காதல் உறவு கசக்கும்போது ஆண்களுக்கு எதிராக பெண்கள் பாலியல் வன்கொடுமை புகார் கொடுப்பது சில நேரங்களில் நடக்கிறது. இதனால் ஆண்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படும் சம்பவங்களும் நடக்கிறது.
இருவரும் உறவில் ஈடுபட்டுவிட்டு உறவில் விரிசல் ஏற்படும்போது இது போன்ற சிக்கல்கள் வருகின்றன. இது தொடர்பான வழக்கு ஒன்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் நாகரத்தா, மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
உணர்ச்சி ரீதியான முரண்பாடு மற்றும் சம்மதமான காதல் உறவின் முறிவுக்குப் பிறகு பாலியல் குற்றவியல் சட்டத்தை ஆண்களுக்கு எதிரான பெண்கள் ஆயுதமாக்குவதை சமூகமும் நீதிமன்றங்களும் ஊக்கப்படுத்தக்கூடாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
அவர்கள் மேலும் கூறுகையில், ”பரஸ்பர உறவின் போது நிகழும் ஒருமித்த பாலியல் சம்பவங்கள் அந்த உறவு முடிவுக்கு வந்தால் மட்டும் அது குற்றமாகிறது.

இது துரதிர்ஷ்டவசமானது. இந்த போக்கு அதிகரித்து வருகிறது. மேலும் இது நீதிமன்றங்களுக்கு கவலையளிக்கும் ஒரு விஷயமாகும். மேலும் பெரும்பாலும் இது போன்ற பிரச்னைகளை தீர்க்கும் போது குற்றம் சாட்டப்படும் ஆண் நபர் பெரிய அளவில் பணம் கொடுக்கவேண்டிய நிலை ஏற்படுகிறது.
சமீபத்திய ஆண்டுகளில், பரஸ்பர சம்மதத்துடன் கூடிய உறவுகளுக்கு பாலியல் வன்கொடுமை என்ற சாயம் பூசப்படும் கவலையளிக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. உண்மையில், இத்தகைய அணுகுமுறை ஒரு ஆணின் சுயமுடிவு எடுக்கும் உரிமையை முற்றிலுமாக பறித்துவிடுகிறது.
ஏனெனில், ஒரு குறிப்பிட்ட காலத்தில் சம்மதத்துடன் உறவில் இருந்த ஒரே காரணத்திற்காக, பிற்காலத்தில் அவர் மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுவிடுமோ என்ற அச்சத்திலேயே, அந்த உறவோடு அவர் முற்றிலும் பிணைக்கப்பட்டுவிடும் நிலை ஏற்படுகிறது.
இத்தகையதொரு சூழ்நிலையில், அந்த உறவிலிருந்து விலக அந்த ஆணுக்கு எந்த உரிமையும் இல்லை என்று கூறிவிட முடியுமா? அத்தகைய முடிவை ஏமாற்று வேலை என்றோ அல்லது மோசடி என்றோ அழைக்க முடியுமா? நிச்சயமாக இல்லை. இதுபோன்ற சந்தர்ப்பங்களில், ஒரு சுமூகமான உறவு நீடித்திருந்த காலத்தில் ஏற்பட்ட உடலளவிலான நெருக்கத்தை, பிற்காலத்தில் அந்த உறவு கசந்துபோய் முறிந்துவிட்டது என்பதற்காகவே, கடந்த காலத்திற்குச் சென்று அதனைப் பாலியல் வன்கொடுமை நடவடிக்கை என்று முத்திரை குத்த முடியாது.
முறிந்த காதல்கள் / தோல்வியுற்ற உறவுகள் குற்றவியல் வழக்குகளாக மாற்றப்படும் கவலையளிக்கும் போக்கை இந்த நீதிமன்றம் மீண்டும் மீண்டும் கண்டுவருகிறது. பாலியல் வன்கொடுமை என்பது ஒரு மிகக் கொடூரமான குற்றமாகும். அது உண்மையான பாலியல் வன்முறை, பலவந்தம் அல்லது சம்மதத்தை தவறாகக் கையாளுதல் (மிரட்டி சம்மதம் பெறுதல்) போன்ற சூழ்நிலைகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்”என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
"தமிழக அரசு நிலைப்பாட்டில் மாற்றமில்லை தானே.." கரூர் கூட்ட நெரிசல் வழக்கு.. உச்ச நீதிமன்றம் கேள்வி!
November 4, 2026
ஞானேஷ் குமாருக்கு சிக்கல்.. ரூ. 2 கோடி லஞ்சம்.. மலேசிய இன்ஜினியர் தற்கொலை.. தீவிரமடையும் விசாரணை
November 4, 2026
ஜென்ம நட்சத்திர பலன்கள் – நவம்பர் 5 2026 வியாழக்கிழமை
November 4, 2026
இன்றைய பஞ்சாங்கம் – நவம்பர் 5 2026 வியாழக்கிழமை
November 4, 2026
"ஆம்னி பஸ்கள் தீபாவளிக்கு அதிக கட்டணம் வசூலித்தால்.. பண்டிகை முடிந்து நடவடிக்கை!" அமைச்சர் வார்னிங்
November 4, 2026
டிரம்ப்பிற்கு எதிராக திரும்பும் துணை அதிபர் வேன்ஸ்! "அவரது" முடிவுகளே தோல்விக்கு காரணம் என பாய்ச்சல்
November 4, 2026
The Best Airbnbs in Colorado, Including a Ski-In Chalet and a Cliffside Cabin
November 4, 2026
Qualcomm is betting big on data centers as smartphone sales sink
November 4, 2026
10 Magical Christmas Traditions Around the World
November 4, 2026
This Train Offers a Front-Row Seat to One of Colorado’s Greatest Natural Wonders
November 4, 2026
17 better ways Elon Musk could have wasted $446 million
November 4, 2026
WoW: Forever’s First New Legendary Weapon Revealed
November 4, 2026