அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சென்னையில் இன்று (செப்.15) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்.
அப்போது முதல்வரின் வெளிநாட்டு பயணம் குறித்து கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது.
அதற்கு பதிலளித்த அவர், “முதல்வரின் வெளிநாட்டுப் பயணம் தொடர்பாக பல்வேறு கருத்துகள் சமூக வலைதளங்களில் வந்துகொண்டிருக்கின்றன. இந்த நேரத்தில் அது குறித்து நான் கருத்து சொல்ல விரும்பவில்லை.

முதல்வர் வந்த பிறகு என்ன முதலீடு செய்திருக்கிறார் என்பதைத் தெரிந்துகொண்டு பேசுவதுதான் நன்றாக இருக்கும். ஏற்கெனவே தவெக-வினர் அனுபவம் இல்லாதவர்கள். முதல்வர் விஜய் முதல் அக்கட்சியில் இருக்கும் அனைவருக்குமே அனுபவம் கிடையாது.
அவர்கள் எதிர்பாராத விதமாக ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள். அவர்கள் செயல்பாடு என்பது அவர்களுக்கு வாக்களித்தவர்கள்கூட ஏன் வாக்களித்தோம். தவறு செய்துவிட்டோம் என்று சிந்திக்கத் தொடங்கிவிட்டார்கள்.
இந்த ஆட்சியாளர்கள் தலை, கால் புரியாமல் ஆடுவதை நிறுத்திவிட்டு இருக்கின்ற வரை சரியான முறையில் ஆட்சி செய்தால் அவர்களுக்கு அது நல்லது.

இல்லையென்றால் தமிழ்நாட்டு மக்கள் அவர்களுக்கு முடிவுரை எழுதுவார்கள். சினிமாவில் நடித்தவர் இப்போது மக்கள் முன் நடிக்க ஆரம்பித்து இருக்கிறார். அவர் மக்களை ஏமாற்றுகிறார் என்பதை மக்களும் உணர்ந்துள்ளனர்” என்று விமர்சித்திருக்கிறார்.
இல்லாத புற்றுநோய்க்கு 11 ஆண்டு கீமோதெரபி சிகிச்சை – இந்த பெண்ணுக்கு என்ன நடந்தது?
September 15, 2026
'நான் கேள்விப்பட்டிராத ஊரில் குடியேற ரூ. 5 லட்சம் தந்தனர்' – அமெரிக்காவில் என்ன நடக்கிறது?
September 15, 2026
ரூ.2,000-க்கு மேல் யுபிஐ பரிவர்த்தனை செய்ய இனி கட்டணமா? 5 கேள்வி – பதில்கள்
September 15, 2026
புது செல்போன் வாங்க பழையதை எக்சேஞ்ச் செய்கிறீர்களா? ஆபத்தை தவிர்க்க கவனிக்க வேண்டிய 7 விஷயங்கள்
September 15, 2026
'கழுத்தை நெரிக்கும் இணைய கூலிப்படைகள்; கட்சிப் பேதம் எல்லாம் இல்லை.!' – கடிவாளம் போடுமா தலைமைகள்?
September 15, 2026
`வெளியிலிருந்துதான் ஆதரவு' – இடைத்தேர்தலுக்கு வேட்பாளர்களை அறிவித்த கம்யூனிஸ்ட் கட்சிகள்!
September 15, 2026
Join WIRED@Night for an Uncanny Valley Live Recording on Women, Tech and Power
September 15, 2026
Kushal Malla back in Nepal's squad for Asian Games
September 15, 2026
Sterling admits dangerous driving on motorway before crash
September 15, 2026
Wolvaardt century, Dercksen five-for seal series for South Africa
September 15, 2026