கடந்த மாதம் தமிழ்நாட்டில் உள்நாட்டு விமான நிறுவனங்களுக்கான விமான எரிபொருள் மீதான மதிப்புக்கூட்டு வரியை (VAT) சென்னை விமான நிலையத்தில் 29%-ல் இருந்து 16%-ஆகவும், தமிழ்நாட்டின் பிற விமான நிலையங்களில் வெறும் 1%-ஆகவும் குறைக்கப்பட்டது.

வரி குறைக்கப்பட்ட போதிலும், பண்டிகைக் காலம் நெருங்கி வரும் வேளையில் விமானக் கட்டணங்கள் உயர்ந்துள்ளன.

இதனால் இந்த வரிக் குறைப்பு யாருக்குப் பயன் என்று கேள்வி எழுப்பியுள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி.

“தமிழ்நாட்டின் விமான எரிபொருள் வரி குறைப்பால் யார் பயன்பெறுகிறார்கள்?

விமானம்
விமானம்

ரூ.18,000 வரையில் உயர்வு

விமானப் பயணத்தை மேலும் சாமானியர்களுக்கும் எட்டக்கூடியதாக மாற்றும் நோக்கில், சென்னை விமான நிலையத்தில் ATF மீதான VAT-ஐ 29%-லிருந்து 16%-ஆகவும், பிற விமான நிலையங்களில் 1%-ஆகவும் தமிழக வெற்றிக் கழக (TVK) அரசு குறைத்துள்ளது.

இருப்பினும் பண்டிகைக் காலத்தில் வழக்கமாக ₹4,000–₹6,000 ஆக இருந்த விமானக் கட்டணங்கள் ₹14,000–₹15,000 வரையிலும், சில வழித்தடங்களில் ₹18,000 வரையிலும் உயர்ந்துள்ளன.

1. எரிபொருள் வரி குறைப்பால் கிடைக்கும் சேமிப்பை விமானக் கட்டணங்களைக் குறைத்து பயணிகளுக்கு வழங்குவதாக விமான நிறுவனங்கள் ஏதேனும் உறுதி அளித்துள்ளனவா?

2. இதன் மூலம் மாநில அரசுக்கு ஆண்டிற்கு எவ்வளவு வரி வருவாய் இழப்பு ஏற்படும்?

3. கட்டணக் குறைப்பு, புதிய வழித்தடங்கள் அல்லது கூடுதல் விமான சேவைகள் தொடர்பாக விமான நிறுவனங்களுக்கு ஏதேனும் அளவிடக்கூடிய இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளனவா?

4. இதன் மூலம் இதுவரை பயணிகளுக்குக் கிடைத்த நேரடிப் பயன்கள் என்னென்ன?

கனிமொழி பதிவு
கனிமொழி பதிவு

எரிபொருள் செலவைக் குறைப்பது விமான நிறுவனங்களின் வளர்ச்சிக்குத் துணைபுரியும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் மக்கள் வரிப்பணம் பொதுமக்களுக்கே பலன் தருவதாக அமைய வேண்டும்.

தமிழ்நாடு அரசு எவ்வளவு வரி வருவாயைத் தியாகம் செய்துள்ளது? அதற்குப் பதிலாக மாநில மக்களுக்கு – குறிப்பாக விமானக் கட்டணக் குறைப்பில் – என்ன பலன் கிடைத்துள்ளது?”

More in TamilNews
பவன் கல்யாண் விவாகரத்து.. 3வது மனைவி அன்னா லெஷ்னேவாவை பிரிய முடிவெடுத்துள்ளதாக அறிவிப்பு! பவன் கல்யாண் விவாகரத்து.. 3வது மனைவி அன்னா லெஷ்னேவாவை பிரிய முடிவெடுத்துள்ளதாக அறிவிப்பு! November 9, 2026 டென்ஷன் ஆன விஜய்.. ஒருத்தர் விடாமல் எல்லோரும் சென்னைக்கு வாங்க.. தவெக MLA-க்களுக்கு பறந்தது உத்தரவு! டென்ஷன் ஆன விஜய்.. ஒருத்தர் விடாமல் எல்லோரும் சென்னைக்கு வாங்க.. தவெக MLA-க்களுக்கு பறந்தது உத்தரவு! November 9, 2026 கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி 3 பேர் பலி.. ஓசூர் அருகே டாடா நிறுவனத்தில் சோகம்! கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி 3 பேர் பலி.. ஓசூர் அருகே டாடா நிறுவனத்தில் சோகம்! November 9, 2026 “அமெரிக்க இடைத்தேர்தல் நேர்மையாக நடந்ததா?” – டிரம்ப் கிளப்பிய சந்தேகம்.. நிலைப்பாட்டில் ட்விஸ்ட்! “அமெரிக்க இடைத்தேர்தல் நேர்மையாக நடந்ததா?” – டிரம்ப் கிளப்பிய சந்தேகம்.. நிலைப்பாட்டில் ட்விஸ்ட்! November 9, 2026 தீபாவளி ஓவர்.. சென்னைக்கு கூட்டம் கூட்டமாக வந்த மக்கள்! கிளாம்பாக்கத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம் தீபாவளி ஓவர்.. சென்னைக்கு கூட்டம் கூட்டமாக வந்த மக்கள்! கிளாம்பாக்கத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம் November 9, 2026 நைட்டு பேய் மழை இருக்கு! கோயம்புத்தூர் தொடங்கி கன்னியாகுமரி வரை.. 12 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்! நைட்டு பேய் மழை இருக்கு! கோயம்புத்தூர் தொடங்கி கன்னியாகுமரி வரை.. 12 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்! November 9, 2026

See all 650 in TamilNews →

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *