அ.தி.மு.கவிலிருந்து முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி.வேலுமணியை நீக்க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்கான அறிவிப்பு விரைவில் வரலாம் என்றும் சொல்லப்படுகிறது. நடப்பது என்ன?
2026 தேர்தல் முடிவுகள் அ.தி.மு.க-வுக்குள் மிகப்பெரிய கலகத்தை உண்டாக்கியது. ஏற்கெனவே, சசிகலா, டி.டி.வி.தினகரன், ஓ.பி.எஸ் உள்ளிட்டவர்களால் கட்சியில் பிளவு உண்டானதைப்போல, எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் தலைமையில் 25 எம்.எல்.ஏ-க்கள் போர்க்கொடி உயர்த்தினர். சட்டமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போதும், எடப்பாடி பழனிசாமியின் முடிவுக்கு எதிராக, த.வெ.க அரசை ஆதரித்து வாக்களித்தனர். தொடர்ந்து, விஜயபாஸ்கர் உள்ளிட்ட ஆறு எம்.எல்.ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.கவில் இணைந்தனர். எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டவர்கள் மன்னிப்புக் கடிதம் கொடுத்து மீண்டும் இணைந்தாலும் கட்சியில் அவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்கப்படவில்லை. உதாரணமாக, அவர்கள் வகித்த மாவட்டச் செயலாளர் பதவியைப் பறித்த எடப்பாடி பழனிசாமி மீண்டும் அதை வழங்கவில்லை. இதனால், அதிருப்தியில் இருந்தவர்கள் கட்சி நிகழ்வுகளில் இருந்து ஒதுங்கி இருந்ததோடு, அவ்வப்போது எடப்பாடி பழனிசாமிக்கு கடிதங்களையும் எழுதி வந்தனர்.
சி.வி.சண்முகம் வெளிப்படையாகவே எடப்பாடி பழனிசாமியைக் காட்டமாக விமர்சித்து வந்தார்.
இந்தச் சூழலில் தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதும் இந்த விவகாரம் கொஞ்சம் அடங்கியது. ஆனால், தேர்தல் முடிவுகள் வெளியாகி அ.தி.மு.க மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்ட பிறகு மீண்டும் களத்தில் இறங்கியது வேலுமணி டீம். அ.தி.மு.க எம்.எல்.ஏக்களோடு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.ஆனால், சில நாள்கள் கழித்து ‘அ.தி.மு.க எங்கள் இயக்கம். அதை விட்டு நாங்கள் செல்லமாட்டோம், எங்கள் பக்கமும் தவறு இருக்கலாம்” என வேலுமணியும் சண்முகம் கொஞ்சம் இறங்கி வந்து கருத்துத் தெரிவித்தனர். ஆனால் அப்போதே சி.வி.சண்முகத்தின் ஆதரவாளர்கள் நூறு பேரை கட்சியிலிருந்து நீக்கியதோடு, சமீபத்தில் வேலுமணியின் ஆதரவாளர்கள்பலரை கட்சியிலிருந்து நீக்கியிருக்கிறார். ஆனால், இன்னும் சில நாள்களில் அவர்கள் இருவரையுமே கட்சியை விட்டே நீக்க எடப்பாடி பழனிசாமி முடிவு செய்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து விபரமறிந்த வட்டாரத்தில் பேசும்போது, “தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் மூன்றாவது இடத்துக்கு வந்ததை எங்கள் பொதுச் செயலாளரால் கொஞ்சம்கூட ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இரண்டு தொகுதியிலும் வேலுமணி & சண்முகம் தரப்பு உள்ளடி வேலைகள் பார்த்ததாக அவர் காதுகளுக்கு செய்திகள் போகவே இன்னும் கடுப்பாகிவிட்டார். அதிலும், தாராபுரத்தில் நடந்த சம்பவங்கள் அவருக்கு இன்னும் வேதனையைக் கொடுத்துவிட்டது. வேலுமணியும் சண்முகமும் வெளியில் இறங்கிவந்து பேசுவதுபோல் காட்டிக்கொண்டாலும், கட்சியில் இருக்கும் எம்.எல்.ஏக்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

மூன்றில் இரண்டு பங்கு எம்.எல்.ஏக்களோடு த.வெ.க அரசுக்கு ஆதரவாக நிற்கவும் முடிவு செய்துவிட்டார்கள். இந்தச் செய்திகள் எடப்பாடியாரின் காதுக்குப் போகவே, ,’இவர்களை இப்படியே விட்டால் கட்சியை அழித்துவிடுவார்கள், பேசாமல் கட்சியை விட்டு நீக்கிடலாமா?’ என நெருக்கமானவர்களிடம் ஆலோசனை நடத்தினார். ஆனால், அப்படிச் செய்தால், எம்.எல்.ஏ பதவியோடு அவர்கள் த.வெ.கவுக்குப் போய்விடுவார்கள், கட்சியிலிருந்தும் பலரை அழைத்துச் சென்றுவிடுவார்கள் என ஒருசிலர் சொல்லவும் கொஞ்சம் பொறுமையாக இருக்கிறார். ஆனால், அவர் ஒரு விஷயத்தில் இறுதி முடிவை எடுக்காமல், வெளியில் அதுகுறித்துப் பேசமாட்டார். மனதளவில் இருவரையும் நீக்கத் தயாராகிவிட்டார். விரைவில் அதற்கான அறிவிப்புகள் வெளியில் வரலாம்” என்கிறார்கள்.
"தமிழக அரசு நிலைப்பாட்டில் மாற்றமில்லை தானே.." கரூர் கூட்ட நெரிசல் வழக்கு.. உச்ச நீதிமன்றம் கேள்வி!
November 4, 2026
ஞானேஷ் குமாருக்கு சிக்கல்.. ரூ. 2 கோடி லஞ்சம்.. மலேசிய இன்ஜினியர் தற்கொலை.. தீவிரமடையும் விசாரணை
November 4, 2026
ஜென்ம நட்சத்திர பலன்கள் – நவம்பர் 5 2026 வியாழக்கிழமை
November 4, 2026
இன்றைய பஞ்சாங்கம் – நவம்பர் 5 2026 வியாழக்கிழமை
November 4, 2026
"ஆம்னி பஸ்கள் தீபாவளிக்கு அதிக கட்டணம் வசூலித்தால்.. பண்டிகை முடிந்து நடவடிக்கை!" அமைச்சர் வார்னிங்
November 4, 2026
டிரம்ப்பிற்கு எதிராக திரும்பும் துணை அதிபர் வேன்ஸ்! "அவரது" முடிவுகளே தோல்விக்கு காரணம் என பாய்ச்சல்
November 4, 2026
The Best Airbnbs in Colorado, Including a Ski-In Chalet and a Cliffside Cabin
November 4, 2026
Qualcomm is betting big on data centers as smartphone sales sink
November 4, 2026
Donna Kelce On Staying Married: she stayed together for the kids; and juggled being a major breadwinner
November 4, 2026
10 Magical Christmas Traditions Around the World
November 4, 2026
This Train Offers a Front-Row Seat to One of Colorado’s Greatest Natural Wonders
November 4, 2026
WWE Crown Jewel 2026: Guide lists timings and streaming; Sami Zayn vs Roman Reigns headlines
November 4, 2026