தமிழகத்தில் 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் விரைவில் நடக்குமென எதிர்பார்க்கப்படும் நிலையில், முதல்வர் விஜய் இடைத்தேர்தலை மனதில் வைத்து அரசு நிகழ்ச்சிகளை நடத்தத் திட்டமிட்டிருக்கிறார்.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

தமிழகத்தில் அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்த 7 தொகுதிகள் காலியாக இருந்தது. அதில் மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்திருந்தது. தவெக இரண்டு தொகுதிகளையுமே வென்றிருந்தது. இந்நிலையில், அந்தத் தேர்தல் முடிந்த சூட்டோடு அடுத்த 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வேலைகளை கையில் எடுக்க முதல்வர் விஜய் முடிவெடுத்திருக்கிறார்.

இதுதொடர்பாக நம்மிடையே பேசிய தவெகவின் சீனியர்கள் சிலர், ‘மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் தேர்தல் தேதி அறிவிப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக முதல்வர் விஜய் கூட்டணி கட்சியினர் கூட்டத்தை கூட்டினார். அந்தக் கூட்டத்தில் கூட்டணிக்கு ம.ச.வெ.கூ எனப் பெயரும் வைக்கப்பட்டது. டெல்லியிலிருந்து ஒரு முக்கிய சோர்ஸ் மூலம் இடைத்தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படலாம் என கிடைக்கப் பெற்ற மெசேஜின் மூலம் அந்தக் கூட்டணிக் கட்சியினர் கூட்டத்தை முதல்வர் நடத்தினார்.

CM Vijay
CM Vijay

இப்போதும் அதேமாதிரி டெல்லியிலிருந்து நம்பத்தகுந்த வட்டாரத்தின் மூலம் செய்தி கிடைத்திருக்கிறது. அதன்படி எஞ்சிய தொகுதிகளுக்கான தேர்தல் வழக்குகள் இந்த மாத இறுதிக்குள் முடிய வாய்ப்பிருப்பதாகவும், அதன்பிறகு உடனடியாக தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவிக்கும் என்றும் மெசேஜ் கிடைத்திருக்கிறது. அதனால்தான் முதல்வரும் வேகமாக களத்தில் இறங்க ரெடியாகி வருகிறார். நவம்பர் 2 ஆம் தேதி விராலிமலை செல்லும் முதல்வர், மறுநாளே பெருந்துறை செல்லவும் திட்டமிட்டிருக்கிறார். அதேமாதிரி, நவம்பர்14 குழந்தைகள் தினத்தை அம்பாசமுத்திரத்தில் கொண்டாட திட்டமிட்டிருக்கிறார். மூன்று தொகுதிகளிலும் ரோடு ஷோ + பொதுக்கூட்டமும் நடத்தவிருக்கிறார். மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் வென்றிருந்தாலும், வாக்கு வித்தியாசம் நெகட்டிவாக பார்க்கப்பட்டது. திமுக இரண்டாமிடம் பிடித்தது உடன்பிறப்புகளுக்கு எனர்ஜியையும் கொடுத்திருக்கிறது. இந்த முறை அதையும் மனதில் வைத்து பெரிய வாக்கு வித்தியாசத்தில் வரலாற்று வெற்றியை பதிவு செய்ய வேண்டுமென முதல்வர் திட்டமிட்டிருக்கிறார். அதனால்தான் திமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான அதிரடி நடவடிக்கைகளையும் முடுக்கி விட்டிருக்கிறார். முதல்வரின் வருகைக்குப் பிறகு தொகுதிகளுக்கு பொறுப்பு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டு அமைச்சரவையையும் களத்தில் இறக்கவிருக்கிறார்கள்’ என்றனர்.

See all 681 in TamilNews →

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *