தமிழ்நாடு அரசின் சமூகநீதி மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறையால் செயல்படுத்தப்படும் அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வித் திட்டம் வெளிநாடுகளில் முதுகலை மற்றும் முனைவர் (Ph.D) பட்டம் பயில விரும்பும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ‘ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் மீது பழி போட்டு, அவர்களின் கல்வியை முடக்காமல், அந்த மாணவர்களுக்குச் சேர வேண்டிய கல்வி உதவித்தொகையை இந்த Dummy முதலமைச்சர் உடனடியாக விடுவிக்க வேண்டும்” என்று எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியிருக்கிறார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் எக்ஸ் தளப்பதிவில், ” நம் திராவிட மாடல் ஆட்சியில் மேம்படுத்தப்பட்ட அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி திட்டத்தின் கீழ் ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்களுக்கு வழங்க வேண்டிய கல்வி உதவித்தொகையை வழங்காமல் இழுத்தடிக்கிறது இந்த சோப்ளாங்கி அரசு.
சமூக நீதித்துறை என்று பெயர் மாற்றிவிட்டு, அண்ணல் அம்பேத்கர் பெயரிலான திட்டத்தைக் குழித்தோண்டி புதைக்கும் இந்த கோமாளி ஆட்சியாளர்களை வன்மையாக கண்டிக்கிறேன்.
இந்தாண்டு 365 மாணவர்களை தேர்வு செய்துவிட்டு, 64 பேருக்கு மட்டுமே உதவித்தொகை விடுவிக்கப்பட்டுள்ளது. திட்டத்தில் தேர்வாகியும் வெளிநாடு சென்று படிக்க முடியாமல் மாணவர்கள் பலர் தவிப்பில் உள்ளனர்.
இந்தத் திட்டத்தை நம்பி பிள்ளைகளை வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்த பெற்றோர்கள் நகைகளை அடகு வைத்தும் – வட்டிக்கு கடன் வாங்கியும் கட்டணம் செலுத்தி வருகின்றனர்.
வழக்கம் போல பில் வரவில்லை – Mail வரவில்லை என்று ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் மீது பழி போட்டு, அவர்களின் கல்வியை முடக்காமல், அந்த மாணவர்களுக்குச் சேர வேண்டிய கல்வி உதவித்தொகையை இந்த Dummy முதலமைச்சர் உடனடியாக விடுவிக்க வேண்டும்” என்று கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb
பயிற்சி பெண் மருத்துவரிடம் பாலியல் அத்துமீறல்? DYFI போராட்டம்; அரசு டாக்டர் கைதான பின்னணி என்ன?
November 15, 2026
விஜயபாஸ்கரால் விஜய்க்கு நெருக்கடி.. பிடியை இறுக்கும் ஈடி! 2வது முறையாக பறந்த சம்மன்! பரபர பாலிடிக்ஸ்
November 15, 2026
சிக்கல் சிங்கார வேலவர் கோயிலில் சக்திவேல் வாங்கும் நிகழ்வு! முருகன் திருமேனியெங்கும் வியர்வை!
November 15, 2026
"நான் சாகல".. கொலையான 8ம் ஆண்டில் உயிருடன் வந்த பெண்.. அப்பாவியை சிறையிலடைத்த போலீசுக்கு ஷாக்.. செல்போனால் வந்த வினை
November 15, 2026
உ.பியிலும் வேலையை காட்டும் ராகுல் காந்தி! சீட் பிரிப்பதில்.. அகிலேஷை டென்ஷனாக்குகிறது காங்கிரஸ்!
November 15, 2026
பாகிஸ்தானில் இருந்து விரிக்கப்பட்ட வலை.. காதல் மயக்கத்தில் ரயில் தண்டவாளத்தை தகர்த்த இருவர் கைது!
November 15, 2026
பயிற்சி பெண் மருத்துவரிடம் பாலியல் அத்துமீறல்? DYFI போராட்டம்; அரசு டாக்டர் கைதான பின்னணி என்ன?
November 15, 2026
Mental health is no joke – but I've turned it into a stand-up routine