தனியார் பள்ளிகளுக்கு உரிமம் வழங்கிய வழக்கில் நீதிமன்றத்தில் காவலில் புழல் சிறையில் இருக்கும் அன்பில் மகேஸை விசாரணைக்காக காவலில் எடுக்க போலீஸார் மனு போட்டிருந்தனர். சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த மனு மீதான விசாரணையின் போது அன்பில் மகேஸ் தரப்பில் பல்வேறு வாதங்கள் எடுத்து வைக்கப்பட்டிருந்தது.

சென்னை உயர்நீதிமன்றத்தின் ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணையில் அன்பில் மகேஸ் தரப்பில், ‘கைது செய்யப்படுவதற்குப் பல நாட்களுக்கு முன்பே அன்பில் மகேஷிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் 18-ம் தேதி அவரிடம் எட்டு மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டதுடன், செப்டம்பர் 16-ம் தேதி அவருக்குச் சொந்தமான இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டுள்ளது. விசாரணைக்கும் சோதனைக்கும் முழு ஒத்துழைப்பு அளிக்கப்பட்டுள்ளதால், போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்கக் கூடாது.
பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவது தொடர்பாக நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர் மட்டுமின்றி அதிகாரிகளும் கலந்துகொண்டனர். பள்ளிகளின் அங்கீகாரத்தை ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கும் புதுப்பிக்க வேண்டும் என்ற விதி ஊழலுக்கு வழிவகுக்கும் என்பதால், அதை 20 ஆண்டுகளுக்கு ஒருமுறை என மாற்ற வேண்டும் என்று அமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

அந்தக் கோரிக்கையை அதிகாரிகளிடம் வழங்கி பரிசீலிக்க அமைச்சர் உத்தரவிட்டார். அதன்பிறகு பல்வேறு துறைகளும் ஆலோசித்தே 20 ஆண்டுகளுக்கு ஒருமுறை அங்கீகாரத்தைப் புதுப்பிக்கும் வகையில் அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால், தற்போது இதையே ஊழல் எனக் குற்றம்சாட்டுகின்றனர். அங்கீகாரம் புதுப்பிக்கும் விதியை மாற்றக் கோரியவர்களே தற்போது சாட்சிகளாக உள்ளனர். சட்டப்படி பார்த்தால், அவர்களைத்தான் கைது செய்திருக்க வேண்டும்; அவர்கள் சிறையில் இருந்திருக்க வேண்டும். அவர்களின் கூற்றுப்படியே பார்த்தாலும், அவர்கள்தான் லஞ்சம் கொடுத்தவர்கள். கூட்டாக எடுக்கப்பட்ட முடிவில் என் மீது மட்டும் வழக்குப் பதிவு செய்வது ஏன்? நான் பணம் கேட்டதாகவோ, வாங்கியதாகவோ ஏதாவது ஆதாரம் இருக்கிறதா? மேலும் சிறையில் முதல் வகுப்பில் உணவும் முறையாக வழங்கப்படவில்லை. எனவே வீட்டு சாப்பாடுக்கு அனுமதி வழங்க வேண்டும்’ என வாதிடப்பட்டிருக்கிறது.
அரசுத் தரப்பில், ‘காவல்துறையினர் அன்பில் மகேஸிடம் அவரின் பினாமிகள் மற்றும் நெருக்கமானவர்கள் குறித்து விசாரிக்க வேண்டியுள்ளது. அதனால் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும்’ என்றனர்.
வாதங்களை கேட்ட நீதிபதி நவம்பர் 2 ஆம் தேதி தீர்ப்பை கூறுவதாக சொல்லியிருக்கிறார்.இதைத் தொடந்து அன்பிலை காவல்துறையினர் மீண்டும் புழல் சிறைக்கே அழைத்துச் சென்றனர். வழக்கறிஞர்களோடு பேசி சிரித்துக் கொண்டே புழலுக்கு வண்டி ஏறினார் அன்பில்.
நட்சத்திர விடுதியில் பிரம்மாண்ட திருமணம்.. ஒரே மேடையில் முதல்வர் விஜய் & த்ரிஷா!
November 5, 2026
ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ்.. GVM இயக்கத்தில் நடிக்கும் CM விஜய்!
November 5, 2026
'ராமாயணா' திரைப்படம் குறித்து இந்திய, சர்வதேச விமர்சகர்கள் சொல்வது என்ன?
November 5, 2026
நம்பவே முடியாத காட்சி.. உடல் முழுக்க டாலர் நோட்டுகளுடன் சாலையில் ஓடிய ஆடு! அடுத்து நடந்தது என்ன?
November 5, 2026
தேர்தல் தோல்விக்கு பிறகு உலகை தனது நடவடிக்கைகளால் திரும்பி பார்க்க வைக்க டிரம்ப் என்ன செய்யக்கூடும்?
November 5, 2026
'ஆந்திராவில் கரை ஒதுங்கிய 8 உடல்கள்': கலங்கும் காசிமேடு மீனவ குடும்பங்கள் – தேடுதல் பணியில் தாமதம் ஏற்பட்டது ஏன்?
November 5, 2026
BBC Inside Science
November 5, 2026
‘It Gets Worse’ Review: Paramount+’s Hilariously Observed, Affectionately Drawn Comedy About the Agony and Ecstasy of Early Adulthood
November 5, 2026
EA Killed Mass Effect But Is Still Trying To Make Money On It
November 5, 2026
Dark Slope to Open New Virtual Production Stage in Vancouver (Exclusive)
November 5, 2026
Lockheed Martin’s Mk21A Reentry Vehicle Completed Maiden Test Flight
November 5, 2026
Philo Adds Bravo to Its Streaming Lineup After Years of Subscriber Requests
November 5, 2026