தி.மு.க முதன்மைச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.என்.நேருவின் திருச்சி தில்லை நகரில் உள்ள இல்லத்தில், இன்று காலை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இன்று காலை 3 பொலிரோ வாகனங்களில் வருகை தந்த 10-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார், தில்லை நகரில் உள்ள கே.என்.நேருவின் வீடு மற்றும் அலுவலக வளாகங்களில் சோதனை மேற்கொண்டனர்.

ரெய்டு

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் பல்வேறு பணியிடங்களை நிரப்புவதில் முறைகேடு செய்து, சுமார் ரூ.634 கோடி வரை லஞ்சம் பெற்றதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு மற்றும் அது தொடர்பான வழக்கு விசாரணையின் அடிப்படையில் இந்தச் சோதனை நடத்தப்பட்டு வருவதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. கே.என்.நேருவின் வீட்டில் தொடர்ந்து ஆவணங்கள் மற்றும் சான்றுகள் சரிபார்க்கப்பட்டதாகத் தெரிகிறது.

ஏற்கெனவே, கே.என்.நேரு, அவரது சகோதரர் ரவிச்சந்திரன் ஆகியோருக்குத் தொடர்புடைய 19 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்நிலையில், இன்று சோதனை நடத்தப்படுவது தெரிந்ததும், தில்லை நகரில் உள்ள முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீட்டின் முன்பு திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் என ஏராளமான திமுக-வினர் குவிந்தனர்.

ரெய்டு

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மற்றொரு முன்னாள் அமைச்சரான அன்பில் மகேஸ் பொய்யாமொழி கடந்த இரு தினங்களுக்கு முன்பு கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ரெய்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வரும் 16-ம் தேதி கே.என்.நேருவின் தம்பி ரவிச்சந்திரன் மகனுக்குத் திருமணம் நடைபெற உள்ள நிலையில், இந்தச் சோதனை அரசியல் வட்டாரத்தை தாண்டி அவரது குடும்ப உறவுகளுக்கு மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

More in TamilNews
`நான் இல்லை என்றாலும் தொண்டர்கள் பணியாற்றுவார்கள்; திசை திருப்பவே இந்தச் சோதனை!' – கே.என்.நேரு `நான் இல்லை என்றாலும் தொண்டர்கள் பணியாற்றுவார்கள்; திசை திருப்பவே இந்தச் சோதனை!' – கே.என்.நேரு October 29, 2026 “அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் நான் போட்டியிடுகிறேன்" – சீமான் அறிவிப்பு! October 29, 2026 மருத்துவப் படிப்பு டு குடிமைப் பணி; தென்காசியின் முதல் பெண் ஆட்சியர் – யாரிந்த மோனிகா ராணா ஐ.ஏ.எஸ்? மருத்துவப் படிப்பு டு குடிமைப் பணி; தென்காசியின் முதல் பெண் ஆட்சியர் – யாரிந்த மோனிகா ராணா ஐ.ஏ.எஸ்? October 29, 2026 பிரேசில் தேர்தலில் லுலா வெற்றி! அமெரிக்காவிற்கு தப்பிச்சென்ற போல்சோனாரோ 'நானே அதிபர்' என அறிவிப்பு! பிரேசில் தேர்தலில் லுலா வெற்றி! அமெரிக்காவிற்கு தப்பிச்சென்ற போல்சோனாரோ 'நானே அதிபர்' என அறிவிப்பு! October 29, 2026 பேராசிரியர் கலையரசன் கைது விவகாரம்: தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய்யைச் சந்தித்த கலையரசன் பேராசிரியர் கலையரசன் கைது விவகாரம்: தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய்யைச் சந்தித்த கலையரசன் October 29, 2026 தாய்மாமன் தங்க மோதிர திட்டம்; அரசு மருத்துவமனைகளில் அதிகரிக்கும் அட்மிஷன்- பெட்கள் அதிகரிக்கப்படுமா? தாய்மாமன் தங்க மோதிர திட்டம்; அரசு மருத்துவமனைகளில் அதிகரிக்கும் அட்மிஷன்- பெட்கள் அதிகரிக்கப்படுமா? October 29, 2026

See all 631 in TamilNews →

Latest News
`நான் இல்லை என்றாலும் தொண்டர்கள் பணியாற்றுவார்கள்; திசை திருப்பவே இந்தச் சோதனை!' – கே.என்.நேரு `நான் இல்லை என்றாலும் தொண்டர்கள் பணியாற்றுவார்கள்; திசை திருப்பவே இந்தச் சோதனை!' – கே.என்.நேரு October 29, 2026 “அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் நான் போட்டியிடுகிறேன்" – சீமான் அறிவிப்பு! October 29, 2026 மருத்துவப் படிப்பு டு குடிமைப் பணி; தென்காசியின் முதல் பெண் ஆட்சியர் – யாரிந்த மோனிகா ராணா ஐ.ஏ.எஸ்? மருத்துவப் படிப்பு டு குடிமைப் பணி; தென்காசியின் முதல் பெண் ஆட்சியர் – யாரிந்த மோனிகா ராணா ஐ.ஏ.எஸ்? October 29, 2026 ஜாவா, யெஸ்டி, பிஎஸ்ஏ பைக் உரிமையாளர்களுக்கு குட் நியூஸ்! உதிரிபாகங்கள் வாங்குவது இனி எளிதாகும் ஜாவா, யெஸ்டி, பிஎஸ்ஏ பைக் உரிமையாளர்களுக்கு குட் நியூஸ்! உதிரிபாகங்கள் வாங்குவது இனி எளிதாகும் October 29, 2026 பிரேசில் தேர்தலில் லுலா வெற்றி! அமெரிக்காவிற்கு தப்பிச்சென்ற போல்சோனாரோ 'நானே அதிபர்' என அறிவிப்பு! பிரேசில் தேர்தலில் லுலா வெற்றி! அமெரிக்காவிற்கு தப்பிச்சென்ற போல்சோனாரோ 'நானே அதிபர்' என அறிவிப்பு! October 29, 2026 பேராசிரியர் கலையரசன் கைது விவகாரம்: தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய்யைச் சந்தித்த கலையரசன் பேராசிரியர் கலையரசன் கைது விவகாரம்: தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய்யைச் சந்தித்த கலையரசன் October 29, 2026

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *