வேலூரைத் தலைமையிடமாகக் கொண்டு 1917-ம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வருகிறது வட ஆற்காடு மாவட்ட வன்னிய குல சத்திரிய சங்கம். அரசியல் சார்பில்லாமல், வன்னியர் சமூக மக்கள் மற்றும் மாணவர்களின் நலன்களைக் காப்பதற்காகக் கட்டமைக்கப்பட்ட இந்தச் சங்கத்துக்குச் சுமார் ரூ.400 கோடி மதிப்பிலான சொத்துகள் இருக்கின்றன. தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டத்தின்கீழ் சங்கம் வழிநடத்தப்பட்டு, வருவாய் – செலவினங்கள் கையாளப்படுகின்றன. சங்கத்தின் 20-வது தலைவராக துரிஞ்சிகுப்பம் மணிலிங்கமும், செயலாளராக சுப்பிரமணியனும் இருக்கிறார்கள்.
பொய்க்கணக்கு… போலி ரசீது!
இந்த நிலையில்தான், “எங்கள் சமூக முன்னோர்கள் பாடுபட்டு, உயர்ந்த லட்சியத்துடன் இந்தச் சங்கத்தைக் கட்டமைத்தார்கள். ஆனால், சங்கத்தை இன்று நிர்வகிக்கக்கூடிய தலைமைப் பொறுப்பாளர்களால், சங்கத்தின் கோடிக்கணக்கான சொத்துகள் கபளீகரம் செய்யப்படுகின்றன. பொய்க் கணக்கு எழுதி, போலி ரசீதுகள் மூலமாகச் சங்க நிதியிலிருந்து பல கோடி ரூபாயைக் கையாடல் செய்திருக்கின்றனர்” என்று குற்றச்சாட்டுகளை அடுக்கி, சங்கத்தின் பொதுக்குழு உறுப்பினர்கள் 89 பேரின் கையொப்பமிட்ட புகார் கடிதம், கடந்த ஆண்டு முதலமைச்சரின் தனிப்பிரிவு தொடங்கி, பதிவுத்துறைத் தலைவர், வேலூர் மாவட்ட ஆட்சியர் வரை அனுப்பப்பட்டதால் சர்ச்சை வெடித்தது.

போலீஸ் பாதுகாப்பில் பொதுக்குழு
அன்று முதல், சங்கத்தின் தலைமைப் பொறுப்பாளர்களுக்கும், புகாரளித்த பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது. இந்த நிலையில், அக்டோபர் 25-ம் தேதி, வேலூர் கோட்டைவழிச் சாலையிலுள்ள வன்னிய குல சத்திரிய சங்க அலுவலகத்தில் பொதுக்குழு கூடியது. அப்போது, ‘சங்கத்தின் சட்ட விதிகளுக்குப் புறம்பாகக் கூட்டம் நடைபெறுகிறது’ என்று குற்றம்சாட்டி, எதிர்ப்புக் குழுவைச் சேர்ந்த பொதுக்குழு உறுப்பினர்கள் சிலர் அலுவலகத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீஸார் அவர்களை வலுக்கட்டாயமாகக் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அதைத்தொடர்ந்து, போலீஸ் பாதுகாப்பில் பொதுக்குழுக் கூட்டம் நடத்தி முடிக்கப்பட்டது.
“இவர்கள் கூட்டிய பொதுக்குழு சட்ட விதிகளுக்குப் புறம்பானது. தலைமைப் பொறுப்பாளர்களின் பதவிக்காலம் முடிவடைந்துவிட்டது. ஆனாலும், அவர்கள் பதவிகளிலிருந்து விலகாமல் தொடர்கின்றனர். இவர்களுக்கு எதிராகத்தான் சதி, முறைகேடு, தொடர் நிதியிழப்பு போன்ற புகார்கள் பதிவுத்துறையில் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இந்தப் புகார்களுக்கு இதுவரை தகுந்த பதில்களை அளிக்காமல், சங்கத்தைச் சீர்குலைக்கும் நோக்கத்துடன் அவர்களுக்குத் தகுந்தாற்போல சில தீர்மானங்களையும் ஒருதலைப்பட்சமாக நிறைவேற்றியிருக்கின்றனர். எனவே, பாரம்பர்யமிக்க வட ஆற்காடு மாவட்ட வன்னிய குல சத்திரிய சங்கத்துக்குத் தனி அலுவலரை நியமிக்கப் பதிவுத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று எதிர்ப்புக் குழுவினர் குரல் எழுப்பியிருப்பதால், சங்க விவகாரத்தின் சர்ச்சை மீண்டும் பற்றியெரியத் தொடங்கியிருக்கிறது.
சங்க செலவிலேயே வழக்கு!
இதுகுறித்து நம்மிடம் பேசிய எதிர்ப்புக் குழுவைச் சேர்ந்த ஆர்.பி.ரமேஷ், “சங்கத்திலிருந்து பணத்தைத் திருடுவதற்கு வசதியாக விதிகளைத் திருத்தியுள்ளார்கள். அதாவது, ‘கடந்த இரண்டு வருடங்களுக்கான வரவு – செலவுக் கணக்குகள் பொதுக்குழுவால் அங்கீகாரம் பெறப்படுகிறது. தாலுகாவாரியாகப் புதிய உறுப்பினர்களைச் சேர்த்து சங்கத் தேர்தலை நடத்த வேண்டும்’ என்று தீர்மானம் போட்டுள்ளார்கள். இந்தக் கணக்குகள் போலியானவை. மறு தணிக்கை செய்யப்பட வேண்டும்.
ஒரு சங்கம் என்றால் நிரந்தர உறுப்பினர்களைக் கொண்டிருக்க வேண்டும். இவர்களோ, நிரந்தர உறுப்பினர்களை நீக்கிவிட்டு, மூன்று வருடங்களுக்கு ஒருமுறை புதிய உறுப்பினர்களைச் சேர்க்கும் நடைமுறையைக் கொண்டுவந்திருக்கின்றனர். தாலுகாவாரியாக ஏழு பொதுக்குழு உறுப்பினர்கள் இருந்த நிலையில், அந்த எண்ணிக்கையை மூன்றாகக் குறைத்திருக்கின்றனர். சங்கப் பணத்தையே எடுத்து வழக்கு நடத்துகிறார்கள். போலீஸ் பாதுகாப்புக்கும் டெபாசிட் தொகை கொடுக்கிறார்கள். ஏற்கெனவே பல கோடி ரூபாயைத் தின்று கொழுத்து ஏப்பம்விட்டுவிட்டு, மீண்டும் கொள்ளையடிக்கத் துடியாய்த் துடிக்கிறார்கள்” என்றார் ஆவேசமாக.

இதுகுறித்து சங்கத்தின் செயலாளர் சுப்பிரமணியனிடம் விளக்கம் கேட்டபோது, “இரண்டு மாதங்களுக்கு முன்பே நாங்கள் பொதுக்குழுக் கூட்டியபோது, அவர்கள் பிரச்னை செய்தார்கள். இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் ‘ரிட்’ மனு தாக்கல் செய்து, போலீஸ் பாதுகாப்புடன் கூட்டத்தை நடத்துவதற்கான அனுமதி பெற்றோம். நீதிமன்ற உத்தரவின்பேரில்தான் பாதுகாப்பு தொகையான எழுபத்தைந்தாயிரம் ரூபாயையும் போலீஸிடம் செலுத்தினோம். ‘தவிர்க்க முடியாத காரணங்களால் மற்றவர்கள் புதிய நிர்வாகிகளாகத் தேர்ந்தெடுக்கப்படும்வரை பழைய நிர்வாகிகளே பதவிகளில் தொடரலாம்’ என்பது சங்க விதி.
அதன்படிதான் நாங்கள் பதவிகளில் தொடர்கிறோம்.
சங்கத்தில் எந்தவிதமான முறைகேடுகளும் நடைபெறவில்லை; பொய்க் கணக்குகளும் எழுதப்படவில்லை. சங்கத்தின் செயல்பாடுகளை முடக்க நினைத்ததால்தான் அவர்களை நீக்கினோம். இப்போது, அவர்கள் தலையிடுவதற்கு எந்த உரிமையும் கிடையாது. சட்டரீதியாகவும் அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்றார் திட்டவட்டமாக.
நடவடிக்கை எடுக்க வேண்டிய பதிவுத்துறை, மோதலை வளர்த்துவிட்டு வேடிக்கை பார்ப்பது ஏன்?
ஜெகன் மோகன் ரெட்டிக்கு வந்ததே கோபம்.. 90% இடங்களில் படுதோல்வி! உச்சக்கட்ட கோபத்தில் சொன்ன பாயிண்டு
November 6, 2026
எம்மி விருது விழாவில் விஜய் சேதுபதி.. முதல் இந்திய நடிகர் என்ற வரலாறு! இந்த சான்ஸ் கிடைத்தது எப்படி?
November 6, 2026
பெரியார் அறிவுலகத்துக்கு புத்தகம் வாங்கியதில் மிகப்பெரிய ஊழல்? AI மூலம் தாறுமாறாக எழுதப்பட்ட நூல்கள்
November 6, 2026
அமெரிக்க இடைக்காலத் தேர்தல் முடிவுகள் உலகின் பிற பகுதிகளில் ஏற்படுத்தக் கூடிய தாக்கம் என்ன?
November 6, 2026
அரபு கட்சிகள் கொடுத்த ட்விஸ்ட்.. கையை விட்டு போகும் பிரதமர் பதவி.. உச்சக்கட்ட டென்ஷனில் நெதன்யாகு
November 6, 2026
லாஸ் ஏஞ்சலிஸ் மேயர் தேர்தலில் கேரன் பாஸை வீழ்த்தி இந்திய குடியேறி நித்யா ராமன் வெற்றி
November 6, 2026
11 US Vacation Rentals Where the Hot Tub Comes With a View
November 6, 2026
8 Dreamy Hotels Our NYC Editors Are Booking This Winter
November 6, 2026
How to Watch the 100th Macy's Thanksgiving Day Parade
November 6, 2026
AI stocks climb after trillions wiped from market values
November 6, 2026
Rocco’s Black Friday Sale: Smart Fridges Hit Their Lowest Prices of 2026
November 6, 2026
Early Black Friday Mattress Deals: Get Up to 35% Off WIRED-Tested Favorites
November 6, 2026