கடந்த திமுக ஆட்சியில் ரூ. 300 கோடி மதிப்பீட்டில் பிரமாண்டமாக அமைக்கப்பட்ட, ‘பெரியார் அறிவுலகம்’ மற்றும் அறிவியல் மையத்தைத் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கடந்த அக்டோபர் 16ஆம் தேதி திறந்து வைத்தார்.
இந்நிலையில் பெரியார் அறிவுலகத்திற்காக வாங்கப்பட்ட நூல்களில் ஊழல் நடந்துள்ளதாக எழுத்தாளர் பெருமாள் முருகன் குற்றம்சாட்டியிருந்தார்.

அதாவது பெரியார் அறிவுலகத்தில் ‘அகல்விளக்கு’ பதிப்பகத்தின் பெயரில் 1,800 நூல்கள் உள்ளதாகவும், 40 ஆண்டுகளாக இலக்கிய உலகில் இயங்கும் தான், அகல்விளக்கு பதிப்பகத்தைப் பற்றி கேள்விப்பட்டதில்லை என்றும் குறிப்பிட்ட எழுத்தாளர் பெருமாள் முருகன், மற்ற பதிப்பகங்களில் 300 பக்க நூலின் விலை ரூ.350 இருக்கும்போது அகல்விளக்கு பதிப்பகத்தின் 300 பக்க நூலின் விலை ரூ.1,445 ஆக இருக்கிறது.
நூல்களில் இடம்பெற்றுள்ள பன்னாட்டுத் தர புத்தக அடையாள எண்கள் (ISBN) போலியானவை என்றும், போலி நூல்களை விநியோகித்து கோடிக்கணக்கில் ஊழல் செய்தவர்கள் யார் எனவும் கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்த விவகாரம் அரசியல் ரீதியாகப் பெரும் சர்ச்சையாக மாறியிருக்கிறது.
பெரியார் நூலகப் புத்தகக் கொள்முதல் முறைகேடு யார் ஆட்சியில் நடந்தது என்பது குறித்து ஆளும் தவெகவுக்கும் எதிர்க்கட்சியான திமுகவுக்கும் இடையே மோதல் தீவிரமடைந்திருக்கிறது.
இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக முன்னாள் அமைச்சர் சேகர் பாபுவிடம் இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ” பெரியார் நூலகத்திற்கு வாங்கப்பட்ட புத்தகங்கள் எல்லாம் திமுக ஆட்சியில் வாங்கப்பட்டவை அல்ல.
ஜூன் மாதத்தில் முத்திரையிடப்பட்ட புத்தகங்கள் அந்த நூலகத்தில் இருக்கின்றன. ஜூன் மாதத்தில் யாருடைய ஆட்சி நடைபெற்றது. தவெகவின் ஆட்சிதான் நடைபெற்றது.

இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு பல புத்தகங்கள் அந்த நூலகத்திற்கு வாங்கியதை சமூக ஆர்வலர்கள் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். ஆகவே முழுமையான உண்மை வந்த பிறகு மக்களுக்கு இது குறித்து தெரிய வரும்.
எங்களுடைய ஆட்சிக் காலத்தில் எங்கள் முதல்வர் படி படி என்று சொன்னாரே தவிர விசுவல் வாரியர்ஸை போல தவறு செய்துவிட்டு திருந்துங்கள் என்று சொல்ல மாட்டார். படி படி என்று சொல்லக்கூடியவர் எங்கள் முதல்வர். இன்றைய முதல்வர் குடி குடி என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்” என்று பேசியிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb
உணவுக் கழிவுகளை 97% குறைத்த தென் கொரியா: நூதன முயற்சியால் சாதித்தது எப்படி? உலக நாடுகள் கற்றுக் கொள்ள வேண்டியது என்ன?
November 9, 2026
இதயம், நுரையீரல் முதல் மூளை வரை காற்று மாசுபாடு ஏற்படுத்தும் உடல்நல பாதிப்புகள்
November 9, 2026
அமெரிக்க அதிபர் டிரம்பின் இடைக்காலத் தேர்தல் படுதோல்வியால் இந்தியா பயனடைய முடியுமா?
November 9, 2026
"ரோட்டில் நின்றால் கொலை… தட்டிக்கேட்டால் படுகொலை" – தவெக-வுக்கு EPS சரமாரி கேள்வி!
November 9, 2026
இன்று எந்தெந்த மாவட்டங்களில் வெளுக்கும் கனமழை! வானிலை மையம் அப்டேட் !
November 9, 2026
'கடல்நீரைக் குடிநீராக்கும்' திட்டத்தை எதிர்க்கும் தூத்துக்குடி கரைவலை மீனவர்கள் – பிபிசி கள ஆய்வு
November 9, 2026
Emily Watson Cast in British Drama From Dominic Cooke ‘John Daniel’
November 9, 2026
‘The Other Elliot Sister’ Greenlit at BritBox With Launch of Austen Anthology Franchise (Exclusive)
November 9, 2026
Prime Video Unveils ‘Maxton Hall’ Final Season Trailer
November 9, 2026
Toukie Smith, Top Runway Model and ‘227’ Actress, Dies at 74
November 9, 2026
Vodafone Idea-வா இது.. அடுத்த 28 நாட்களுக்கு வாய்ஸ், 1.5 ஜிபி டேட்டா, OTT மட்டுமில்ல.. அன்லிமிடெட் 5ஜி டேட்டா!
November 9, 2026
"TVK MLA ஒருவரால் மாவட்ட ஆட்சியருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை!" – கனிமொழி அதிரடி!
November 9, 2026