தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள பின்னையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் எம்.இராமச்சந்திரன் வயது 80. இவரது மனைவி பூமணி. இவர்களுக்கு திருந்தையன், அபிராமி என இரு பிள்ளைகள் இருவருமே டாக்டர்.
முன்னாள் திமுக எம்.எல்.ஏ-வான இராமச்சந்திரனை அனைவரும் புல்லட் இராமச்சந்திரன், எம்.ஆர் எனப் பாசமாக அழைத்து வந்தனர். தஞ்சாவூர் நாஞ்சிக் கோட்டைசாலை ஆர்.எம்.எஸ் காலனியில் குடும்பத்துடன் வசித்து வந்த இராமச்சந்திரன் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

இவரது மறைவு செய்தி திமுகவினரைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவருடைய குறிஞ்சி இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு கட்சி பாகுபாடின்றி அனைவரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அரசியல்வாதிகள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாக வாழ்ந்தவர் மறைந்தது பெரும் இழப்பு எனப் பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு சோகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இது குறித்து திமுக தரப்பில் பேசினோம், ”எம்.இராமச்சந்திரன் தொகுதி மறுசீரமைப்புக்கு முன்பு இருந்த திருவோணம் தொகுதியில் 1989, 1996 என இரண்டு முறையும் பின்னர் 2016ல் ஒரத்தநாடு தொகுதியில் ஒரு முறை என மூன்று முறை எம்.எல்.ஏ-வாக இருந்திருக்கிறார்.
2016 தேர்தலில் பலம் வாய்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தைத் தோற்கடித்து தமிழ்நாடு முழுவதிலும் கவனம் பெற்றவர். வைத்திலிங்கம் தற்போது திமுகவில் இருக்கிறார்.

இதற்கான வெற்றி சான்றிதழை வாங்குவதற்காக தேர்தல் அலுவலர் முன் இராமச்சந்திரன் நிற்க அப்போது ஸ்டாலினிடம் இருந்து போன் வருகிறது. வெற்றி சான்றிதழை வாங்காமல் போனை எடுத்து பேசியவரிடம் வாழ்த்துகள்ண்ணே, வைத்திலிங்கத்தையே தோற்கடிச்சிட்டீங்கனு பாராட்ட இதில் எனக்கு சந்தோஷம் இல்ல தம்பி, நீங்க முதல்வரா வர முடியல அதான் எனக்கு வருத்தமா இருக்குனு தழு தழுதழுத்தார்.
அத்துடன் 2021-ல் நீங்க தான் முதல்வர் தம்பினு பட்டென சொல்ல சரிங்கண்ணே என்றார் ஸ்டாலின். அந்தளவுக்கு கட்சி மீது விசுவாசமாக இருந்தார்.
தான் எம்.எல்.ஏ-வாக இருந்தபோது அவரது புல்லட் சுழலாத கிராமங்களே இல்லை. நல்லது, கெட்டதுகளில் கலந்து கொள்ள தனி ஆளாக புல்லட்டில் கிளம்பி விடுவார். சாதி மதம் பாக்காமல் பழகுவார். யார் வீட்டு நிகழ்ச்சியாக இருந்தாலும் தவிர்க்காமல் சாப்பிட்டு விட்டு உரிமையோடு வெத்தல கேட்டு வாங்கி போட்டதும்தான் புறப்படுவார். அதனால்தான் புல்லட் இராமச்சந்திரன் என்ற பெயர் அவருக்கு வந்தது. எப்போதும் மக்களுடன் எளிமையாகக் கலந்திருப்பார். கட்சி பாகுபாடின்றி பழகுவார்.

தன் தொகுதியைச் சேர்ந்த இஸ்லாமியர் ஒருவர் மீது மற்றொருவர் போலீஸில் புகார் அளிக்க உடனே, இராமச்சந்திரனிடம் உதவி கேட்டிருக்கிறார் அந்த இஸ்லாமியர். இதையடுத்து புகார் அளித்த நபரிடம் என் சொந்தக்காரர் மீது கொடுத்த புகாரை வாபஸ் வாங்குங்கள் எனச் சொல்ல அந்த நபர் என்ன சொல்றீங்கனு அவரு உங்க சொந்தமானு கேட்க எல்லாம் நம் சொந்தம்தான்யானு சொன்னதும் புகார் அளித்த நபர் நெகிழ்ந்து மறுப்பேதும் பேசாமல் வாபஸ் வாங்கி விட்டார்.
எம்.எல்.ஏ-வாக இருந்த சமயத்தில் தொகுதியில் நடந்த பெரிய பணிக்கு கமிஷன் கொடுக்க பெரும் தொகையுடன் ஒப்பந்ததாரர் ஒருவர் இராமச்சந்திரனிடம் சென்றிருக்கிறார். என்னய்யா இதெல்லாம், இத நீயே எடுத்துட்டு போய் அந்த வேலையை மக்களுக்குப் பயன்படும் படியா தரமா செஞ்சு கொடு என்று திருப்பி அனுப்பினார்.
ஆச்சர்யம் தாங்காத அந்த ஒப்பந்ததாரர் இதைப் பலரிடத்தில் சொல்லியிருக்கிறார். லஞ்சம் வாங்குவதை விரும்பாதவர். இவருடன் சம காலத்தில் பயணித்த அரசியல்வாதிகள் பொருளாதார ரீதியில் நல்ல நிலையில் இருக்கின்றனர். இவரோ எளிமை மாறாமல் அப்படியே இருந்தார்.

இராமச்சந்திரன் கடைசி வரை தன் நல்ல குணத்தை மாற்றிக் கொள்ளவே இல்லை. ஏழை, பாழைங்களுக்கு நல்லது செய்யதான் அரசியலும், ஆட்சியும் என அடிக்கடி சொல்வார். தஞ்சாவூர் மண்ணுக்கே உரிய நக்கலும், நையாண்டியும் அவரிடம் நிறைந்திருக்கும். எந்தச் சூழலிலும் சிரித்த முகத்துடன் இருப்பார்.
கட்சிப் பதவிகள் பெற பலர் தலைமையை முட்டி போதும் போது பதவி மீது நாட்டம் கொண்டதில்லை. மறைந்த கருணாநிதியைத் தொடர்ந்து ஸ்டாலின், உதயநிதி என திமுக-வில் தொடர் ஓட்டம் கண்டவர். இன்று தன் ஓட்டத்தை நிறுத்திக் கொண்டார். அரசியல்வாதிகள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு பாடமாக நம் கண் முன்னே வாழ்ந்த இராமச்சந்திரன் மறைவு எங்களுக்கு பெரும் இழப்புதான்” என்றனர்.
"தமிழக அரசு நிலைப்பாட்டில் மாற்றமில்லை தானே.." கரூர் கூட்ட நெரிசல் வழக்கு.. உச்ச நீதிமன்றம் கேள்வி!
November 4, 2026
ஞானேஷ் குமாருக்கு சிக்கல்.. ரூ. 2 கோடி லஞ்சம்.. மலேசிய இன்ஜினியர் தற்கொலை.. தீவிரமடையும் விசாரணை
November 4, 2026
ஜென்ம நட்சத்திர பலன்கள் – நவம்பர் 5 2026 வியாழக்கிழமை
November 4, 2026
இன்றைய பஞ்சாங்கம் – நவம்பர் 5 2026 வியாழக்கிழமை
November 4, 2026
"ஆம்னி பஸ்கள் தீபாவளிக்கு அதிக கட்டணம் வசூலித்தால்.. பண்டிகை முடிந்து நடவடிக்கை!" அமைச்சர் வார்னிங்
November 4, 2026
டிரம்ப்பிற்கு எதிராக திரும்பும் துணை அதிபர் வேன்ஸ்! "அவரது" முடிவுகளே தோல்விக்கு காரணம் என பாய்ச்சல்
November 4, 2026
Our Big Interview With Ocarina of Time Producers Eiji Aonuma and Hidemaro Fujibayashi
November 5, 2026
The Legend of Zelda: Ocarina of Time Remake Full English Voice Cast Revealed
November 5, 2026
2 Teen Trainee Cabin Crew Invited To Party, Then Sexually Assaulted In Hyderabad
November 5, 2026
SSC Graduate Level Exam Answer Key, Response Sheet Out: Check Objection Window Details
November 5, 2026
Adam Driver Confirms His Role in Heat 2, Comments on Recent Michael Mann Shooting
November 5, 2026
Indian Bank Apprentice Recruitment 2026: How To Apply For 1,500 Posts
November 5, 2026