மது குடித்ததைத் தட்டிக்கேட்ட ஊர்க்காவல் படை வீரர் அடித்துக் கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக அன்புமணி கண்டனம் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “அரியலூர் மாவட்டத்தில் பொது இடத்தில் மது அருந்தியதைத் தட்டிக் கேட்டதற்காக தளவாய் காவல் நிலைய வளாகத்தில் ஊர்க்காவல் படை வீரர் வெங்கடேசன் என்பவர் போதையிலிருந்த 3 இளைஞர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. ஊர்க்காவல் படை வீரர் வெங்கடேசனை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்புமணி
அன்புமணி

காவலர்களுடன் இணைந்து வெங்கடேசன் சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டிருந்த போது, ஆதனங்குறிச்சி என்ற இடத்தில் 3 இளைஞர்கள் பொது இடத்தில் மது அருந்திக் கொண்டிருந்தனர். அவர்களை ஊர்க்காவல் படை வீரர் வெங்கடேசன் கண்டித்து அங்கிருந்து அனுப்பியுள்ளார். அதனால், ஆத்திரமடைந்த அவர்கள், அடுத்த சிறிது நேரத்தில் காவல் நிலையத்திற்கு அருகில் வந்து, சுற்றுக்காவல் முடித்து திரும்பிய வெங்கடேசனை கண்மூடித்தனமாக அடித்து கொலை செய்துள்ளனர்.

கடமையை செய்த ஊர்க்காவல் படைவீரர் குடிகாரர்களால் கொல்லப்பட்டிருப்பது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஊர்க்காவல் படை வீரர் வெங்கடேசன் மாதம் ரூ.2800 என்ற குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வருகிறார். அவரது மனைவி ஏற்கனவே உயிரிழந்து விட்ட நிலையில், அவரது இரு குழந்தைகளும் ஆதரவற்றவர்களாகி தவித்து வருகின்றனர். அவர்களின் எதிர்காலத்தைக் கணக்கில் கொண்டும், ஊர்க்காவல் படை வீரர் வெங்கடேசன் பணியில் இருந்த போது கொல்லப்பட்டிருப்பதை கருத்தில் கொண்டும் அவரது குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க அரசு முன்வர வேண்டும்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

See all 603 in TamilNews →

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *