கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் அமைந்திருக்கும் நடராஜர் கோயிலில் கனகசபை மீது நின்று பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு அனுமதி அளித்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, தீட்சிதர்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டன.
அதேபோல தமிழக அரசின் அரசாணைக்கு ஆதரவு தெரிவித்தும், அந்த அரசாணையை தீட்சிதர்கள் தரப்பு செயல்படுத்தாதது குறித்தும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், இ.மனோகர் அமர்வில் நடைபெற்று வந்த அந்த விசாரணையில், தீர்ப்பளிக்கப்பட்டது.
அந்தத் தீர்ப்பில், `கோயிலின் நிர்வாகத்தை கடந்த 2014 ஆம் ஆண்டு தீட்சிதர்களிடம் ஒப்படைத்து உத்தரவிடப்பட்டது. ஆனால் அதன்பிறகு தீட்சிதர்கள் கோயிலை முறையாக நிர்வகிக்கவில்லை.

எனவே கோயில் நிர்வாகத்தை கண்காணிப்பதற்காக ஓய்வு பெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் வி.பாரதிதாசன் மற்றும் ஆர்.சுரேஷ்குமாரை நியமிக்கிறோம். வி.பாரதிதாசன் தலைவராகவும், துணைத் தலைவராக ஆர்.சுரேஷ்குமாரும், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி ராஜேந்திரன் உறுப்பினராகவும் நியமிக்கிறோம்.
அதேபோல பொது தீட்சிதர்கள் சங்கத்தின் செயலாளர் மற்றும் இந்துசமய அறநிலையத்துறைச் செயலாளரை அலுவல் சாரா உறுப்பினர்களாகவும் நியமித்து உத்தரவிடுகிறோம். கோயிலுக்குள் பொது தீட்சிதர்கள் மேற்கொண்ட தொடர்ச்சியான கட்டுமானப் பணிகளால், புராதனக் கட்டிடங்களுக்கு மிகப்பெரிய அளவில் சேதங்கள் ஏற்பட்டிருக்கின்றன.
அதனால் கோயிலின் புராதனக் கட்டடங்களுக்கு இடையூறாகவும், அனுமதியின்றியும் கட்டப்பட்டிருக்கும் கட்டிடங்களை அப்புறப்படுத்துவது தொடர்பாக, நீதிபதிகள் தலைமையிலான குழு தமிழ்நாடு புராதனச் சின்ன ஆணையத்துடன் கலந்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேபோல மாவட்ட நிர்வாகத்தின் உதவியுடன் ஆக்கிரமிப்பில் இருக்கும் கோயில் சொத்துக்களை மீட்க இந்தக் குழு நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த சொத்துக்களை கணக்கெடுத்து, மாயமான மதிப்புமிக்க கோயிலுக்குச் சொந்தமான பொருட்களை மீட்கவும், கோயில் சொத்துகளின் வாடகை மற்றும் குத்தகைப் பாக்கிகளை வசூலிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அவற்றுக்கு முறையான கணக்குகளைப் பராமரிப்பதுடன், கோயிலின் வருவாயைப் பெருக்குவதற்கு நிபுணர்களின் ஆலோசனைப் பெற்று நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த 12 ஆண்டுகளாக கோயிலுக்கு வந்த வருமானம் குறித்த முழு கணக்கை, பொது தீட்சிதர்கள் சமர்ப்பிக்கவில்லை.
கோயிலை தீட்சிதர்கள் முறையாக நிர்வகிக்காதது வேதனையளிக்கிறது. புராதனக் கட்டிடங்களுக்கு சேதம் ஏற்படுத்தாமல் கோயில் திருப்பணிகளை மேற்கொண்டு, மத சடங்குகள், மரபுகளின்படி குடமுழுக்கு நடத்த வேண்டும்.

விரைவில் கோயிலின் பெருமையை மீட்டெடுப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் புதிய நிர்வாகக் குழு மீட்டெடுக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. நிர்வாகக் குழுவுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும், அனைத்து அரசுத்துறை அதிகாரிகளும் வழங்க வேண்டும்.
அதேபோல கோயிலின் கனகசபை மீது நின்று அனைத்து பக்தர்களும் தரிசனம் செய்வதையும், அங்கு தேவாரம் மற்றும் திருவாசகம் பாடுவதையும், அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்குவதையும் நிர்வாகக் குழு உறுதி செய்ய வேண்டும்.
அதேபோல அன்றாட பூஜைகள், விழாக்கள் நடத்துவது தீட்சிதர்களின் பிரத்யேக உரிமை என்பதால், நிர்வாகக் குழு அதில் தலையிடாது. அதேசமயம் கோயிலின் அன்றாட வரவு செலவு கணக்குகளை, ஒவ்வொரு மாதமும் 5-ம் தேதிக்குள் தீட்சிதர்கள் நிர்வாகக் குழுவிடம் சமர்ப்பிக்க வேண்டும்” என்றும் உத்தரவிட்டனர்.
ஜெகன் மோகன் ரெட்டிக்கு வந்ததே கோபம்.. 90% இடங்களில் படுதோல்வி! உச்சக்கட்ட கோபத்தில் சொன்ன பாயிண்டு
November 6, 2026
எம்மி விருது விழாவில் விஜய் சேதுபதி.. முதல் இந்திய நடிகர் என்ற வரலாறு! இந்த சான்ஸ் கிடைத்தது எப்படி?
November 6, 2026
பெரியார் அறிவுலகத்துக்கு புத்தகம் வாங்கியதில் மிகப்பெரிய ஊழல்? AI மூலம் தாறுமாறாக எழுதப்பட்ட நூல்கள்
November 6, 2026
அமெரிக்க இடைக்காலத் தேர்தல் முடிவுகள் உலகின் பிற பகுதிகளில் ஏற்படுத்தக் கூடிய தாக்கம் என்ன?
November 6, 2026
அரபு கட்சிகள் கொடுத்த ட்விஸ்ட்.. கையை விட்டு போகும் பிரதமர் பதவி.. உச்சக்கட்ட டென்ஷனில் நெதன்யாகு
November 6, 2026
லாஸ் ஏஞ்சலிஸ் மேயர் தேர்தலில் கேரன் பாஸை வீழ்த்தி இந்திய குடியேறி நித்யா ராமன் வெற்றி
November 6, 2026
11 US Vacation Rentals Where the Hot Tub Comes With a View
November 6, 2026
8 Dreamy Hotels Our NYC Editors Are Booking This Winter
November 6, 2026
How to Watch the 100th Macy's Thanksgiving Day Parade
November 6, 2026
AI stocks climb after trillions wiped from market values
November 6, 2026
Rocco’s Black Friday Sale: Smart Fridges Hit Their Lowest Prices of 2026
November 6, 2026
Early Black Friday Mattress Deals: Get Up to 35% Off WIRED-Tested Favorites
November 6, 2026