.30-க்கு விற்றுக் கொள்ளை அடிப்பதுதான் மாற்றமா?" – உதயநிதி சாடல் October 25, 2026 Mecca, Medina-ல் ஹூதி ஏவிய ஏவுகணையின் சிதறல்கள்? சவூதி பகிர்ந்த போட்டோ; ஹூதி சொல்வது என்ன? Mecca, Medina-ல் ஹூதி ஏவிய ஏவுகணையின் சிதறல்கள்? சவூதி பகிர்ந்த போட்டோ; ஹூதி சொல்வது என்ன? October 25, 2026 தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகா, நீதி தவறும் மத்திய அரசு; பறிக்கப்படும் தமிழக விவசாயிகளின் உரிமைகள்! தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகா, நீதி தவறும் மத்திய அரசு; பறிக்கப்படும் தமிழக விவசாயிகளின் உரிமைகள்! October 25, 2026 வாடகை வீட்டில் இருக்கிறீர்களா? உரிமையாளர் – வாடகைதாரர் உரிமைகள் என்ன? சட்டம் சொல்வது என்ன? – 6 வாடகை வீட்டில் இருக்கிறீர்களா? உரிமையாளர் – வாடகைதாரர் உரிமைகள் என்ன? சட்டம் சொல்வது என்ன? – 6 October 25, 2026 செமிகண்டக்டர் துறையில் இந்தியா வளர்ச்சி அடைய என்ன செய்ய வேண்டும்? விளக்கமாக பேசிய பிரீத்தி அதானி செமிகண்டக்டர் துறையில் இந்தியா வளர்ச்சி அடைய என்ன செய்ய வேண்டும்? விளக்கமாக பேசிய பிரீத்தி அதானி October 24, 2026 பிரான்சில் மீண்டும் வன்முறை.. போராட்டக்காரர்களை விரட்டியடித்த போலீசார்! கண்ணீர் புகை குண்டு வீச்சு பிரான்சில் மீண்டும் வன்முறை.. போராட்டக்காரர்களை விரட்டியடித்த போலீசார்! கண்ணீர் புகை குண்டு வீச்சு October 24, 2026

See all 601 in TamilNews →

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *