புதுச்சேரியின் பிரதான சாலைகளிலும், குடியிருப்பு வீதிகளிலும் பொதுமக்கள் தங்களின் பயன்பாடற்ற வாகனங்களை பல ஆண்டுகளாக நிறுத்தி வைக்கின்றனர். அதனால் நாள்தோறும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த நிலையில்தான் புதுச்சேரி உழவர்கரை நகராட்சி ஆணையர் அருண் அய்யாவு அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
அந்த அறிவிப்பில், `புதுச்சேரி மற்றும் உழவர்கரை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலையோரங்கள், நடைபாதைகள் மற்றும் பொதுப் பயன்பாட்டு இடங்களில் நீண்டகாலமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பழுதடைந்த மற்றும் கைவிடப்பட்ட கனரக, இலகுரக, இருசக்கர வாகனங்கள், தள்ளுவண்டிகள், ஜெனரேட்டர்கள் போன்றவை பொது சுகாதாரம் மற்றும் போக்குவரத்து ஒழுங்குக்கு இடையூறாக உள்ளன.

அதனால் குப்பைத் தேக்கம், கொசு உற்பத்தி, தொற்று நோய்கள் பரவல் அபாயம் மற்றும் சாலை விபத்துகள் ஏற்படும் ஆபத்து அதிகரித்துள்ளது. எனவே, இத்தகைய வாகனங்கள் மற்றும் உபகரணங்களை ஒரு வார காலத்திற்குள் அகற்றிக்கொள்ளுமாறு தினசரி நாளிதழ் மூலம் அறிவுறுத்தப்பட்டது. மேலும், சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள் ஒரு வார காலத்திற்குள் தங்களது வாகனங்கள் மற்றும் உபகரணங்களை உடனடியாக அகற்றி, தங்களது சொந்த இடங்களில் பாதுகாப்பாக நிறுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
அந்தக் காலக்கெடுவுக்குள் அகற்றப்படாத வாகனங்கள் மற்றும் உபகரணங்கள், புதுச்சேரி நகராட்சி சட்டம், 1973-ன் விதிகளின்படி, போக்குவரத்துக் காவல்துறையின் உதவியுடன் எந்தவித முன்னறிவிப்புமின்றி அப்புறப்படுத்தப்பட்டு, நடைமுறையில் உள்ள சட்ட விதிகளின்படி பொது ஏலத்தின் மூலம் விற்பனை செய்யப்படும் என அறிவிப்பு நோட்டீஸ்கள் உழவர்கரை நகராட்சி மூலம் சம்பந்தப்பட்ட வாகனங்கள் மற்றும் உபகரணங்களில் ஒட்டப்பட்டது. ஆனாலும், பல இடங்களில் அவை அகற்றப்படாமல் இருப்பது கண்டறியப்பட்டது.

உச்சநீதிமன்றத்தின் உத்தரவு மற்றும் பொதுமக்கள், மாணவர்களின் போக்குவரத்து மற்றும் சுகாதார நலம் கருதி கைவிடப்பட்ட ஒன்பது வாகனங்கள் உழவர்கரை நகராட்சி ஆணையர் அருண் அய்யாவு அவர்களின் நேரடி மேற்பார்வையில் போக்குவரத்து துறை அதிகாரிகள், உழவர்கரை துணை வட்டாட்சியர், காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் உழவர்கரை நகராட்சி ஊழியர்கள் மூலம் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த வாகன உரிமையாளர்களுக்கு ஏற்கெனவே எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டுவிட்டது. அதனால் இனி எந்த கால அவகாசமும் கொடுக்க முடியாது. அவர்கள் உரிய அபராதத்தை செலுத்திவிட்டு, இனி வாகனத்தை சாலையில் நிறுத்தமாட்டேன் என்று எழுதிக் கொடுத்துவிட்டு வாகனத்தை மீட்டுச் செல்ல வேண்டும். அது தவறும் பட்சத்தில் விதிகளின்படி பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்படும்’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
"ரிவர்ஸ் கியர் ஆட்சி" முதல் "பெயர் மாற்ற பட்ஜெட்" வரை…அதிர வைத்த உதயநிதியின் குற்றச்சாட்டுகள்!
September 8, 2026
மாஸ் ஸ்பீச்… குற்றச்சாட்டு… சவால்… சைகை… பதிலடி…! விஜய் சட்டப்பேரவை ஸ்பெஷல்!
September 8, 2026
கமல் – சுஜாதா கூட்டணியின் அசத்தல் சம்பவம்.. ‘விக்ரம்’ உருவான கதை!
September 8, 2026
விஜய் குறிப்பிட்ட அந்த மருமகள்… சபாநாயகரின் உறவினரா? திமுக EX MLA விளக்கம்..!
September 8, 2026
"ஆரம்பத்தில் இருந்தே ஈரான் போரை எதிர்க்கிறது; ஆனால், அவர்கள் வருந்தும் வரை.!" – ஈரான் அதிபர் அதிரடி
September 8, 2026
`கள் விற்பனை செய்வது குறித்து பரிசீலிக்கலாம்!' – தமிழக அரசுக்கு கோகுல்தாஸ் ஆணையம் பரிந்துரை
September 8, 2026
The First Episode of ‘Star Trek’ Was Not the Best Episode of ‘Star Trek’
September 8, 2026
Paramount Argues That the States Post a $1.88 Billion Bond to Cover Warner Bros. Bills
September 8, 2026
Ex-‘60 Minutes’ Managing Editor Goes Public After Firing, Tells CBS Staffers to “Hold the Line”
September 8, 2026
Baker Mayfield extension: NFL Insider confirms Buccaneers QB's three-year deal, reveals key contract details
September 8, 2026
How to Stream ‘The Drop: A Snowfall Saga,’ FX’s 2026 ‘Snowfall’ Spinoff
September 8, 2026
Today’s Wordle #1908: Hints, Clues And Answer For Wednesday September 9
September 8, 2026