மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில், சூரி நடிப்பில் உருவாகியுள்ள ‘மண்டாடி’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.

இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படத்தின் முதல் காட்சியை ரசிகர்களோடு சேர்ந்து சென்னை ரோகிணி திரையரங்கில் சூரி பார்த்திருக்கிறார். இதன் பிறகு செய்தியாளர்களையும் சந்தித்து அவர் பேசியிருக்கிறார்.
அவர் பேசுகையில், “இந்தப் படத்துக்காக வேலை செய்தது ரொம்ப சந்தோஷமா இருக்கு. இந்தப் படத்துக்காக நாங்க நிறைய மெனக்கெட்டோம்.
தயாரிப்பாளர், இயக்குநர், ஒளிப்பதிவாளர், ஒட்டுமொத்தத் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும், இந்த ‘மண்டாடி’ டீம் எல்லாருக்கும் மிகப்பெரிய வெற்றி. கூட்டு முயற்சிக்குக் கிடைத்த வெற்றிதான் இப்போது கிடைத்திருக்கும் மிகப்பெரிய வெற்றி.
இந்தப் படம் வெற்றி பெறும்னு மன உறுதியோடத்தான் பல மாதங்களாகக் கடலில் கிடந்தோம், கஷ்டப்பட்டோம். ‘கஷ்டப்பட்டோம்ங்கிற வார்த்தையைச் சொல்லாதீங்க’னு நிறைய பேர் சொன்னாங்க.
ஆனால், உண்மையிலேயே ரொம்ப கஷ்டப்பட்டதால்தான் இந்த வார்த்தையைச் சொன்னோம். ஆனால், அது எல்லாத்துக்குமே இன்னைக்குப் பலன் கிடைச்சிருக்கு.
இந்த ‘மண்டாடி’ படத்துக்கு மக்கள் கொடுக்கும் வரவேற்பைப் பார்த்தோம். படத்தைப் பற்றி நல்லாவே பேசுறாங்க. தியேட்டர்ல படத்தை அவ்வளவு கொண்டாடுறாங்க.
இந்தப் படத்தோட ஒட்டுமொத்த வெற்றியையும் கடலோர மீனவர்கள், அப்பா, அம்மா, அண்ணன், தம்பி, தங்கை என எல்லாருக்கும் ‘மண்டாடி’ படத்தை சமர்ப்பிக்கிறோம். ஒரு மீனவனா நடிச்சதை நான் பாக்கியமாக நினைக்கிறேன்.” எனப் பகிர்ந்திருக்கிறார்.
பணத்திற்காக உடலை விற்பது எவ்ளோ பெரிய வலி? ஆண்கள் கண்ணை பார்த்து பேச மாட்டாங்க.. சரண்யா பகீர் பேட்டி!
September 12, 2026
என் புருஷனை பத்தி பேசாதீங்க.. எல்லாத்துக்கும் ஓரளவு இருக்கு.. கொந்தளித்த சாக்ஷி அகர்வால்!
September 12, 2026
அந்த விஷயத்தால் தான் விஜய் முதல்வரானார்.. ஆகாயம் பட இசை வெளியீட்டு விழாவில் தினந்தோறும் நாகராஜ் பேச்சு!
September 12, 2026
த்ரிஷா அரசியலுக்கு வந்தா கதறி அழுவாங்க.. கல்யாணம் நிலைக்காது.. ஜாதக ரகசியத்தை உடைத்த ஜோதிடர்!
September 12, 2026
கெனிஷா பெயரே நெகட்டிவ்.. யோகிபாபு படம் குறித்த பேட்டியில் வெளிவந்த உண்மை!
September 12, 2026
அடக் கடவுளே.. யாருக்கும் இப்படி ஒரு நிலைமை வரக்கூடாது.. தாயை இழந்து கதறும் மணிவண்ணன்!
September 12, 2026
பணத்திற்காக உடலை விற்பது எவ்ளோ பெரிய வலி? ஆண்கள் கண்ணை பார்த்து பேச மாட்டாங்க.. சரண்யா பகீர் பேட்டி!
September 12, 2026
என் புருஷனை பத்தி பேசாதீங்க.. எல்லாத்துக்கும் ஓரளவு இருக்கு.. கொந்தளித்த சாக்ஷி அகர்வால்!
September 12, 2026
Brazil: Flavio Bolsonaro faces corruption probe weeks before election
September 12, 2026
இந்தியா vs. பாகிஸ்தான் லெஜண்ட்ஸ்.. யுவராஜ் சிங் தலைமையில் இந்திய அணி.. போட்டி எப்போது?
September 12, 2026
உலகையே மிரளவைத்த சிறந்த பவுலிங் ஸ்பெல்.. 25 வருடமாக எந்த பவுலரும் தொட முடியாத சமிந்தா வாஸ் சாதனை
September 12, 2026
Corals as climate archive: Are El Niños intensifying?
September 12, 2026