சென்னை எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை சார்பில் தமிழ்நாடு நாள் விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் ராஜ்மோகன், “முதல்வர் வாரத்தில் ஒருநாள் பட்டு வேட்டி, சட்டை அணிந்து வருகிறார். அதேபோல் தலைமைச் செயலகம் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் அனைத்து அரசு அலுவலகங்களிலும் வாரத்தில் ஒருநாள் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் வேட்டி, சட்டை அணிந்து வர நடவடிக்கை வேண்டும் என முதல்வரிடம் கோரினேன். வேட்டி, சட்டை அணிவது தமிழர்களின் மரபைப் போற்றுவதுடன், நெசவாளர்களின் வாழ்வாதாரத்துக்கும் உதவும் என்பதால் இதற்கான ஏற்பாடுகளைச் செய்ய முதல்வர் உத்தரவிட்டார்.
இதன்படி, தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் இனி வாரத்தில் ஒருநாள் அனைத்து அரசு அலுவலகங்களிலும் ‘மரபு ஆடை தினம்’ கடைப்பிடிக்கப்பட உள்ளது.” என்றார். அதைத் தொடர்ந்து சமூக ஊடகங்களில் இதுதொடர்பான விவாதம் தொடங்கியது.
இந்த நிலையில், இது குறித்து தவெக அரசுக்கு ஆதரவளித்துக்கொண்டிருக்கும் சிபிஎம் கட்சியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில், “மாண்புமிகு தமிழ்நாடு தமிழ்வளர்ச்சித்துறை அமைச்சர் திரு ராஜ்மோகன் அவர்கள் வாரத்தில் ஒரு நாள் அரசு ஊழியர்கள் மரபு உடை அணிந்து அலுவலகத்திற்கு வர வேண்டுமென அரசாணை வெளியிட இருப்பதாக தெரிவித்துள்ளார். இது முற்றிலும் பொருத்தமற்ற நடவடிக்கை என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு சுட்டிக்காட்ட விரும்புகிறது.
மாநிலத்திற்குள்ளேயே மரபு உடை என்பது வேறுபட்டதாகவும் இருக்கிறது. தங்களுடைய மரபு உடையை ஒவ்வொருவரும் அணிந்து வருவது என்பது தேவையற்ற விவாதங்களை எழுப்பும், கேள்விக்குள்ளாக்கப்படும். இத்தகைய ஆடை குறித்த வழிகாட்டுதல்கள் நிகழ்கால சமூகச் சூழலில் தவறான முறையில் விரிவாக்கப்படுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. இவற்றையெல்லாம் கணக்கில் கொண்டு அமைச்சர் அவர்களின் அந்த ஆலோசனையை கைவிட வேண்டுமென தமிழ்நாடு அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.” எனக் குறிப்பிட்டிருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb
"தமிழக அரசு நிலைப்பாட்டில் மாற்றமில்லை தானே.." கரூர் கூட்ட நெரிசல் வழக்கு.. உச்ச நீதிமன்றம் கேள்வி!
November 4, 2026
ஞானேஷ் குமாருக்கு சிக்கல்.. ரூ. 2 கோடி லஞ்சம்.. மலேசிய இன்ஜினியர் தற்கொலை.. தீவிரமடையும் விசாரணை
November 4, 2026
ஜென்ம நட்சத்திர பலன்கள் – நவம்பர் 5 2026 வியாழக்கிழமை
November 4, 2026
இன்றைய பஞ்சாங்கம் – நவம்பர் 5 2026 வியாழக்கிழமை
November 4, 2026
"ஆம்னி பஸ்கள் தீபாவளிக்கு அதிக கட்டணம் வசூலித்தால்.. பண்டிகை முடிந்து நடவடிக்கை!" அமைச்சர் வார்னிங்
November 4, 2026
டிரம்ப்பிற்கு எதிராக திரும்பும் துணை அதிபர் வேன்ஸ்! "அவரது" முடிவுகளே தோல்விக்கு காரணம் என பாய்ச்சல்
November 4, 2026
Our Big Interview With Ocarina of Time Producers Eiji Aonuma and Hidemaro Fujibayashi
November 5, 2026
The Legend of Zelda: Ocarina of Time Remake Full English Voice Cast Revealed
November 5, 2026
2 Teen Trainee Cabin Crew Invited To Party, Then Sexually Assaulted In Hyderabad
November 5, 2026
SSC Graduate Level Exam Answer Key, Response Sheet Out: Check Objection Window Details
November 5, 2026
Adam Driver Confirms His Role in Heat 2, Comments on Recent Michael Mann Shooting
November 5, 2026
Indian Bank Apprentice Recruitment 2026: How To Apply For 1,500 Posts
November 5, 2026