சட்டம் உங்கள் கையில்!
“நீயெல்லாம் இன்னும் எதுக்கு உயிரோட இருக்க?” என்று கோபத்திலோ, விளையாட்டாகவோ யாரிடமாவது சொல்லியிருக்கலாம். ஆனால், இப்படிச் சொல்வதெல்லாம் தற்கொலைக்குத் தூண்டிய குற்றமாகிவிடுமா? ஒருவர் தற்கொலை செய்துகொண்டால், அவருடன் தகராறில் ஈடுபட்டவர்களெல்லாம் குற்றவாளிகளாகிவிடுவார்களா?
இதற்கு சட்டம் என்ன சொல்கிறது?
எப்போது குற்றம்?
பாரதிய நியாய சன்ஹிதா (BNS), பிரிவு 45-ன்படி, ஒருவரை ஒரு செயலைச் செய்யத் தூண்டுவது, அந்தச் செயலைச் செய்வதற்கான குற்றச் சதியில் ஈடுபட்டு, அதன் தொடர்ச்சியாகச் சம்பந்தப்பட்ட செயல் அல்லது சட்டவிரோதமான செயல் தவிர்ப்பு நிகழ்வது, அல்லது அந்தச் செயலைச் செய்யத் திட்டமிட்டு உதவுவது ஆகியவை குற்றத்துக்குத் தூண்டுதலாக அமையலாம்.
அதன் தொடர்ச்சியாகச் சம்பந்தப்பட்ட செயல் அல்லது சட்டவிரோதமான செயல் தவிர்ப்பு நிகழ்வது, அல்லது அந்தச் செயலைச் செய்யத் திட்டமிட்டு உதவுவது ஆகியவை குற்றத்துக்குத் தூண்டுதலாக அமையலாம்.
ஒருவர் தற்கொலை செய்துகொண்ட நிலையில், அவரைத் தற்கொலைக்குத் தூண்டிய குற்றம் நிரூபிக்கப்பட்டால், BNS பிரிவு 108-ன்படி 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம். குழந்தை, மனநலம் குன்றிய நபர் மனக்குழப்ப நிலையில் உள்ளவர் அல்லது போதையில் உள்ளவர் தற்கொலை செய்துகொண்டால், அவரைத் தற்கொலைக்குத் தூண்டியவருக்கு BNS பிரிவு 107-ன்படி மரண தண்டனை, ஆயுள் சிறைத்தண்டனை அல்லது 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.
எதெல்லாம் குற்றமாகும்?
தொடர்ந்து மிரட்டுவது, திட்டமிட்டு அவமானப்படுத்துவது, கடுமையாகத் துன்புறுத்துவது போன்ற செயல்கள், அவற்றின் தன்மை மற்றும் பின்னணியைப் பொறுத்து, தற்கொலைக்குத் தூண்டிய குற்றமாக அமையலாம். ஆனால், காதலை ஏற்க மறுப்பது, திருமணத்துக்கு மறுப்பது அல்லது குடும்பத் தகராறில் கோபமாகப் பேசுவது மட்டுமே தானாகவே இக்குற்றத்தை நிரூபிக்காது. குற்றம் சாட்டப்பட்டவரின் செயல்கள், அவரது நோக்கம், சம்பவங்களின் பின்னணி மற்றும் தற்கொலைக்குத் தூண்டியதற்கான தொடர்பு ஆகியவற்றை நீதிமன்றம் ஆராயும்.

உச்சநீதிமன்றம் சொல்வது என்ன?
State of West Bengal v. Orilal Jaiswal (1993) வழக்கில், தற்கொலைக்குத் தூண்டிய குற்றச்சாட்டை மதிப்பிடும்போது, சம்பவத்தின் பின்னணி, பாதிக்கப்பட்டவருக்கு இழைக்கப்பட்ட கொடுமை மற்றும் கிடைக்கும் ஆதாரங்களை நீதிமன்றம் மிகுந்த கவனத்துடன் ஆராய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் வலியுறுத்தியது.
சாதாரணமாக ஏற்படக்கூடிய கருத்து வேறுபாடுகள் அல்லது தகராறுகளைத் தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு ஒருவர் அதீத உணர்ச்சிவசப்படும் மனநிலையில் (Hyper-sensitivity) இருந்தாரா என்பதையும் பரிசீலிக்கலாம். எனினும், இதைக் காரணம் காட்டி உண்மையான துன்புறுத்தலையோ கொடுமையையோ புறக்கணிக்க முடியாது..
Geo Varghese v. State of Rajasthan (2021) வழக்கில், மாணவனை ஆசிரியர் ஒழுங்கு நடவடிக்கைக்காகக் கண்டித்தது மட்டுமே தற்கொலைக்குத் தூண்டிய குற்றத்தை நிரூபிக்கப் போதாது என்று உச்ச நீதிமன்றம் விளக்கியது. குற்றம் சாட்டப்பட்டவரின் செயல்கள், அவற்றின் பின்னணி மற்றும் தற்கொலைக்குத் தூண்டும் நோக்கத்துக்கான ஆதாரங்கள் ஆகியவற்றை ஆராய வேண்டும் என்றும் குறிப்பிட்டது.
அந்த வழக்கின் சூழ்நிலைகளின் அடிப்படையில், ஆசிரியருக்கு எதிரான முதல் தகவல் அறிக்கையை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.
ஆதாரம் என்ன?
தற்கொலைக் கடிதத்தில் ஒருவரின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தாலும், அதுவே அவரைக் குற்றவாளியாக்கிவிடாது. வாட்ஸ்அப் செய்திகள், மின்னஞ்சல்கள், மிரட்டல் பதிவுகள், சாட்சிகளின் வாக்குமூலங்கள், ஏற்கெனவே அளித்த புகார்கள் உள்ளிட்டவை ஆதாரங்களாகப் பரிசீலிக்கப்படலாம். அவற்றின் நம்பகத்தன்மை, பிற ஆதாரங்களுடனான தொடர்பு மற்றும் குற்றச்சாட்டை நிரூபிக்கும் தன்மை ஆகியவற்றை நீதிமன்றம் மதிப்பிடும்
அரசியலமைப்புச் சட்டம் சரத்து 21 உயிர் மற்றும் தனிநபர் சுதந்திரத்தைப் பாதுகாக்கிறது. Gian Kaur v. State of Punjab (1996) வழக்கில், உயிர் வாழும் உரிமையில் தற்கொலை செய்துகொள்ளும் உரிமை அடங்காது என்று உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியது.

அதே நேரத்தில், தற்கொலை முயற்சியில் ஈடுபடும் நபர்களைத் தண்டிப்பது மட்டுமே அணுகுமுறையாக இருக்கக் கூடாது. மனநலப் பாதுகாப்புச் சட்டம், 2017-ன் பிரிவு 115-ன்படி, தற்கொலை முயற்சியில் ஈடுபட்டவர் கடுமையான மன அழுத்தத்தில் இருந்ததாகக் கருதப்படும்; அவருக்குப் பராமரிப்பும் மறுவாழ்வு உதவியும் வழங்க அரசுக்கு கடமை உள்ளது
“தற்கொலை எந்தப் பிரச்னைக்கும் தீர்வல்ல; பேசித் தீர்க்க முடியாத பிரச்னையும் இல்லை! இன்று தாங்க முடியாததாகத் தோன்றும் வலியும் வேதனையும், நாளை மாறலாம். மனதில் இருப்பதை நம்பிக்கையான ஒருவரிடம் பகிருங்கள்; தேவைப்பட்டால் மனநல உதவியை நாடுங்கள். உதவி கேட்பது பலவீனம் அல்ல; அது உங்களைப் பாதுகாத்துக்கொள்ளும் துணிச்சல். உங்கள் வாழ்க்கை மதிப்புமிக்கது!”
மன அழுத்தத்தால் பாதிக்கப்படுபவர்கள் அல்லது மனநல ஆலோசனை தேவைப்படுபவர்கள், அரசின் இலவச 24 மணி நேர Tele-MANAS சேவையை 14416 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம். உடனடி ஆபத்து ஏற்பட்டால் 112 என்ற அவசர உதவி எண்ணை அழைக்கலாம்.
"தமிழக அரசு நிலைப்பாட்டில் மாற்றமில்லை தானே.." கரூர் கூட்ட நெரிசல் வழக்கு.. உச்ச நீதிமன்றம் கேள்வி!
November 4, 2026
ஞானேஷ் குமாருக்கு சிக்கல்.. ரூ. 2 கோடி லஞ்சம்.. மலேசிய இன்ஜினியர் தற்கொலை.. தீவிரமடையும் விசாரணை
November 4, 2026
ஜென்ம நட்சத்திர பலன்கள் – நவம்பர் 5 2026 வியாழக்கிழமை
November 4, 2026
இன்றைய பஞ்சாங்கம் – நவம்பர் 5 2026 வியாழக்கிழமை
November 4, 2026
"ஆம்னி பஸ்கள் தீபாவளிக்கு அதிக கட்டணம் வசூலித்தால்.. பண்டிகை முடிந்து நடவடிக்கை!" அமைச்சர் வார்னிங்
November 4, 2026
டிரம்ப்பிற்கு எதிராக திரும்பும் துணை அதிபர் வேன்ஸ்! "அவரது" முடிவுகளே தோல்விக்கு காரணம் என பாய்ச்சல்
November 4, 2026
The Best Airbnbs in Colorado, Including a Ski-In Chalet and a Cliffside Cabin
November 4, 2026
Qualcomm is betting big on data centers as smartphone sales sink
November 4, 2026
10 Magical Christmas Traditions Around the World
November 4, 2026
This Train Offers a Front-Row Seat to One of Colorado’s Greatest Natural Wonders
November 4, 2026
17 better ways Elon Musk could have wasted $446 million
November 4, 2026
WoW: Forever’s First New Legendary Weapon Revealed
November 4, 2026