சிறப்புத் தீவிரத் திருத்தத்தில் நடந்த குளறுபடிகளையும் சுட்டிக்காட்டியும், தேர்தல் மற்றும் எஸ்.ஐ.ஆரில் மத்திய அரசுக்குச் சாதகமாக முடிவுகளை எடுத்துள்ளார் என்று இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் இந்தியா கூட்டணி தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது.

இந்த நிலையில், லக்னோவில் நடந்த உத்தரப் பிரதேச பாஜக மாநிலச் செயற்குழுக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவுக்குச் சவால் விடுத்துள்ளார்.

அமித் ஷா
அமித் ஷா

நாங்களே ஆட்சியைப் பிடித்துள்ளோம்

நேற்றுக் கூட்டத்தில் அமித் ஷா, “ஹரியானாவில் அதிக இடங்களைக் கைப்பற்றி பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைத்தது. மகாராஷ்டிராவிலும் அதிகத் தொகுதிகளை வென்று என்.டி.ஏ. கூட்டணிதான் ஆட்சியைப் பிடித்துள்ளது.

பீகாரில் முதல்முறையாகப் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த ஒருவர் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். டெல்லியில் மூன்று தசாப்தங்களுக்குப் பிறகு பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைத்துள்ளது.

புதுச்சேரியிலும் மீண்டும் ஒருமுறை பாரதிய ஜனதா கட்சியே ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. அசாமில் 100 இடங்களை வென்று ஹாட்ரிக் சாதனை படைத்திருக்கிறோம்.

மேற்கு வங்கத்திலோ மம்தாவை முற்றிலும் துடைத்தெறிந்துவிட்டோம்.

போட்டியில் தோற்றுவிட்டால்…

இயல்பாகவே, ஒரு போட்டியிலோ அல்லது விளையாட்டிலோ ஒரு அணி தோற்றுவிட்டால், அவர்கள் மேலும் தீவிரமாகப் பயிற்சி செய்ய வேண்டும். அதுதானே இயல்பு? ஆனால் ராகுல் முற்றிலும் வேறு ரகம்.

அவருடன் இந்தியா கூட்டணியில் இருக்கும் அகிலேஷ் மற்றும் பிற தலைவர்களின் கதையும் இதுதான்.தங்கள் தோல்வியை ஒப்புக்கொள்வதற்குப் பதிலாக, நடுவர் ஏமாற்றிவிட்டார் என்றும், வாக்குகள் திருடப்பட்டுவிட்டன என்றும் குற்றஞ்சாட்டத் தொடங்கிவிட்டார்கள்.

ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ்
ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ்

நேரடி சவால்

ராகுலுக்கும், அகிலேஷ் யாதவுக்கும் நான் நேரடியாகச் சவால் விடுக்கிறேன். பாரதிய ஜனதா கட்சி இது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க முற்றிலும் தயாராக உள்ளது. எங்களிடம் மறைப்பதற்கு எதுவுமில்லை.

நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டுவோம். வாருங்கள்.

ஆனால் அவர்களுக்கு நாடாளுமன்றத்தில் பேசுவதில் துளியும் விருப்பமில்லை. நாடாளுமன்றத்தை இயங்கவிடாமல் தடுத்து, வெறும் அமளியை மட்டுமே செய்வார்கள்” என்று பேசியுள்ளார்.

More in TamilNews
ஜெகன் மோகன் ரெட்டிக்கு வந்ததே கோபம்.. 90% இடங்களில் படுதோல்வி! உச்சக்கட்ட கோபத்தில் சொன்ன பாயிண்டு ஜெகன் மோகன் ரெட்டிக்கு வந்ததே கோபம்.. 90% இடங்களில் படுதோல்வி! உச்சக்கட்ட கோபத்தில் சொன்ன பாயிண்டு November 6, 2026 எம்மி விருது விழாவில் விஜய் சேதுபதி.. முதல் இந்திய நடிகர் என்ற வரலாறு! இந்த சான்ஸ் கிடைத்தது எப்படி? எம்மி விருது விழாவில் விஜய் சேதுபதி.. முதல் இந்திய நடிகர் என்ற வரலாறு! இந்த சான்ஸ் கிடைத்தது எப்படி? November 6, 2026 பெரியார் அறிவுலகத்துக்கு புத்தகம் வாங்கியதில் மிகப்பெரிய ஊழல்? AI மூலம் தாறுமாறாக எழுதப்பட்ட நூல்கள் பெரியார் அறிவுலகத்துக்கு புத்தகம் வாங்கியதில் மிகப்பெரிய ஊழல்? AI மூலம் தாறுமாறாக எழுதப்பட்ட நூல்கள் November 6, 2026 அமெரிக்க இடைக்காலத் தேர்தல் முடிவுகள் உலகின் பிற பகுதிகளில் ஏற்படுத்தக் கூடிய தாக்கம் என்ன? அமெரிக்க இடைக்காலத் தேர்தல் முடிவுகள் உலகின் பிற பகுதிகளில் ஏற்படுத்தக் கூடிய தாக்கம் என்ன? November 6, 2026 அரபு கட்சிகள் கொடுத்த ட்விஸ்ட்.. கையை விட்டு போகும் பிரதமர் பதவி.. உச்சக்கட்ட டென்ஷனில் நெதன்யாகு அரபு கட்சிகள் கொடுத்த ட்விஸ்ட்.. கையை விட்டு போகும் பிரதமர் பதவி.. உச்சக்கட்ட டென்ஷனில் நெதன்யாகு November 6, 2026 லாஸ் ஏஞ்சலிஸ் மேயர் தேர்தலில் கேரன் பாஸை வீழ்த்தி இந்திய குடியேறி நித்யா ராமன் வெற்றி லாஸ் ஏஞ்சலிஸ் மேயர் தேர்தலில் கேரன் பாஸை வீழ்த்தி இந்திய குடியேறி நித்யா ராமன் வெற்றி November 6, 2026

See all 587 in TamilNews →

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *