தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் புதுக்கோட்டை வருகை காரணமாக கடந்த 6 மாத காலமாக முடங்கிக் கிடந்த சாலை விரிவாக்கப் பணிகள் தற்போது அசுர வேகத்தில் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
தமிழ்நாடு முதலமைச்சர் முதன்முறையாக புதுக்கோட்டை மாவட்டத்திற்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்வதையொட்டி, மாவட்டத்தில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
புதுக்கோட்டையில் ரூ. 19 கோடி மதிப்பீட்டில் அதிநவீன வசதிகளுடன் புனரமைக்கப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையம் மற்றும் ரூ. 8 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய உள்விளையாட்டு அரங்கம் ஆகியவற்றை நவம்பர் 2-ம் தேதி நடைபெறும் விழாவில் முதலமைச்சர் விஜய் திறந்து வைக்கிறார். முதலமைச்சரின் திடீர் வருகையை முன்னிட்டு, புதிய பேருந்து நிலையப் பணிகள் இரவு பகலாக படு வேகத்தில் முடுக்கிவிடப்பட்டுள்ளன. மேலும், பேருந்து நிலையத்தைச் சுற்றியுள்ள சாலைகளும் புதிதாகப் போடப்பட்டு வருகின்றன.

6 மாத காலம் அமைதி… முதலமைச்சர் வருகைக்காக இப்போது அசுர வேகம்:
அதேவேளையில், பழைய பேருந்து நிலையம் முதல் டி.வி.எஸ். கார்னர் வரையிலான சுமார் ஒன்றரை கிலோமீட்டர் தொலைவுள்ள சாலை விரிவாக்கப் பணிகள் கடந்த 6 மாதங்களாக முடிவடையாமல் முடங்கிக் கிடந்தன.
மாவட்ட நீதிமன்றம், நீதிபதிகள் இல்லம், மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (எஸ்.பி.) இல்லங்கள், அரசு விருந்தினர் மாளிகைகள், எஸ்.பி. அலுவலகம் எனப் பல்வேறு வி.ஐ.பி.க்களின் இருப்பிடங்களும் அலுவலகங்களும் இந்தச் சாலையில்தான் அமைந்துள்ளன. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இச்சாலையில் கடந்த 6 மாதங்களாக இருபுறமும் பெரிய பள்ளங்களைத் தோண்டியும், நடுவில் உள்ள தாரைச் சுரண்டியும் போட்டிருந்ததால் தொடர்ந்து ஏராளமான விபத்துகள் நிகழ்ந்து வந்தன. இதுகுறித்து ஊடகங்களும் பொதுமக்களும் பலமுறை முறையிட்டும் நெடுஞ்சாலைத்துறையும் மாவட்ட நிர்வாகமும் கண்டு கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு நிலவி வருகிறது.
தற்போது முதலமைச்சர் விஜய்யின் வருகையை முன்னிட்டு, கடந்த 6 மாத காலமாக அமைதியாகக் கிடந்த டி.வி.எஸ். சாலை விரிவாக்கப் பணிகள் 2 நாட்களில் அசுர வேகத்தில் முடுக்கிவிடப்பட்டு, சாலையின் இருபுறமும் விரிவாக்கத்திற்காக தோண்டப்பட்டிருந்த பள்ளங்காளில் அவசர கதியில் தார்ச்சாலை அமைத்து வருகின்றனர்.

இருப்பினும், நடுவில் உள்ள சாலை இன்னமும் குண்டும் குழியுமாகவே தார் முழுவதும் சுரண்டப்பட்டு இரு சக்கர வாகனங்கள் ஆபத்தான நிலையில் செல்ல வேண்டிய நிலையில்தான் உள்ளது.
முதல்வர் விஜய்யின் வருகைக்காக பாதுகாப்பு பணிக்காக வெளியூர் மாவட்டங்களில் இருந்து ஏராளமான காவல்துறையினரும், அவர்களின் வாகனங்களும் இந்த டி.வி.எஸ்.சாலையில் அணி வகுத்து நிற்பதுடன் சாலை விரிவாக்கப்பணிகளும் நடைபெறுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. தீபாவளிக்கு பொருட்களை வாங்கச் செல்லும் பொதுமக்கள் இதனால் பல்வேறு சிரமங்களை அடைந்து வருகின்றனர்.

இதுகுறித்து
தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாநில இளைஞரணி செயலாளர் நியாஸ் அகமது’ “பழைய பேருந்து நிலையம் முதல் டி.வி.எஸ். கார்னர் வரையிலான சாலைப் பணிகளை மட்டும் முதலமைச்சர் வருகைக்காக 2 நாட்களில் அசுர வேகத்தில் செய்து வரும் நெடுஞ்சாலைத்துறை, பிருந்தாவனம் முதல் அண்டக்குளம் வரையிலான சாலைப் பணிகளை இன்னும் கிடப்பிலேயே தான் போட்டு வைத்துள்ளது. மேலும், எவ்வித தரமும் இல்லாமல் அவசர கோலத்தில் கண் துடைப்பு வேலைகளைச் செய்வதால் சாலையின் தரம் முற்றிலும் கேள்விக்குறியாகியுள்ளது. மழைநீர் வடிய வசதியில்லாமல் சாலையின் ஓரங்களை மீண்டும் உடைத்து புதிதாக அமைக்க வேண்டிய நிலை ஏற்படும்; இதனால் அரசுப் பணம் பெருமளவில் வீணடிக்கப்படுகிறது” என்றார்.
"தமிழக அரசு நிலைப்பாட்டில் மாற்றமில்லை தானே.." கரூர் கூட்ட நெரிசல் வழக்கு.. உச்ச நீதிமன்றம் கேள்வி!
November 4, 2026
ஞானேஷ் குமாருக்கு சிக்கல்.. ரூ. 2 கோடி லஞ்சம்.. மலேசிய இன்ஜினியர் தற்கொலை.. தீவிரமடையும் விசாரணை
November 4, 2026
ஜென்ம நட்சத்திர பலன்கள் – நவம்பர் 5 2026 வியாழக்கிழமை
November 4, 2026
இன்றைய பஞ்சாங்கம் – நவம்பர் 5 2026 வியாழக்கிழமை
November 4, 2026
"ஆம்னி பஸ்கள் தீபாவளிக்கு அதிக கட்டணம் வசூலித்தால்.. பண்டிகை முடிந்து நடவடிக்கை!" அமைச்சர் வார்னிங்
November 4, 2026
டிரம்ப்பிற்கு எதிராக திரும்பும் துணை அதிபர் வேன்ஸ்! "அவரது" முடிவுகளே தோல்விக்கு காரணம் என பாய்ச்சல்
November 4, 2026
Zoro Coupon Codes: 20% Off November 2026
November 5, 2026
HP Coupon Codes and Deals November 2026
November 5, 2026
HostGator Coupon Codes: 76% Off Hosting in November 2026
November 5, 2026