அரசுப் பணிகளில் நேரடி நியமனத்திற்கான வயது உச்ச வரம்பை உயர்த்த முதல்வர் விஜய் உத்தரவிட்டிருக்கிறார்.

போட்டித் தேர்வுகளின் கோரிக்கையை ஏற்று, அரசுப் பணிகளில் நேரடி நியமனத்திற்கான வயது உச்சவரம்பினை 5 ஆண்டுகள் உயர்த்தி தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அவர்கள் உத்தரவிட்டிருக்கிறார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த போட்டித் தேர்வர்கள் மற்றும் இளைஞர்கள் பெருமளவில் பயனடைவார்கள் என்று அரசு அறிவித்துள்ளது.

டி.என்.பி.எஸ்.சி
டி.என்.பி.எஸ்.சி

யாருக்கு என்ன வயது உயர்வு?

மேல்வரம்பு வயது உயர்வு இடஒதுக்கீடு பிரிவினருக்கு (BC, BCM, MBC & DNC, SC, ST, ஆதரவற்ற கைம்பெண்கள்) ஏற்கனவே உள்ள வயது சலுகையோடு கூடுதலாக அமையும்.

1. குரூப் – I பதவிகள்:

– பொதுப் பிரிவினர்: 32-ல் இருந்து 37 ஆக உயர்வு

– ஒதுக்கீட்டுப் பிரிவினர் (BC, MBC, SC, ST): 37-ல் இருந்து 42 ஆக உயர்வு

– மாற்றுத்திறனாளிகள் பொதுப் பிரிவு: 42-ல் இருந்து 47

– மாற்றுத்திறனாளிகள் ஒதுக்கீட்டுப் பிரிவு: 47-ல் இருந்து 52 வரை

2. குரூப் – II & II-A:

– பொதுப் பிரிவு: 30-ல் இருந்து 35

– ஒதுக்கீட்டுப் பிரிவு: வயது உச்ச வரம்பில்லை (ஏற்கனவே)

– மாற்றுத்திறனாளிகள் பொது: 40-ல் இருந்து 45

– மாற்றுத்திறனாளிகள் ஒதுக்கீடு: வயது உச்ச வரம்பில்லை

TNPSC
TNPSC

3. குரூப் – IV:

– பொதுப் பிரிவு: 30-ல் இருந்து 35

– பொதுப் பிரிவில் பட்டதாரி (Having higher qualification): 32-ல் இருந்து 37

– BC, BCM, MBC & DNC: 32-ல் இருந்து 37 / 40-ல் இருந்து 45

– SC, ST மற்றும் ஆதரவற்ற விதவை: 35-ல் இருந்து 40 / 45-ல் இருந்து 50 வரை!

எப்போது முதல் அமல்?

இந்த வயது உச்சவரம்பு உயர்வு இன்று (30.10.2026) முதல் அடுத்த 5 ஆண்டுகள் வரை நடைமுறையில் இருக்கும் என அரசு அறிவித்துள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

More in TamilNews
வேலைக்கு நடுவே திடீரென மயங்கி விழுந்த இளம்பெண் – அறிகுறி இன்றி வரும் இந்த பாதிப்பை தடுப்பது எப்படி? வேலைக்கு நடுவே திடீரென மயங்கி விழுந்த இளம்பெண் – அறிகுறி இன்றி வரும் இந்த பாதிப்பை தடுப்பது எப்படி? October 31, 2026 பாலியல் தாக்குதலுக்கு ஆளான நிறைமாத கர்ப்பிணி நீதிக்காக போராடிய கதை – 15ஆம் நூற்றாண்டில் என்ன நடந்தது? பாலியல் தாக்குதலுக்கு ஆளான நிறைமாத கர்ப்பிணி நீதிக்காக போராடிய கதை – 15ஆம் நூற்றாண்டில் என்ன நடந்தது? October 31, 2026 இந்தியாவை வீழ்த்திய பாகிஸ்தானை அந்நாட்டு பிரதமர் வாழ்த்தியதற்கு கிரிக்கெட் ரசிகர்கள் கிண்டல் இந்தியாவை வீழ்த்திய பாகிஸ்தானை அந்நாட்டு பிரதமர் வாழ்த்தியதற்கு கிரிக்கெட் ரசிகர்கள் கிண்டல் October 31, 2026 அமெரிக்க தேர்தலில் டிரம்பின் குடியரசுக் கட்சியின் வெற்றியும் தோல்வியும் இந்தியாவை எவ்வாறு பாதிக்கும்? அமெரிக்க தேர்தலில் டிரம்பின் குடியரசுக் கட்சியின் வெற்றியும் தோல்வியும் இந்தியாவை எவ்வாறு பாதிக்கும்? October 31, 2026 '80 பாட்டில் ரத்தம் ஏற்றப்பட்டது' – குண்டடிபட்ட இந்திரா காந்தியை காப்பாற்ற நடந்த கடைசி நேர முயற்சிகள் '80 பாட்டில் ரத்தம் ஏற்றப்பட்டது' – குண்டடிபட்ட இந்திரா காந்தியை காப்பாற்ற நடந்த கடைசி நேர முயற்சிகள் October 31, 2026 வங்கக்கடலில் மீண்டும் ஒரு புயல் உருவாகிறது: எங்கு நோக்கி நகரும்? தமிழ்நாட்டிற்கு கனமழை எச்சரிக்கை வங்கக்கடலில் மீண்டும் ஒரு புயல் உருவாகிறது: எங்கு நோக்கி நகரும்? தமிழ்நாட்டிற்கு கனமழை எச்சரிக்கை October 31, 2026

See all 570 in TamilNews →

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *