தேர்தல் மற்றும் சிறப்புத் தீவிரத் திருத்தக் குளறுபடிகளை எதிர்த்தும், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் டெல்லியில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன.

இந்தப் போராட்டங்கள் தங்களுடைய வணிகத்தைப் பாதிப்பதாக, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்குக் கடிதம் எழுதியுள்ளது அகில இந்திய வணிகர்கள் கூட்டமைப்பு (CAIT).

அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது…

“ஒவ்வொரு குடிமகனுக்கும் அரசியலமைப்பு வழங்கியுள்ள பேச்சுரிமை, கருத்துச் சுதந்திரம் மற்றும் அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் உரிமையை நாங்கள் முழுமையாக மதிக்கிறோம் என்பதை மிகத் தெளிவாகத் தெரிவித்துக்கொள்கிறோம்.

CAIT
CAIT

எங்களுக்கு பெருமளவு இழப்பு ஏற்பட்டுள்ளது

போராட்டம் நடத்தும் உரிமையை முன்நிறுத்தும் அதே வேளையில், இந்த ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவளிக்கும் நீங்களும் பிற அரசியல் கட்சிகளும், ஒவ்வொரு குடிமகனுக்கும் ஏதேனும் ஒரு தொழிலைச் செய்யவும், வர்த்தகம் அல்லது வணிகத்தை மேற்கொள்வதற்கும் உத்தரவாதம் அளிக்கும் அரசியலமைப்பின் 19(1)(g) பிரிவைச் சௌகரியமாக மறந்துவிட்டதாகவே தோன்றுகிறது.

கடந்த ஒரு மாதமாக, குறிப்பாக முக்கியமான பண்டிகைக் காலத்தில், மீண்டும் மீண்டும் நடத்தப்பட்ட போராட்டங்கள், பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் சாலை மறியல்களால் டெல்லியின் வர்த்தக சமுதாயத்திற்குப் பெருமளவு இழப்பு ஏற்பட்டுள்ளது.

திரு. ராகுல் காந்தி அவர்களே, நீங்கள் பின்வரும் சில வினாக்களுக்குப் பதிலளிக்க வேண்டும் என விரும்புகிறோம்:

1. வர்த்தகம் செய்வதற்கும் வாழ்வாதாரத்தை ஈட்டுவதற்கும் உள்ள உரிமையை விட போராட்டம் நடத்தும் உரிமை அவ்வளவு முக்கியமானதா? எந்தத் தொடர்பும் இல்லாத அரசியல் கருத்து வேறுபாடுகளுக்காக வர்த்தகர்களும் உழைக்கும் குடும்பங்களும் ஏன் விலையைக் கொடுக்க வேண்டும்?

2. நாட்டின் தலைநகரின் வணிக வாழ்க்கையை முடக்குவது அரசியல்படியும் தர்மத்தின்படியும் நியாயமானது என்று நீங்கள் கருதுகிறீர்களா?இந்தத் தொடர் ஆர்ப்பாட்டங்களால் பெரும் இழப்பைச் சந்தித்த வர்த்தகர்களுக்கும் சிறு தொழில்களுக்கும் யார் நஷ்டஈடு தருவார்கள்?

3. பேரணியில் பங்கேற்றவர்களிடம் உள்ளூர் சந்தைகளில் சென்று பொருட்களை வாங்குமாறு நீங்கள் விடுத்த வேண்டுகோளையும், அதே சந்தைகளுக்கு வாடிக்கையாளர்கள் வரமுடியாதபடி முடக்கும் உங்களது பேரணியையும் ஆர்ப்பாட்டங்களுக்கான ஆதரவையும் எப்படி ஒன்றாகப் பார்க்க முடியும்? இது உங்களது சொந்த நிலைப்பாட்டிற்கே முரண்பாடாக இல்லையா?

4. உங்கள் கட்சியும் அதன் அரசியல் கூட்டாளிகளும் ஆதரித்த போராட்டங்களால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு நீங்களும் காங்கிரஸ் கட்சியும் பொறுப்பேற்றுக்கொள்வீர்களா? அல்லது சாதாரண குடிமக்களின் வாழ்வாதாரம் என்பது அரசியல் போர்க்களத்தில் வெறும் பலிகடாதானா?

5. உங்களது சொந்த வணிகம், வாழ்வாதாரம் அல்லது தினசரி வருமானம் பாதிக்கப்படும் வகையில் இப்படிப்பட்ட நீண்டகால முடக்கம் ஏற்பட்டால் நீங்கள் ஆதரிப்பீர்களா? மற்றவர்கள் தங்களுக்கு என்று வந்தால் ஏற்றுக்கொள்ளாத ஒன்றை, ஒரு சிறு வர்த்தகர் மட்டும் ஏன் அமைதியாகச் சகிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது?

வர்த்தகப் பகுதிகள், பொதுமக்கள் நடமாட்டம் மற்றும் சாதாரண குடிமக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்காத வகையில், இதற்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே ஆர்ப்பாட்டங்களை நடத்துவதை உறுதி செய்யுமாறு உங்களையும் பிற அரசியல் கட்சிகளின் தலைமையையும் கேட்டுக்கொள்கிறோம்.

போராட்டம் நடத்துபவரின் குரலையும், வர்த்தகரின் வாழ்வாதாரத்தையும் ஜனநாயகமானது ஒரே நேரத்தில் பாதுகாக்க வேண்டும்.

உங்களது பதிலையும், அதைவிட முக்கியமாக உங்களது பொறுப்புள்ள நடவடிக்கையையும் நாங்கள் எதிர்நோக்குகிறோம்.” என அதில் கூறப்பட்டுள்ளது

More in TamilNews
நட்சத்திர விடுதியில் பிரம்மாண்ட திருமணம்.. ஒரே மேடையில் முதல்வர் விஜய் & த்ரிஷா! நட்சத்திர விடுதியில் பிரம்மாண்ட திருமணம்.. ஒரே மேடையில் முதல்வர் விஜய் & த்ரிஷா! November 5, 2026 ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ்.. GVM இயக்கத்தில் நடிக்கும் CM விஜய்! ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ்.. GVM இயக்கத்தில் நடிக்கும் CM விஜய்! November 5, 2026 'ராமாயணா' திரைப்படம் குறித்து இந்திய, சர்வதேச விமர்சகர்கள் சொல்வது என்ன? 'ராமாயணா' திரைப்படம் குறித்து இந்திய, சர்வதேச விமர்சகர்கள் சொல்வது என்ன? November 5, 2026 நம்பவே முடியாத காட்சி.. உடல் முழுக்க டாலர் நோட்டுகளுடன் சாலையில் ஓடிய ஆடு! அடுத்து நடந்தது என்ன? நம்பவே முடியாத காட்சி.. உடல் முழுக்க டாலர் நோட்டுகளுடன் சாலையில் ஓடிய ஆடு! அடுத்து நடந்தது என்ன? November 5, 2026 தேர்தல் தோல்விக்கு பிறகு உலகை தனது நடவடிக்கைகளால் திரும்பி பார்க்க வைக்க டிரம்ப் என்ன செய்யக்கூடும்? தேர்தல் தோல்விக்கு பிறகு உலகை தனது நடவடிக்கைகளால் திரும்பி பார்க்க வைக்க டிரம்ப் என்ன செய்யக்கூடும்? November 5, 2026 'ஆந்திராவில் கரை ஒதுங்கிய 8 உடல்கள்': கலங்கும் காசிமேடு மீனவ குடும்பங்கள் – தேடுதல் பணியில் தாமதம் ஏற்பட்டது ஏன்? 'ஆந்திராவில் கரை ஒதுங்கிய 8 உடல்கள்': கலங்கும் காசிமேடு மீனவ குடும்பங்கள் – தேடுதல் பணியில் தாமதம் ஏற்பட்டது ஏன்? November 5, 2026

See all 625 in TamilNews →

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *