அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரதமர் நரேந்திர மோதியைப் புகழ்ந்து பேசியதன் பின்னணியில் இந்தியா பரப்புரை நிறுவனங்களுக்குப் பணம் செலுத்தியதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியின்படி, அமெரிக்க நிறுவனங்கள் தாக்கல் செய்த FARA ஆவணங்களில், இந்திய அரசு அதிகாரிகளுக்கும் வெள்ளை மாளிகைக்கும் இடையே எட்டு தொலைபேசி அழைப்புகளை ஏற்பாடு செய்ததாக SHW Partners நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. மற்றொரு நிறுவனமான மெர்குரி பப்ளிக் அஃபேர்ஸுக்கு மாதம் 75,000 டாலர் வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, இந்த நிறுவனங்களின் பங்களிப்பு குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் விளக்கமளித்துள்ளது. வெள்ளை மாளிகையுடனான தொடர்புகளை ஏற்படுத்த பரப்புரை நிறுவனங்களைப் பயன்படுத்துவது குறித்தும், இருதரப்பு உறவுகளில் அவற்றின் பங்கு குறித்தும் இந்தக் கட்டுரை அலசுகிறது.

See all 601 in TamilNews →

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *