இயக்குநர் ராம் இயக்கத்தில் நடிகர்கள் நிவின் பாலி, சூரி, அஞ்சலி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஏழு கடல் ஏழு மலை’.
சில ஆண்டுகளுக்கு முன்னரே இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், பல திரைப்பட விழாக்களிலும் இப்படம் திரையிடப்பட்டது.

தற்போது இத்திரைப்படம் திரையரங்க வெளியீட்டிற்குத் தயாராகி வருகிறது. அக்டோபர் மாதம் 1-ஆம் தேதி இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.
திரைப்படத்தின் வெளியீட்டைத் தொடர்ந்து புரமோஷனில் ஈடுபட்டு வரும் இயக்குநர் ராம், அதன் ஒரு பகுதியாகக் கோவையில் உள்ள பிராட்வே திரையரங்கிற்கு கடந்த 7-ஆம் தேதி வந்திருந்தார்.
அங்கு இயக்குநர் ராமுடன் நாம் உரையாடினோம். அவர், “இந்தத் திரைப்படம் குழந்தைக்குச் சொல்லப்படும் கதை என்பதால் அந்த அழகோடும், அந்த சுவாரஸ்யத்தோடும் சொல்லப்பட்டிருக்கும்.
அதற்கான நிஜ எமோஷன்கள் படத்தில் இருக்கும். ‘பேரன்பு’ படத்தின் பிரீமியர் ஷோவில் படத்தைப் பார்த்துட்டு நிவின் பாலி சார் ‘நாம் ஒரு படம் சேர்ந்து பண்ணனும்’ என்றார்.

இந்தக் கதையில் ஓர் இம்மார்ட்டல் கதாபாத்திரம் எழுதும்போது அவர் முகம்தான் எனக்குத் தோன்றியது. சில நேரங்களில் அவருடைய முகத்தில் தாடி வளர்ந்தால், இயேசுவின் முகம் போலவே எனக்குத் தெரியும். அதனால்தான் அந்தக் கதாபாத்திரத்திற்கு அவர் முகம் என் நினைவுக்கு வந்தது.
அவருடைய நடிப்பும் எனக்கு மிகவும் பிடிக்கும். அவருக்கு காமெடி வரும், ரொமான்ஸ் வரும், ஆக்ஷன் வரும். அந்த மூன்றுமே இந்தக் கதையில் இருக்கிறது.
சூரி அண்ணனைப் பிடிக்காதவர்கள் இருக்கவே முடியாது என நினைக்கிறேன். அவரை எனக்கு பல வருடங்களாகத் தெரியும். அவரை நான் ‘வெண்ணிலா கபடிக் குழு’ படத்திலிருந்து பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
‘பேரன்பு’ படத்தை அவர் பாராட்டிய விதமும் என்னைக் கவர்ந்தது. எனக்கும் அவருக்கும் எப்போதும் நல்ல புரிதல் இருக்கும். இந்தக் கதையே ஓர் இம்மார்ட்டல் மேனுக்கு எதிராக ஒரு மார்ட்டல் மேன் இருப்பதுதான்.

அதற்கு யார் பொருத்தமாக இருப்பார் எனப் பார்த்தால் அவர் இருந்தார். ஹீரோவை விடச் சிறந்த கதாபாத்திரம். இந்தக் கதையில் ஒரு காதல் இருக்கிறது. பீரியாடிக் ஆகவும், மாடர்னாகவும் பண்ண வேண்டும்.
அதை இந்த பட்ஜெட்டிற்குள் பண்ண வேண்டும் என்பதும் இருந்தது. அனைத்திற்கும் பொருந்தி வந்தது அஞ்சலிதான். நடிகர்கள் இந்தப் படத்திற்கு எவ்வளவு முக்கியமோ, அதுபோல எலி, யானை, குரங்கு, பூனையும் இப்படத்தில் முக்கியமானதாக இருக்கும்” எனப் பகிர்ந்துகொண்டார்.
பணத்திற்காக உடலை விற்பது எவ்ளோ பெரிய வலி? ஆண்கள் கண்ணை பார்த்து பேச மாட்டாங்க.. சரண்யா பகீர் பேட்டி!
September 12, 2026
என் புருஷனை பத்தி பேசாதீங்க.. எல்லாத்துக்கும் ஓரளவு இருக்கு.. கொந்தளித்த சாக்ஷி அகர்வால்!
September 12, 2026
அந்த விஷயத்தால் தான் விஜய் முதல்வரானார்.. ஆகாயம் பட இசை வெளியீட்டு விழாவில் தினந்தோறும் நாகராஜ் பேச்சு!
September 12, 2026
த்ரிஷா அரசியலுக்கு வந்தா கதறி அழுவாங்க.. கல்யாணம் நிலைக்காது.. ஜாதக ரகசியத்தை உடைத்த ஜோதிடர்!
September 12, 2026
கெனிஷா பெயரே நெகட்டிவ்.. யோகிபாபு படம் குறித்த பேட்டியில் வெளிவந்த உண்மை!
September 12, 2026
அடக் கடவுளே.. யாருக்கும் இப்படி ஒரு நிலைமை வரக்கூடாது.. தாயை இழந்து கதறும் மணிவண்ணன்!
September 12, 2026
பணத்திற்காக உடலை விற்பது எவ்ளோ பெரிய வலி? ஆண்கள் கண்ணை பார்த்து பேச மாட்டாங்க.. சரண்யா பகீர் பேட்டி!
September 12, 2026
என் புருஷனை பத்தி பேசாதீங்க.. எல்லாத்துக்கும் ஓரளவு இருக்கு.. கொந்தளித்த சாக்ஷி அகர்வால்!
September 12, 2026
Brazil: Flavio Bolsonaro faces corruption probe weeks before election
September 12, 2026
இந்தியா vs. பாகிஸ்தான் லெஜண்ட்ஸ்.. யுவராஜ் சிங் தலைமையில் இந்திய அணி.. போட்டி எப்போது?
September 12, 2026
உலகையே மிரளவைத்த சிறந்த பவுலிங் ஸ்பெல்.. 25 வருடமாக எந்த பவுலரும் தொட முடியாத சமிந்தா வாஸ் சாதனை
September 12, 2026
Corals as climate archive: Are El Niños intensifying?
September 12, 2026