90’ஸ், 2000-களில் வெளியான பல தமிழ் திரைப்படங்களில் நடிகர் வையாபுரி கட்டாயம் நடித்திருப்பார்.

அதன் பிறகும், அவர் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும், அவருடைய ‘கரியர் பீக்’ என்று 90’ஸ் மற்றும் 2000-த்தைக் கூறலாம். பிக் பாஸ் முதல் சீசனில் போட்டியாளராகக் கலந்துகொண்டிருந்தார்.

இவர் நேற்று முன்தினம் (செப்டம்பர் 2), இன்ஸ்டாகிராமில் 1 லட்சம் ஃபாலோயர்களை எட்டியதையொட்டி எமோஷனலான வீடியோ ஒன்றைப் போஸ்ட் செய்திருந்தார்.

அந்த வீடியோவில் வையாபுரி, “நான் இன்ஸ்டாகிராமில் சேர்ந்த ஒரு மாசத்துலேயே ஒரு லட்சம் பேர் ஃபாலோ பண்றாங்க. அதுல ரொம்ப மகிழ்ச்சி.

நடிகர் வையாபுரி
நடிகர் வையாபுரி

நான் ஏன் இன்ஸ்டாகிராமில் சேர்ந்தேன்னா, ஒரு பெரிய புரொடக்‌ஷன் மேனேஜர், டைரக்டரைப் பார்ப்பதற்காக என்னை ஆபீஸுக்குக் கூப்பிட்டிருந்தாரு.

ஆனால், அந்த டைரக்டரோ, ‘அவரு பழைய ஆர்டிஸ்ட். நான் இல்லை’னு சொல்லிடுங்கனு சொன்னாரு. எனக்கு ரொம்ப சங்கடமா இருந்துச்சு.

அந்த மேனேஜர் வெளிய வந்ததும், ‘டைரக்டருக்கு உங்கள பாக்க விருப்பமில்லையாம்’னு சொன்னாரு.

இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக்ல இருந்து நெறைய பேர் புதுசு புதுசா வர்றாங்க. இவரு ரொம்ப பழசுனு சொல்லியிருக்காரு. இது என் மனசை ரொம்ப பாதிச்சுருச்சு.

அதுக்குப் பிறகுதான், நாம ஏன் இன்ஸ்டாகிராம் ஆரம்பிக்கக்கூடாதுனுதான் ஆரம்பிச்சேன்.

புது டைரக்டர்களுக்கு இன்ஸ்டா, ஃபேஸ்புக் பிடிச்சுருக்கு. அதுக்காக அவங்களுக்கு நியாபகப்படுத்தறதுக்காவது அனுபவத்தை ஷேர் பண்ணிக்கலாம்னுதான் ஆரம்பிச்சேன்.

இந்த ஒரு மாசத்துல எவ்வளவு பேர் என் மேல அன்பு வெச்சுருக்கீங்கனு தெரிஞ்சுது. இது போதும் எனக்கு” என்று பேசியிருக்கிறார்.

More in Cinema
செலிப்ரிட்டி vs காமன் மேன்.. பிக் பாஸ் 10 வீட்டை அலறவிடப் போகும் 19 போட்டியாளர்கள்.. ஃபைனல் லிஸ்ட்! செலிப்ரிட்டி vs காமன் மேன்.. பிக் பாஸ் 10 வீட்டை அலறவிடப் போகும் 19 போட்டியாளர்கள்.. ஃபைனல் லிஸ்ட்! September 6, 2026 BB10: 1 லட்சம் பேர்ல 3 பேருக்குத்தான் அதிர்ஷ்டம்.. பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த சாமானியர்கள்! BB10: 1 லட்சம் பேர்ல 3 பேருக்குத்தான் அதிர்ஷ்டம்.. பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த சாமானியர்கள்! September 6, 2026 Bigg Boss 10: ஒரே மேடையில் 3 போட்டியாளர்கள்.. விஜய் சேதுபதி வைத்த ட்விஸ்ட்..  எலிமினேட்டான நடிகை! Bigg Boss 10: ஒரே மேடையில் 3 போட்டியாளர்கள்.. விஜய் சேதுபதி வைத்த ட்விஸ்ட்..  எலிமினேட்டான நடிகை! September 6, 2026 Bigg Boss 10: பிக் பாஸ் வீட்டுக்குள் சட்டசபையா? சீக்ரெட் ரூம் ரகசியத்தை உடைத்த விஜய் சேதுபதி! Bigg Boss 10: பிக் பாஸ் வீட்டுக்குள் சட்டசபையா? சீக்ரெட் ரூம் ரகசியத்தை உடைத்த விஜய் சேதுபதி! September 6, 2026 சாண்டி மாஸ்டர் தான் என் ஃபேவரிட்.. பிக் பாஸ் 10-ல் களமிறங்கும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' ஷாதிகா! சாண்டி மாஸ்டர் தான் என் ஃபேவரிட்.. பிக் பாஸ் 10-ல் களமிறங்கும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' ஷாதிகா! September 6, 2026 இன்னொரு காருக்காக கிஸ் பண்ண மாட்டேன்.. சாய் பல்லவி பேட்டியின் பின்னணியில் இருக்கும் உண்மை என்ன? இன்னொரு காருக்காக கிஸ் பண்ண மாட்டேன்.. சாய் பல்லவி பேட்டியின் பின்னணியில் இருக்கும் உண்மை என்ன? September 6, 2026

See all 171 in Cinema →

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *