மது பிரியர்களுக்கு ஓல்டு மாங்க் ரம் என்றால் தெரியாமல் இருக்க வாய்ப்பு இல்லை. ஆனால் அந்த ரம் உண்மையில் ரம் இல்லை என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா?.
மகாராஷ்டிராவில் ஓல்ட் மாங்க்’ (Old Monk) மதுபானத்தை ரம் என்ற பெயரில் விற்க முடியாது என்று இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் மும்பை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இந்தியாவில் விற்கப்படும் பெரும்பாலான ‘ரம்’ வகைகள் உண்மையில் ‘ரம்’ இல்லை என்பதை உணவுப் பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் இந்த நடவடிக்கை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
அதேபோல, பெருமளவில் விற்பனையாகும் இந்தியத் தயாரிப்பு வெளிநாட்டு வகை (IMFL) விஸ்கிகளும் உண்மையில் விஸ்கி அல்ல. அவை ‘ரம்’ வகையைச் சேர்ந்தவையும் அல்ல என்று தெரிய வந்துள்ளது. இதனால் மதுபானம் தொடர்பான இந்த முக்கியமான முடிவுகள் `குடி’மகன்கள் பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
உங்களுக்குப் பிடித்த ஏலக்காய் டீயைக் குடிக்க ஒரு டீ கடைக்குச் செல்கிறீர்கள். தண்ணீர் கொதிக்கவைக்கப்பட்டு, அதில் டீ சுவையூட்டும் பொருள் ஒன்று சேர்க்கப்பட்டு உங்களுக்குப் பரிமாறப்படுகிறது. நீங்கள் அதை டீயாகவே குடிக்கிறீர்கள்; ஆனால், அதில் தேயிலையோ, பாலோ அல்லது சர்க்கரையோ சேர்க்கப்படவில்லை என்பது உங்களுக்குச் சொல்லப்படுவதில்லை.

நீங்கள் குடித்தது உண்மையான டீ அல்ல. அது டீ சுவை கொண்ட ஒரு பானம் மட்டுமே என்று தெரிந்தால் உங்களுக்கு எப்படி இருக்கும். அது போன்ற ஒரு நிலைதான் ரம் விவகாரத்தில் நடந்து கொண்டிருக்கிறது.
ரம், விஸ்கி உண்மையில் ரம், விஸ்கி கிடையாது!
இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மதுபானங்கள் மீதான லேபிளிங் விதிமுறைகளை இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் அமல்படுத்தி வருவதாலும், இது தொடர்பாக மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தாலும் இந்தியர்கள் தங்கள் விருப்பமான மதுபானங்கள் குறித்த ஒரு முக்கிய உண்மையை இப்போது தெரிந்து கொள்ள ஆரம்பித்துள்ளனர்.
அதாவது, தாங்கள் வழக்கமாக அருந்தும் விஸ்கி உண்மையில் விஸ்கி அல்ல என்பதையும், தங்களுக்குப் பிடித்தமான ரம் உண்மையில் ரம் வகையைச் சார்ந்ததே அல்ல என்பதும் அவர்களுக்கு தெரிய வந்துள்ளது.
ஓல்டு மாங்க் விற்பனை நிறுத்தம்!
இப்பிரச்னையால் மகாராஷ்டிராவில் ஓல்டு மாங்க் ரம் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் அதன் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளதால், ஒரு நாளைக்கு ரூ. 1 கோடி வணிக இழப்பையும் அது சந்தித்து வருகிறது. இதனால் மற்ற பிராண்டுகளும் பயந்து, தங்கள் லேபிள்களை மறுவடிவமைப்பு செய்து வருகின்றன.
ஓல்டு மாங்க் ரம் தயாரிக்கும் மோகன் ராக்கி ஸ்பிரிங்வாட்டர் ப்ரூவரீஸும் இதனை உறுதி செய்துள்ளது. ஆனால் இந்த விவகாரம் தற்போது லேபிளிடுதலையும் தாண்டிச் சென்றுள்ளது, இதனை ரம் ஆக விற்க முடியாது என்று இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தெரிவித்துள்ளது. இது போன்ற பிரச்னையால்தான் இந்திய மதுபானங்கள் அமெரிக்கா, ஐரோப்பா, பிரிட்டன் போன்ற நாடுகளில் அங்கீகரிக்கப்படாமல் இருக்கிறது.
உலகம் முழுவதும், விஸ்கி, ரம் அல்லது பிராந்தியில் உள்ள ஆல்கஹால், அவற்றை காய்ச்சும் செயல்முறையின் போது உருவாக்கப்படுகிறது. இந்தியாவில் பெருமளவில் சந்தைப்படுத்தப்படும் மதுபானங்களில் விஸ்கி மற்றும் ரம் போலக் காட்டுவதற்காக சுவையூட்டிகளும் நிறமூட்டிகளும் சேர்க்கப்படுகின்றன.

உலகிலேயே விஸ்கியை அதிக அளவில் நுகரும் நாடாக இந்தியா திகழ்கிறது. ஆனால் முரண்பாடான விஷயம் என்னவென்றால், இங்கு நுகரப்படும் அந்த ‘விஸ்கி’ உண்மையில் விஸ்கியே அல்ல.
ஆகஸ்ட் மாத தொடக்கத்தில், ஓல்ட் மங்க், ஆன்டிகுவிட்டி ப்ளூ விஸ்கி, ராயல் சேலஞ்ச் விஸ்கி மற்றும் பேக்பைப்பர் டீலக்ஸ் விஸ்கி உள்ளிட்ட பிரபலமான மதுபான பிராண்டுகளின் சில வகைகளில் செயற்கை சுவையூட்டிகள் பயன்படுத்தப்பட்டதாக கூறி அவற்றின் விற்பனைக்கு இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தடை விதித்தது. ரம்முடன் ரம் சுவையையோ அல்லது விஸ்கியுடன் விஸ்கி சுவையையோ சேர்க்கும் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட உற்பத்தி நடைமுறை எதுவும் இந்தியாவில் இல்லை,” என்று அந்த ஒழுங்குமுறை ஆணையம் கூறியது.
இதன் மூலம் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் சொல்ல வருவது என்னவென்றால், அந்த ரம் ஒரு ரம் அல்ல, மாறாக ரம் சுவையூட்டப்பட்ட ஒரு மதுபானம் என்பதுதான். கடந்த 3ம் தேதி ஓல்ட் மங்கை ரம் என்று விற்க முடியாது என இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் பம்பாய் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தது. இந்த வழக்கு வரும் 11ம்தேதி உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட இருக்கிறது.
உலகளவில் விஸ்கி தானியங்களிலிருந்து, முக்கியமாக பார்லி (மால்ட்) மற்றும் மக்காச்சோளத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது. அதேபோல், ரம் கரும்புச் சாற்றிலிருந்தும், பிராந்தி திராட்சைச் சாற்றிலிருந்தும் தயாரிக்கப்படுகின்றன. நொதித்தல் செயல்முறையின் போது ஆல்கஹால் உற்பத்தி செய்யப்படுகிறது, மேலும் காய்ச்சி வடிகட்டுதல் அதன் தன்மையை அதிகரிக்கிறது. இந்தியாவில், பிரீமியம் சிங்கிள் மால்ட்களைத் தவிர, பெரும்பாலான விஸ்கிகள் மற்றும் ரம்கள் நியூட்ரல் ஸ்பிரிட்ஸிலிருந்து தயாரிக்கப்படுகின்றன.
எத்தனாலில் இருந்து தயாரிப்பு
இவை பெரும்பாலும் கரும்புப்பாகு மற்றும் இப்போதெல்லாம் சில தானியங்களிலிருந்தும் பெறப்படுகின்றன. கரும்புப்பாகு என்பது சர்க்கரை சுத்திகரிப்பு செயல்முறையின் ஒரு துணைப் பொருளாகும். உலகின் பெரும்பாலான பகுதிகளில் செய்யப்படுவது போல தானியங்களிலிருந்து தயாரிக்கப்படாமல், இந்தியாவில் பெருமளவில் மதுபானம் கரும்புப்பாகுவிலிருந்து தயாரிக்கப்பட்டதற்கு ஒரு வரலாற்று காரணம் உள்ளது.
இது எங்கள் நிலத்தில் உபரியாக இருந்த கரும்புப்பாகுவைப் பயன்படுத்தும் ஒரு வணிக முயற்சியாக இருந்தது. எங்கள் கோடிக்கணக்கான மக்களுக்கு உணவளிக்க எங்களுக்கு தானியம் தேவைப்பட்டது. நியூட்ரல் ஸ்பிரிட்ஸ் என்பவை எத்தனால் தான். ஆம், வேதியியல் ரீதியாகப் பார்த்தால், அரசாங்கம் பெட்ரோலுடன் கலக்கும் அதே எத்தனால் தான். அவைதான் ரம் மற்றும் விஸ்கி தயாரிக்க பயன்படுகிறது. ரம் என்பது ரம் அல்ல, அது ரம் சுவையூட்டப்பட்ட எத்தனால். விஸ்கி என்பது விஸ்கி அல்ல, அது விஸ்கி சுவையூட்டப்பட்ட எத்தனால் ஆகும்.
நியூட்ரல் ஸ்பிரிட்ஸ் என்பது 96% ஆல்கஹால் அளவைக் கொண்டதாகும். இதன் ஆல்கஹால் அளவை 42.8% குறைக்க கனிமங்கள் நீக்கப்பட்ட நீர் சேர்க்கப்படுகிறது. பின்னர், தேவைக்கேற்ப குறிப்பிட்ட சுவைகளும் நிறங்களும் சேர்க்கப்பட்டு, அந்த நடுநிலை ஆல்கஹால் விஸ்கி அல்லது ரம்மாக மாற்றப்படுகிறது. சில சமயங்களில், ரம் தயாரிப்பிற்கு கரும்புச் சாராயமும் (cane spirit), விஸ்கி தயாரிப்பிற்கு மால்ட் சாராயமும் (malt spirit) கூடுதலாகச் சேர்க்கப்படுகின்றன என தெரிய வந்துள்ளது.
கடைசியாக ஒன்று…
குடி குடியை கெடுக்கும்.!
வானுயரத்திற்கு எழுந்த கரும்புகை.. சவுதியை நோக்கி பாய்ந்த ஹவுதியின் ஏவுகணை அலை.. அதிர்ச்சி வீடியோ!
September 8, 2026
"ரிவர்ஸ் கியர் ஆட்சி" முதல் "பெயர் மாற்ற பட்ஜெட்" வரை…அதிர வைத்த உதயநிதியின் குற்றச்சாட்டுகள்!
September 8, 2026
மாஸ் ஸ்பீச்… குற்றச்சாட்டு… சவால்… சைகை… பதிலடி…! விஜய் சட்டப்பேரவை ஸ்பெஷல்!
September 8, 2026
கமல் – சுஜாதா கூட்டணியின் அசத்தல் சம்பவம்.. ‘விக்ரம்’ உருவான கதை!
September 8, 2026
தமிழ்நாட்டில் 7 தொகுதிகள் காலியாக இருக்கும் போது, 2 தொகுதிகளில் மட்டும் இடைத்தேர்தல் ஏன்?
September 8, 2026
"பெண்கள் கண்ணில் படக்கூடாது!" இந்து அமைப்பின் நிபந்தனையால்.. மூடப்பட்ட ஈபிள் டவர் மீண்டும் திறப்பு!
September 8, 2026
The First Episode of ‘Star Trek’ Was Not the Best Episode of ‘Star Trek’
September 8, 2026
Paramount Argues That the States Post a $1.88 Billion Bond to Cover Warner Bros. Bills
September 8, 2026
Ex-‘60 Minutes’ Managing Editor Goes Public After Firing, Tells CBS Staffers to “Hold the Line”
September 8, 2026
Baker Mayfield extension: NFL Insider confirms Buccaneers QB's three-year deal, reveals key contract details
September 8, 2026
How to Stream ‘The Drop: A Snowfall Saga,’ FX’s 2026 ‘Snowfall’ Spinoff
September 8, 2026
Today’s Wordle #1908: Hints, Clues And Answer For Wednesday September 9
September 8, 2026