சென்னை விமான நிலைய நிர்வாகத்தை தனியார் அல்லது பிற அமைப்புகளின் நிர்வாகத்திற்கு மாற்றுவது போன்ற நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு முயன்று வருவதாகக் குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்த நிலையில், மத்திய அரசின் இத்தகைய நடவடிக்கைகளுக்குத் துணைபோகும் வகையில், சென்னை விமான நிலையத்தின் நிர்வாகத்தை மாற்றக் கோரி முதலமைச்சர் விஜய் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியதாக வெளியான தகவல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தங்களுடைய கடுமையான கண்டனங்களைப் பதிவுசெய்து வருகின்றனர். இந்த நிலையில், காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் தன் எக்ஸ் பக்கத்தில், “AAI அமைப்பை சென்னை விமான நிலைய நிர்வாகப் பொறுப்பிலிருந்து மாற்றக் கோருவது ஒரு சிறிய நல்ல முயற்சிதான் என்றாலும், அது பிரதானப் பிரச்சனைக்கு முழுமையான தீர்வாகாது. தமிழ்நாடு மாநிலத்தின் தலைநகரத்திற்குப் பொருத்தமான வகையில், சர்வதேசத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு மற்றும் வசதிகளுடன் கூடிய ஒரு புதிய விமான நிலையம் சென்னைக்கு மிகவும் அவசியமாகும்.
பயணிகளின் அனுபவம், உள்கட்டமைப்பு மற்றும் அன்றாடச் செயல்பாடுகள் ஆகியவற்றில் பெங்களூரு மற்றும் ஹைதராபாத் நகரங்களின் விமான நிலையங்களோடு ஒப்பிடுகையில் நாம் வெகுவாகப் பின்தங்கியுள்ளோம். தற்போதைய சென்னை விமான நிலையத்தின் மோசமான உள்கட்டமைப்பும் அதன் செயல்பாடுகளும் சென்னை நகரத்திற்கும் அதன் வளர்ச்சிக்கும் செய்யப்படுகின்ற பெரும் துரோகமாகும்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
மதுராந்தகத்தில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்த தவெக? வீடியோ வெளியாகி பரபரப்பு
September 22, 2026
கொழும்பு சென்ற விமானத்தில் நடுவானில் என்ஜின் கோளாறு.. சென்னையில் அவசர அவசரமாக தரையிறக்கம்!
September 22, 2026
இடைத்தேர்தலில் விஜய் அலை இல்லை.. வெற்றி வாய்ப்பு யாருக்கு? ஐடிபிஎஸ் கருத்துக்கணிப்பு
September 22, 2026
சோபா மாடல் விவகாரம்! அன்பிற்குரியவர் உதயநிதி.. விசிகவை சொல்லியிருக்க மாட்டார்! திருமாவளவன் பேச்சு
September 22, 2026
கேரள ஆற்றில் சில நிமிடங்களில் நீர்மட்டம் உயர 'நீலகிரி கனமழையே' காரணமா? மழையே பெய்யாத பகுதியில் வெள்ளம் – 6 பேர் பலி
September 22, 2026
முதியோர் உதவித்தொகையை கிடைக்காமல் அவதிப்படும் பொதுமக்கள்.. அலையவிட்டு தாமதிக்கும் தமிழக அரசு
September 22, 2026
சிஎஸ்கே அணி பயிற்சியாளர் பதவிக்கு நெஹ்ராவா? அஸ்வின் வெளியிட்ட பரபரப்பு தகவல்
September 23, 2026
ஐபிஎல் சூதாட்ட புகார்.. விளக்கம் கொடுத்துள்ள சிஎஸ்கே.. வீரர்களுக்கு எச்சரிக்கை
September 23, 2026
Fresh bedsheets and dusk walks: Expert tips for sleep-deprived freshers
September 22, 2026
Snedeker wants Spaun to 'make me look like an idiot' after Presidents Cup snub
September 22, 2026
NBA Star Steven Adams Says GTA 6's Launch Will Lead to a 'League-Wide' Drop in Performance for Athletes and Coaches
September 22, 2026
Get a Lenovo Legion Go S Ryzen Z2 Go Handheld Gaming PC in Excellent Condition for Under $500
September 22, 2026