“ஆவின் நிறுவனத்துக்கும் தமிழக அரசு மானியம் வழங்க வேண்டும். பால் விலையை உயர்த்த வேண்டும் என்ற ஆவின் நிறுவன பரிந்துரையை ஏற்கக் கூடாது ” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
மேலும் அவர், ” 02.11.2026 ஆவின் பால் விலையை லிட்டருக்கு ரூ.5 உயர்த்த அனுமதிக்க வேண்டும் என்று தமிழக அரசை ஆவின் நிறுவனம் கேட்டுக் கொண்டிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. ஆவின் நிறுவனத்தின் இழப்பைக் குறைக்க வேண்டும்; இலாபத்தில் இயக்க வேண்டும் என்பதற்காக, பிற வழிகளை ஆராயாமல் விலையை உயர்த்த வேண்டும் என்ற பரிந்துரை ஏழை மக்களின் நலனுக்கு எதிரானது. தமிழ்நாட்டில் அண்மையில் ஆவின் நிறுவனத்தின் மூலம் கொள்முதல் செய்யப்படும் பாலின் விலை லிட்டருக்கு ரூ. 6 உயர்த்தப்பட்டது.

ஆவின் நிறுவனம் ஏற்கனவே கடுமையான இழப்பை சந்தித்து வரும் நிலையில், கொள்முதல் விலை உயர்த்தப்பட்டதால், இழப்பு மேலும் அதிகரிக்கும் என்றும், நிலைமையை சமாளிப்பதற்கு ஆவின் பால் விற்பனை விலையை லிட்டருக்கு ரூ.5 உயர்த்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஆவின் நிறுவனம் பரிந்துரை அனுப்பியிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த பரிந்துரையை தமிழக அரசு ஏற்றுக் கொண்டால், அடுத்த சில நாட்களில் ஆவின் நிறுவன பால் விலை உயர்த்தப்படும் என்று கூறப்படுகிறது. ஆவின் நிறுவனம் கடந்த 2025&26ஆம் ஆண்டில் ரூ.89.80 கோடி இழப்பை சந்தித்திருக்கிறது என்பதும், பால் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டிருப்பதால் ஆவின் நிறுவனத்தின் இழப்பு இன்னும் பல மடங்கு அதிகரிக்கும் என்பதும் உண்மை தான். ஆனால், அனைத்து இழப்புகளுக்கும் விலை உயர்வு மட்டுமே தீர்வு அல்ல. அதிலும் குறிப்பாக ஆவின் நிறுவனத்தின் செயல்பாடுகளை ஏழை மக்களுக்கான சேவை என்ற அளவுகோலைக் கொண்டு தான் அளக்க வேண்டுமே தவிர, இலாப நோக்கம் என்ற தராசைக் கொண்டு எடை போடக் கூடாது.
தமிழ்நாட்டில் ஆவின் பாலை விட தனியார் நிறுவன பால் விலைகள் 68% வரை அதிகம் ஆகும். ஆவினில் 3 சதவீதம் கொழுப்பு சத்துள்ள நீல உறை பால் லிட்டருக்கு ரூ. 40-க்கு விற்கப்படும் நிலையில், தனியார் நிறுவனங்கள் ரூ. 24 கூடுதலாக விற்பனை செய்கின்றன. அதேபோல், பச்சை உறை பால் ஆவினில் ரூ. 44-க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், தனியார் பால் விலை, ரூ. 30 கூடுதலாக ரூ. 74-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 6 சதவீதம் கொழுப்பு சத்து கொண்ட ஆரஞ்சு உறை ஆவின் பாலின் விலை லிட்டருக்கு ரூ. 60 மட்டும் தான். ஆனால், அதே பாலை தனியார் நிறுவனங்கள் ரூ. 84-க்கு விற்பனை செய்கின்றன. தனியார் நிறுவனங்களுடன் ஒப்பிடும் போது ஆவின் பால் விலை மிகவும் குறைவாக இருப்பதால், அது ஏழை& நடுத்தர மக்களுக்கு பெரும் வரப்பிரசாதமாக உள்ளது. ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.5 உயர்த்தப்பட்டால், அது அதிகபட்சமாக 12.50% உயர்வாக இருக்கும்.
அதை சாதாரண மக்களால் தாங்க முடியாது. அதிலும் குறிப்பாக அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலைகளும் கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், ஆவின் பாலின் விலையும் உயர்த்தப்பட்டால், அது மக்களை கடுமையாக பாதிக்கும். அதே நேரத்தில் ஆவின் தொடர்ந்து இழப்பில் இயங்கினால், அது முடங்கி விடாதா? என்ற வினாவும் எழலாம்.
மக்களுக்கு மலிவு விலையில் பால் வழங்கினாலும், ஆவின் நிறுவனம் இலாபத்தில் இயங்குவதை இரு வழிகளில் உறுதி செய்ய முடியும். கடந்த ஆண்டில் ஆவின் நிறுவனத்தின் மாநில அலகு ரூ. 120 கோடி இழப்பை சந்தித்துள்ளது. அதே நேரத்தில் மொத்தமுள்ள 27 மாவட்ட அலகுகளில் 7 அலகுகள் ரூ.23 கோடி இழப்பை எதிர்கொண்டுள்ள நிலையில், மீதமுள்ள 20 மாவட்ட அலகுகள் 53.20 கோடி இலாபம் ஈட்டியுள்ளன. அனைத்து பொதுத்துறை நிறுவனங்களைப் போலவே ஆவின் நிர்வாகத்திலும் ஊழல் மற்றும் நிர்வாகத் திறன் இன்மை தலைவிரித்தாடுகிறது. அவற்றை சரி செய்வதன் மூலம் அனைத்து மாவட்ட அலகுகளையும் இலாபத்தில் இயங்கச் செய்ய முடியும்; மாநில அலகின் இழப்பையும் பெருமளவில் குறைக்க முடியும்.

மலிவு விலையில் பால் வழங்குவதால் மாநில அலகின் இழப்பை முற்றிலுமாக கட்டுப்படுத்த முடியாது. அதேநேரத்தில் பால் விற்பனையில் ஏற்படும் இழப்பை அரசே ஏற்றுக்கொள்வதன் மூலம் ஆவினை இலாபத்தில் இயக்க முடியும். தமிழ்நாட்டில் விவசாய மின் இணைப்புகளுக்கு முழுமையாகவும், வீடுகளுக்கு 100 யூனிட் முதல் 200 யூனிட் வரையிலும் இலவச மின்சாரம் வழங்கப்படுவதால் மின்வாரியத்திற்கு ஏற்படும் இழப்பை ஈடு செய்ய, கடந்த ஆண்டில் மட்டும் தமிழக அரசு ரூ.33,478 கோடி மானியம் வழங்கியுள்ளது. அதேபோல், போக்குவரத்துக் கழகங்களுக்கு ஆண்டுக்கு சராசரியாக ரூ.17,000 கோடி மானியம் வழங்கப்படுகிறது. விடியல் பயணத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதால் நடப்பாண்டில் இந்த மானியம் இன்னும் அதிகரிக்கக் கூடும். மின்சாரம், போக்குவரத்து ஆகியவை மக்களுக்கு அடிப்படைத் தேவை என்ற அடிப்படையில் தான் இந்த உதவிகள் வழங்கப்படுகின்றன. இவற்றுடன் ஒப்பிடும் போது பால் என்பது இன்னும் பல மடங்கு முக்கியமான அடிப்படைத் தேவை ஆகும். அதைக் கருத்தில் கொண்டு ஆவின் நிறுவனத்திற்கும் தமிழக அரசு மானியம் வழங்க வேண்டும். பால் விலையை உயர்த்த வேண்டும் என்ற ஆவின் நிறுவன பரிந்துரையை ஏற்கக் கூடாது” என்று வலியுறுத்தியிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb
"தமிழக அரசு நிலைப்பாட்டில் மாற்றமில்லை தானே.." கரூர் கூட்ட நெரிசல் வழக்கு.. உச்ச நீதிமன்றம் கேள்வி!
November 4, 2026
ஞானேஷ் குமாருக்கு சிக்கல்.. ரூ. 2 கோடி லஞ்சம்.. மலேசிய இன்ஜினியர் தற்கொலை.. தீவிரமடையும் விசாரணை
November 4, 2026
ஜென்ம நட்சத்திர பலன்கள் – நவம்பர் 5 2026 வியாழக்கிழமை
November 4, 2026
இன்றைய பஞ்சாங்கம் – நவம்பர் 5 2026 வியாழக்கிழமை
November 4, 2026
"ஆம்னி பஸ்கள் தீபாவளிக்கு அதிக கட்டணம் வசூலித்தால்.. பண்டிகை முடிந்து நடவடிக்கை!" அமைச்சர் வார்னிங்
November 4, 2026
டிரம்ப்பிற்கு எதிராக திரும்பும் துணை அதிபர் வேன்ஸ்! "அவரது" முடிவுகளே தோல்விக்கு காரணம் என பாய்ச்சல்
November 4, 2026
Our Big Interview With Ocarina of Time Producers Eiji Aonuma and Hidemaro Fujibayashi
November 5, 2026
The Legend of Zelda: Ocarina of Time Remake Full English Voice Cast Revealed
November 5, 2026
2 Teen Trainee Cabin Crew Invited To Party, Then Sexually Assaulted In Hyderabad
November 5, 2026
SSC Graduate Level Exam Answer Key, Response Sheet Out: Check Objection Window Details
November 5, 2026
Adam Driver Confirms His Role in Heat 2, Comments on Recent Michael Mann Shooting
November 5, 2026
Indian Bank Apprentice Recruitment 2026: How To Apply For 1,500 Posts
November 5, 2026