முத்துராமலிங்க தேவரின் குருபூஜையை முன்னிட்டு நேற்று மதுரைக்குச் சென்ற முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மாலை 5:30 மணிக்கு மீனாட்சி அம்மனை தரிசனம் செய்வதற்காக கோயிலுக்குள் சென்றார். அவர் சென்ற சில நிமிடங்களிலேயே கோயிலில் மின் வெட்டு ஏற்பட்டது. இதையடுத்து உடனே கோயில் நிர்வாகிகள் ஜெனரேட்டர் மூலமாக மின்சாரம் கொடுத்தனர்.

தொடர்ந்து தரிசனம் முடித்துவிட்டு வெளியே வந்த எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசும்போது, “மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கும்போது திடீரென மின்வெட்டு ஏற்பட்டது. இதையெல்லாம் மீனாட்சி அம்மன் பார்த்தால் சரி. இந்த ஆட்சியில் நிம்மதியாய் வாழ முடியாது, நிச்சயமாய் பக்தர்கள் வாழ முடியாது. மக்கள் நிம்மதியாக இறைவனை பிரார்த்தனைக்கூட செய்ய முடியாது” எனக் கூறிவிட்டு கிளம்பிச் சென்றார்.
இந்த நிலையில், இன்று திருச்சியில் செய்தியாளார்களைச் சந்தித்த அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷிடம் கேள்வி எழுப்பபப்ட்டது. அதற்கு பதிலளித்த அவர், “அவர் வெற்றிபெறவில்லை. அதனால் அவருக்கு நிம்மதி இல்லை. அவர் தொடர்ந்து தோல்வியையே சந்தித்துக்கொண்டிருக்கிறார்.
தான்தான் வெற்றிப்பெற வேண்டும் என நினைக்கிறார். ஆனால், 10 தோல்வியை கடந்து, இன்று 12,13 தாண்டி சென்றுகொண்டே இருக்கிறது. அதனால் அவருக்கு நிம்மதி இல்லாமல் இருப்பது யதார்த்தம். எனவே, அவரின் கருத்தைப் பெரிதாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. மக்கள் இன்றைக்கு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். இந்த ஆட்சியை, முதல்வரைப் பாராட்டுகிறார்கள். அதைதான் நாம் கவனிக்க வேண்டும்.
தற்போதைய சட்ட ஒழுங்குப் பிரச்சினைகள் திடீரென சில மாதங்களில் உருவானவை அல்ல. கடந்த கால திமுக ஆட்சியில் விதைக்கப்பட்டவையே ஆகும். அந்தப் பிரச்சினைகளைத் சரிசெய்யும் நடவடிக்கைகளில் தற்போதைய அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அதேபோல், பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு விலைவாசியைக் கட்டுப்படுத்தத் தேவையான அனைத்து முயற்சிகளையும் தமிழ்நாடு அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது.” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb
முகேஷ் அம்பானி உலகப் பணக்காரர்.. திவாலாகும் அனில் அம்பானி? உலகமே அறிய வேண்டிய அண்ணன் தம்பி பாடம்
November 4, 2026
'பிரஷர் ஏறி நொந்து போயிருக்கேன்!' – 20% கமிஷன் சர்ச்சை; கொதிக்கும் தவெக எம்.எல்.ஏ குழந்தைராணி!
November 4, 2026
"அங்கிள் விஜய் அவர்களே, இது சாதாரண ஆபீஸ் வேலை கிடையாது!" – மு.க. ஸ்டாலின் தாக்கு!
November 4, 2026
இனி இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியில் சீறிப்பாயலாம்.. 4 நாடுகளுக்கு மட்டும் ஈரான் அனுமதி
November 4, 2026
"அலறும் ஈரான்".. இந்தியா உள்பட 4 நாடு கப்பல்களுக்கு மட்டும் ஹார்முஸ் சந்தியில் அனுமதி ஏன்? பின்னணி
November 4, 2026
“ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற தலைப்பில் விதிகளுக்குப் புறம்பாக கல்லூரி நிகழ்வு…" – சு.வெங்கடேசன்
November 4, 2026
KFC Reveals Official Avengers: Doomsday Menu 'Worthy' of Dr. Doom
November 4, 2026
The Budget-Friendly Flashforge Adventurer 5M 3D Printer Drops to a Mere $131 Ahead of Black Friday
November 4, 2026
Watch: PM and Ed Miliband play steel drums in Antigua
November 4, 2026
Photos: Iran marks US embassy takeover with rallies against US, Israel
November 4, 2026
Get a Nintendo Switch 2 Console (USA Model) for $448 During the AliExpress Early Black Friday Sale
November 4, 2026