சென்னை தனியார் விடுதியில் இன்று காலை 11 மணிக்கு தவெகவின் 109 எம்.எல்.ஏக்களையும் நேரில் அழைத்து முக்கிய ஆலோசனையில் ஈடுபடவிருக்கிறார் முதல்வர் விஜய். நவம்பர் 13 ஆம் தேதிக்குப் பிறகு ஆட்சியின் மீது எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வர வாய்ப்பிருப்பதால் அதற்கு முன்னெச்சரிக்கையாகத்தான் இந்த கூட்டம் என்கின்றனர் விவரமறிந்தவர்கள்.

CM Vijay
CM Vijay

கடந்த மே 13 ஆம் தேதி சட்டமன்றத்தில் தவெக அரசு தனது பெரும்பான்மையை நிரூபித்தது. மரபுப்படி பெரும்பான்மை நிரூபிக்கப்பட்ட 6 மாதங்களுக்கு பிறகே அடுத்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் முன்னெடுப்பர். அந்தவகையில் தவெக அரசு பெரும்பான்மையை நிரூபித்து நவம்பர் 13 ஆம் தேதியோடு ஆறு மாத காலம் நிறைவடைகிறது.

இந்நிலையில்தான், முன்னெச்சரிக்கையாக தவெகவின் அத்தனை எம்.எல்.ஏக்களையும் சென்னை வரவழைத்து முதல்வர் சந்திக்கவிருக்கிறார். ஈ.சி.ஆரில் உள்ள தனியார் விடுதியில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடக்கவிருக்கிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் ஒவ்வொரு எம்.எல்.ஏவாக அலைபேசியில் தொடர்புகொண்ட அமைச்சர் புஸ்ஸி ஆனந்த், தீபாவளி வாழ்த்துகளோடு புதன் கிழமை ஒரு முக்கிய கூட்டம் இருக்கிறது சென்னை வந்துவிடுங்கள் எனவும் கூறியிருக்கிறார். கூட்டம் எங்கே நடக்கும் என்பதை பின்னர் தெரிவிக்கிறோம் என தலைமை சார்பில் சொல்லப்பட்டிருக்கிறது. இதிலேயே பல எம்.எல்.ஏக்களும் குழப்பமடைந்தனர்.

கூட்டம் நடக்கவிருக்கும் ரெசார்ட்
கூட்டம் நடக்கவிருக்கும் ரெசார்ட்

வழக்கமாக இதேமாதிரியான கூட்டங்கள் அனைத்தும் பனையூரில்தானே நடக்கும்…இப்போது என்ன புதிதாக என தங்களுக்குள்ளேயே மாறி மாறி போன் அடித்து பேசியும் எதுவும் புலப்படவில்லை. பெரும்பாலான எம்.எல்.ஏக்கள் நேற்றிரவே சென்னை வந்தடைந்துவிட்டனர். ரீச் ஆகிவிட்ட தகவலை தலைமைக்கு பாஸ் செய்த போதும் கூட்டம் நடக்கும் லொகோஷனை மட்டும் தலைமை சொல்லவே இல்லை. இன்று காலை வரைக்குமே எம்.எல்.ஏக்களுக்கு எங்கே எத்தனை மணிக்கு கூட்டமென தெரியப்படுத்தவே இல்லை. காலை 9 மணிக்குதான் ஈ.சி.ஆரில் ஒரு ரெசார்ட்டில் 11 மணிக்கு கூட்டமென தகவல் கொடுத்திருக்கின்றனர். சிட்டிக்குள் தங்கியிருந்த எம்.எல்.ஏக்கள் இப்போது ஈ.சி.ஆருக்கு வண்டியை விரட்டிக் கொண்டிருக்கின்றனர். இதற்கிடையில் ரெசார்ட்டில் 3 நாட்களுக்கு அறைகள் புக் செய்யப்பட்டிருப்பதாக தகவல் வரவே, என்னதான் நடக்கப் போகிறது…ஏன் இவ்வளவு ரகசியம் என்கிற குழப்பத்துடனேயே எம்.எல்.ஏக்கள் ஈ.சி.ஆருக்கு பயணித்துக் கொண்டிருக்கின்றனர்.

இதுதொடர்பாக நம்மிடம் பேசிய முதல்வருக்கு நெருக்கமான சீனியர்கள் சிலர், ‘நவம்பர் 13 க்குப் பிறகு நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படலாம். அதை மையமாக வைத்து எங்களின் எம்.எல்.ஏக்களுக்கு திமுகவினரும் அதிமுகவினரும் தூண்டில் போட முயல்கின்றனர். இதுசம்பந்தமாக எம்.எல்.ஏக்களை எச்சரித்து முக்கியமாக சில அறிவுரைகளையும் முதல்வர் வழங்கவிருக்கிறார். அந்தத் தகவல்கள் வெளியில் கசியக்கூடாது என்பதற்காகத்தான் கட்சி அலுவலகத்தில் கூட்டத்தை நடத்தாமல் ரெசார்ட்டில் நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது’ என்றனர்.

More in TamilNews
செஞ்சி சிறுமி மாயம்.. அடித்து ஆடும் சிபிசிஐடி டிஐஜி விக்ரமன்.. விசாரணையில் இறங்கிய 2 புதிய தலைகள்! செஞ்சி சிறுமி மாயம்.. அடித்து ஆடும் சிபிசிஐடி டிஐஜி விக்ரமன்.. விசாரணையில் இறங்கிய 2 புதிய தலைகள்! November 13, 2026 முடங்கிய மைக்ரோசாப்ட் சேவைகள்.. அவுட்லுக், டீம்ஸ், கோபைலட் காலியானது! பல கோடி பேர் அவதி! முடங்கிய மைக்ரோசாப்ட் சேவைகள்.. அவுட்லுக், டீம்ஸ், கோபைலட் காலியானது! பல கோடி பேர் அவதி! November 13, 2026 விஜய் அரசுக்கு எதிராக அரசு ஊழியர்கள்.. திமுக, அதிமுகவுக்கு சாதகமாக போன தபால் ஓட்டுகள்.. பின்னணி என்ன விஜய் அரசுக்கு எதிராக அரசு ஊழியர்கள்.. திமுக, அதிமுகவுக்கு சாதகமாக போன தபால் ஓட்டுகள்.. பின்னணி என்ன November 13, 2026 ஒன்றல்ல.. இரண்டல்ல.. 3 திருமணத்தை மீறிய உறவு! பெண் மோகத்தால் பதவியை இழந்த ஜென்சன் ஹுவாங் ஒன்றல்ல.. இரண்டல்ல.. 3 திருமணத்தை மீறிய உறவு! பெண் மோகத்தால் பதவியை இழந்த ஜென்சன் ஹுவாங் November 13, 2026 ஐக்கிய அரபு அமீரகத்தில் கோர விபத்து! லாரி மோதி தீப்பிடித்ததில் இந்தியர்கள் உட்பட 14 பேர் பலி ஐக்கிய அரபு அமீரகத்தில் கோர விபத்து! லாரி மோதி தீப்பிடித்ததில் இந்தியர்கள் உட்பட 14 பேர் பலி November 13, 2026 ‘லே' பகுதிக்குள் 60 நாள் நடமாடக்கூடாது.. நள்ளிரவில் சோனம் வாங்சுக் திடீர் வீடியோ.. வீட்டு காவலில் அடைப்பு? ‘லே' பகுதிக்குள் 60 நாள் நடமாடக்கூடாது.. நள்ளிரவில் சோனம் வாங்சுக் திடீர் வீடியோ.. வீட்டு காவலில் அடைப்பு? November 12, 2026

See all 701 in TamilNews →

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *