வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சத்துவாச்சாரி அருகேயுள்ள நடப்பாறை பகுதியில், 1981-ம் ஆண்டு வீட்டுவசதி வாரியத்துக்காக 485 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டதாகத் தெரிகிறது. அதில், எந்தவிதமான பணிகளும் மேற்கொள்ளப்படாத காரணத்தால் 450 ஏக்கருக்கும் அதிகமான நிலங்கள் மீண்டும் உரியவர்களிடமே விடுவிக்கப்பட்டதாகவும், 23 ஏக்கர் 84 சென்ட் நிலம் மட்டும் விடுவிக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், 23 ஏக்கர் 84 சென்ட் நிலங்களையும் விடுவிக்கக்கோரி அதில் வசிக்கும் மக்கள் அக்டோபர் 8-ம் தேதி முதல் இரவு, பகலாக கவன ஈர்ப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

போராட்டத்தின் 26-வது நாளான இன்றைய தினம், வேலூரில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக தேசிய நெடுஞ்சாலையில் காரில் வந்துகொண்டிருந்த கூட்டுறவுத்துறை அமைச்சர் காந்திராஜிடம் போராட்டக்காரர்கள் பதாகைகளைக் காண்பித்து காரை நிறுத்துமாறு கூச்சலிட்டனர்.

தேசிய நெடுஞ்சாலையில் திரண்ட போராட்டக்காரர்கள்
தேசிய நெடுஞ்சாலையில் திரண்ட போராட்டக்காரர்கள்

அமைச்சரின் வாகனமும், அவருடன் வந்த பாதுகாப்பு வாகனங்களும் தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தப்பட்டது. காரில் இருந்து இறங்கிவந்த அமைச்சர் காந்திராஜின் காலில் போராட்டக்காரர்களில் ஒருவர் திடீரென விழ முயன்றார். அவரைத் தடுத்த அமைச்சர் மனுவைப் பெற்றுக்கொண்டு அவர்களின் கோரிக்கைகளை முதலமைச்சரிடம் கவனப்படுத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

இதையடுத்து, அமைச்சருக்கு `நன்றி’ தெரிவித்துவிட்டு போராட்டக்காரர்கள் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து வெளியேறினர். இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டதோடு, பரபரப்பான சூழ்நிலையும் காணப்பட்டது.

More in TamilNews
141 வீடுகளுக்கு சோலார் மின்சாரம்! மத்திய அரசு மானியம், நிறுவனங்களின் நிதியுதவி தரும் சூப்பர் திட்டம் 141 வீடுகளுக்கு சோலார் மின்சாரம்! மத்திய அரசு மானியம், நிறுவனங்களின் நிதியுதவி தரும் சூப்பர் திட்டம் November 4, 2026 நவ.13 ஆம் தேதி பள்ளிக்கு வராத மாணவர்களுக்கு அவர்கள் வரும்போது கேக் வழங்க வேண்டும் – பறந்தது ஆர்டர்! நவ.13 ஆம் தேதி பள்ளிக்கு வராத மாணவர்களுக்கு அவர்கள் வரும்போது கேக் வழங்க வேண்டும் – பறந்தது ஆர்டர்! November 4, 2026 ரெண்டு பேருக்கு நடுவுல தான் போட்டியே! மத்தவங்க கனவு மட்டும் தான் காண முடியும்! மரிய வில்சன் ஒரே போடு ரெண்டு பேருக்கு நடுவுல தான் போட்டியே! மத்தவங்க கனவு மட்டும் தான் காண முடியும்! மரிய வில்சன் ஒரே போடு November 4, 2026 கன்னியாகுமரியில் அன்று ரத்தம் சொட்ட வந்த ஆஸ்திரியா நாட்டு பயணி.. இன்று மர்ம மரணம்.. என்ன நடந்தது? கன்னியாகுமரியில் அன்று ரத்தம் சொட்ட வந்த ஆஸ்திரியா நாட்டு பயணி.. இன்று மர்ம மரணம்.. என்ன நடந்தது? November 4, 2026 கனிமொழிக்கு ப்ரொமோஷன்? நவம்பர் 15க்குள் திமுகவில் நடக்கும் அதிரடி.. மும்முரமாக இருக்கும் ஸ்டாலின்! கனிமொழிக்கு ப்ரொமோஷன்? நவம்பர் 15க்குள் திமுகவில் நடக்கும் அதிரடி.. மும்முரமாக இருக்கும் ஸ்டாலின்! November 4, 2026 அவ்வளவுதான் நம்மளை முடிச்சு விட்டீங்க போங்க! கதறும் காண்டிராக்டர்கள்! கார்ப்பரேட்டுக்கு ஆதரவாக தவெக? அவ்வளவுதான் நம்மளை முடிச்சு விட்டீங்க போங்க! கதறும் காண்டிராக்டர்கள்! கார்ப்பரேட்டுக்கு ஆதரவாக தவெக? November 4, 2026

See all 604 in TamilNews →

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *