அமெரிக்க மக்கள் ஈரான் போரில் கடும் அதிருப்தியில் உள்ளனர். அதன் விளைவாகவே, நாடாளுமன்றத் தேர்தலில் குடியரசுக் கட்சி (ட்ரம்ப் கட்சி) பின்னடைவைச் சந்தித்துள்ளது.
இதனால், ‘நவம்பர் 3-ம் தேதிக்குப் பின்’ என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குறித்திருந்த தேதிக்குப் பின் கூட, ட்ரம்ப் தாக்குதல் எதையும் ஆரம்பிக்கவில்லை.
நேற்று CNN நேர்காணலில் பேசும்போது ட்ரம்ப், “தாக்குதல் ஈரானுடன் ஏற்படும் ஒப்பந்தத்தையடுத்து முடிவாகும்” என்று கூறியிருக்கிறார்.

ஈரானின் நிலைப்பாடு
ஈரானின் தற்போதைய நிலைப்பாடு குறித்து ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி, “அமெரிக்க வாக்காளர்கள் தங்களுக்கான முடிவை எடுத்துவிட்டார்கள்.
இனி வெள்ளை மாளிகை தனது முடிவை எடுக்க வேண்டிய நேரம்.
நாங்கள் முன்வைத்த 2 நாள் திட்டம் இன்னமும் அப்படியேதான் இருக்கிறது:
அனைத்து முனைகளிலும் போரை முடிவுக்குக் கொண்டுவருவது உட்பட எங்களது நிபந்தனைகளை நிறைவேற்றுங்கள். அதன் நேர்மறையான முடிவுகளை நீங்கள் காண்பீர்கள்.
அல்லது போரையே தேர்ந்தெடுக்க விரும்பினால், விழிப்புடனும் போர் அனுபவத்துடனும் காத்திருக்கும் எங்களது போர்வீரர்கள் உங்கள் மீது நரகத்தை இறக்குவதையும் பாருங்கள்.” என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இஸ்ரேலைச் சாடி…
இன்னொரு பதிவில் அமெரிக்காவை ஈரான் போரில் இஸ்ரேல் இழுத்து விட்டதைச் சாடி, “அமெரிக்க மக்களில் பெரும்பான்மையினர் இஸ்ரேலின் நடவடிக்கைகள் மீது கடுமையான அருவருப்பும் அதிருப்தியும் அடைந்துள்ளதை அமெரிக்க அதிபர் தெளிவாக உணர்ந்துள்ளார்.
ஆனால், ஆச்சரியப்படும் விதமாக, மக்கள் ஏன் அப்படி நினைக்கிறார்கள் என்பதற்கான காரணம் புரியாமல் அவர் குழப்பத்தில் இருப்பது போல் தெரிகிறது.
அமெரிக்காவைத் தங்களின் முடிவில்லாப் போர்களில் அமெரிக்க நிர்வாகங்களை ஏமாற்றி இழுத்துவிடுவதைப் பார்த்து அமெரிக்க மக்கள் முற்றிலும் சலித்துப்போய் அலுத்துவிட்டார்கள்.
அவர்கள் பொறுத்தது போதும் என்ற அளவுக்கு வந்துவிட்டார்கள். அதேபோல்தான் நமது பிராந்தியமும்” என்று பதிவிட்டுள்ளார் அப்பாஸ் அராக்சி.
‘இஞ்சி வெல்லம்’ எப்ப ரிலீஸ் தெரியுமா ? காதல் காவியத்தின் மூலம் COMEBACK கொடுப்பாரா மணிரத்னம் !
November 11, 2026
சஞ்சய் காந்தி மறைவுக்குப் பிறகு மேனகா வீட்டை விட்டு வெளியேறியது ஏன்? சோனியா புத்தகத்தில் கூறியது என்ன?
November 11, 2026
2014 சண்டியர் Vs 2026 சண்டியர்… சர்ச்சைக்கு காரணம் தலைப்பா, கமலா?
November 11, 2026
TVK MLA-க்கள் Meeting: நடவடிக்கை எடுப்பாரா CM Vijay? | Political Lab
November 11, 2026
'ராகுல் காந்தி தன் 7வது பிறந்தநாளை தனிமையில் கொண்டாட காரணம்…' – நினைவுகளைப் பகிர்ந்த சோனியா காந்தி
November 11, 2026
ஆபாசக் குறுஞ்செய்தி? “ஆட்சியரே புகார் அளித்தால்தான் நடவடிக்கையா?" – தமிழிசை சௌந்தரராஜன் காட்டம்
November 11, 2026
Calpak Discount Code: 60% Off | November 2026 | Condé Nast Traveler
November 11, 2026
When to Visit Machu Picchu for Clear Views and Fewer Crowds
November 11, 2026
The Beachy Bungalow in La Jolla That Let Me Cosplay as a California Surfer
November 11, 2026
யாரையும் அழைக்காமல் திருமணம் செய்ய இதுதான் காரணம்.. பிரியா பவானி சங்கர் திடீர் பதிவு!
November 11, 2026
Kane targets biggest team prizes ahead of record-breaking England cap
November 11, 2026
Frame-அ பாருங்க ஜி.. இந்த பக்கம் ஸ்டாலின்.. அந்த பக்கம் ரஜினி.. நடுவே நடந்து வரும் மாப்பிள்ளை அனிருத்!
November 11, 2026