மகாராஷ்டிராவில் கடந்த 2022ம் ஆண்டு சிவசேனா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் இரண்டாக உடைந்தது. இதற்கு தற்போதைய முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ்தான் காரணம் என்று பரவலாக பேசப்பட்டது. கட்சி இரண்டாக உடைந்ததால் உத்தவ் தாக்கரேயிடமிருந்து சிவசேனா பறிபோனது. இதே போன்று மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கட்சியை தங்களது கூட்டணியில் சேர்ப்பதாக முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உறுதியளித்துவிட்டு கடைசி நேரத்தில் கைவிட்டுவிட்டார். இதனால் உத்தவ் தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரே ஆகிய இரண்டு பேரும் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மீது கடும் அதிருப்தியில் இருக்கின்றனர்.
இந்நிலையில் புதிய திருப்பமாக மும்பை தாதரில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் முதல்வர் தேவேந்திர பட்னாவிசுடன் உத்தவ் தாக்கரேயும், ராஜ் தாக்கரே ஒன்றாக கலந்து கொண்டது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மும்பையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில், மூவரும் தனித்தனியாக உரையாடும் காணொலி வைரலாகி இருக்கிறது.

இதில் தேவேந்திர பட்னாவிஸ், உத்தவ் தாக்கரேயுடனான பழைய உறவு குறித்து பேசுகையில், 2019 க்கு முன்பு உத்தவ் தாக்கரே அழைத்த போதெல்லாம் பதிலளித்திருக்கிறேன்.
ஆனால் அன்றிலிருந்து உத்தவ் தாக்கரேயின் அழைப்பிற்காக காத்திருக்கிறேன். 2019 வரை, உத்தவ்-ஜி என்னை அழைத்த போதெல்லாம், நான் சென்றேன். 2019 க்குப் பிறகு, அவர் அழைக்கவில்லை. நான் அவரது அழைப்புக்காக காத்திருக்கிறேன்,” என்று பட்னாவிஸ் கூறினார். தேவேந்திர பட்னாவிசின் இந்த பேச்சு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இதில் பேசிய ராஜ் தாக்கரே, சில தளங்கள் அரசியல் வேறுபாடுகளைக் கடந்து தலைவர்கள் கலை மற்றும் கலாச்சாரத்திற்காக ஒன்று சேர அனுமதிக்கின்றன என்று தெரிவித்தார். ஆனால் ஒரே மேடையில் மூன்று பேரும் ஒன்றாக கலந்துகொண்டதில் எந்த வித அரசியலும் இல்லை என்று ராஜ் தாக்கரேயும், உத்தவ் தாக்கரேயும் தெரிவித்துள்ளனர்.
இது கட்சி எல்லைக்கு அப்பாற்பட்டது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். சமீப காலமாக சிவசேனா(ஷிண்டே) மற்றும் பா.ஜ.க இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்துள்ளது. சட்டமேலவை தேர்தல் மற்றும் மராத்தா இட ஒதுக்கீடு ஆர்வலர் ஜராங்கே பாட்டீலுக்கு ரூ.500 கோடி கொடுத்தது தொடர்பான புகாரில் சிவசேனாவும், பா.ஜ.கவும் மோதிக்கொண்டுள்ளன. இந்த சூழ்நிலையில் பட்னாவிஸ், உத்தவ் தாக்கரே மற்றும் ராஜ்தாக்கரேயுடன் ஒரே மேடை நிகழ்ச்சியில் கலந்து கொண்டது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
சமீபத்தில் நடந்த சட்டமேலவை தேர்தலில் சிவசேனா சரியாக வேலை செய்யவில்லை என்று பா.ஜ.க தெரிவித்துள்ளது. இத்தேர்தலில் மொத்தமுள்ள 5 இடங்களில் பா.ஜ.க கூட்டணி வெறும் இரண்டு இடங்களில் மட்டும் வெற்றி பெற்றது. இத்தேர்தலில் புனே தொகுதியில் சிவசேனா பா.ஜ.க வேட்பாளருக்கு எதிராக சுயேச்சை வேட்பாளருக்கு ஆதரவு கொடுத்தது. இதனால் இதில் பா.ஜ.க வேட்பாளர் தோல்வி அடைய நேரிட்டது. இதே போன்று பா.ஜ.க மற்றும் சிவசேனா இடையே தொகுதி பங்கீடு தொடர்பாக உறுதியான முடிவு எட்டப்படாததால் இரு கட்சிகளும் ஒருவருக்கு ஒருவர் வேலை செய்வதை தவிர்த்தனர்.
இது போன்ற காரணங்களால் உத்தவ் தாக்கரேயுடன் தேவேந்திர பட்னாவிஸ் இணக்கம் காட்டி வருவதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர். சிவசேனாவின் தேர்தல் சின்னம் தொடர்பான வழக்கு இன்னும் சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருக்கிறது. கூட்டணி விவகாரத்தில் பா.ஜ.க பெரியண்ணன் போன்று தன்னிச்சையாக முடிவு எடுப்பதாக சிவசேனா தெரிவித்துள்ளது.
ஜெகன் மோகன் ரெட்டிக்கு வந்ததே கோபம்.. 90% இடங்களில் படுதோல்வி! உச்சக்கட்ட கோபத்தில் சொன்ன பாயிண்டு
November 6, 2026
எம்மி விருது விழாவில் விஜய் சேதுபதி.. முதல் இந்திய நடிகர் என்ற வரலாறு! இந்த சான்ஸ் கிடைத்தது எப்படி?
November 6, 2026
பெரியார் அறிவுலகத்துக்கு புத்தகம் வாங்கியதில் மிகப்பெரிய ஊழல்? AI மூலம் தாறுமாறாக எழுதப்பட்ட நூல்கள்
November 6, 2026
அமெரிக்க இடைக்காலத் தேர்தல் முடிவுகள் உலகின் பிற பகுதிகளில் ஏற்படுத்தக் கூடிய தாக்கம் என்ன?
November 6, 2026
அரபு கட்சிகள் கொடுத்த ட்விஸ்ட்.. கையை விட்டு போகும் பிரதமர் பதவி.. உச்சக்கட்ட டென்ஷனில் நெதன்யாகு
November 6, 2026
லாஸ் ஏஞ்சலிஸ் மேயர் தேர்தலில் கேரன் பாஸை வீழ்த்தி இந்திய குடியேறி நித்யா ராமன் வெற்றி
November 6, 2026
Rocco’s Black Friday Sale: Smart Fridges Hit Their Lowest Prices of 2026
November 6, 2026
Early Black Friday Mattress Deals: Get Up to 35% Off WIRED-Tested Favorites
November 6, 2026
Free Chinese AI Models Are Getting Scary Good at Hacking
November 6, 2026
It’s Official: Alex Cooper Moves to CAA
November 6, 2026
George R.R. Martin Tapped for Lifetime Achievement Nod at Infinity Festival (Exclusive)
November 6, 2026
‘The Bachelor’ Returns, ‘The Rookie’ Moves as ABC Sets Midseason Schedule
November 6, 2026