ராம் இயக்கத்தில் சூரி, நிவின் பாலி, அஞ்சலி உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘ஏழு கடல் ஏழு மலை’.

இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா, சந்தோஷ் தயாநிதி இருவரும் இசையமைத்திருக்கிறார்கள்.

அக்டோபர் 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகயிருக்கும் நிலையில் படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவென்ட் நேற்று (செப்.23) நடைபெற்றது.

ஏழு கடல் ஏழு மலை படத்தில்…

இதில் கலந்துகொண்ட ராம் யுவன் சங்கர் ராஜா குறித்து பேசியிருந்தார். “நா.முத்துக்குமார் தான் என்னை யுவனிடம் அழைத்து சென்றார்.

‘கற்றது தமிழ்’ படத்திற்கு இசையமைப்பதற்காக ஒரு 30 நிமிடம் கதைச் சொல்லியிருப்பேன்.

கதைகேட்டதும் நான் இசையமைக்கிறேன் என்று சொன்னார். அப்போது இருந்து தொடங்கியது தான் இந்தப் பயணம்.

அவர் என்னுடைய படத்திற்கு இசையமைக்க ‘நோ’ சொன்னால்தான் நான் வேறொரு இடத்திற்கு செல்வேன்.

என் படங்களுக்கு இசையமைப்பவர் என்பதைத் தாண்டி அவர் எனக்கு ஒரு நல்ல நண்பர்.

யுவன் சங்கர் ராஜா - ராம்
யுவன் சங்கர் ராஜா – ராம்

‘கற்றது தமிழ்’, ‘தரமணி’, ‘தங்க மீன்கள்’, ‘பேரன்பு’ என என்னுடைய எல்லாப் படங்களுக்கும் இசையமைத்திருக்கிறார்.

‘பறந்து போ’ படத்திற்கு மட்டும் அவர் துபாயில் இருந்ததால் இசையமைக்க முடியவில்லை. அதனால் அவருடைய நண்பர் சந்தோஷை இசையமைக்க பரிந்துரைத்தார்.” என்றார்.

More in Cinema
வசமாக சிக்கிய சந்திரகலா.. சொந்த வீட்டையே கொளுத்த சொன்ன சாமுண்டீஸ்வரி.. கார்த்திகை தீபம் வசமாக சிக்கிய சந்திரகலா.. சொந்த வீட்டையே கொளுத்த சொன்ன சாமுண்டீஸ்வரி.. கார்த்திகை தீபம் September 26, 2026 "அரசு OTT தளம் குறித்து வெகு விரைவில் நல்ல செய்தி" – என்ன சொல்கிறார் அமைச்சர் ராஜ்மோகன்? "அரசு OTT தளம் குறித்து வெகு விரைவில் நல்ல செய்தி" – என்ன சொல்கிறார் அமைச்சர் ராஜ்மோகன்? September 26, 2026 "என்னை விட நல்ல கதைகள் வைத்திருக்கும் அவர்களுக்கு ஏதாவது செய்யுங்கள்" – 'மொத ராத்திரி' இயக்குநர் "என்னை விட நல்ல கதைகள் வைத்திருக்கும் அவர்களுக்கு ஏதாவது செய்யுங்கள்" – 'மொத ராத்திரி' இயக்குநர் September 26, 2026 சாய் அபயங்கரை அட்டாக் செய்தாரா ஹிப்ஹாப் தமிழா ஆதி?.. மீசைய முறுக்கு 2 பஞ்சாயத்து! சாய் அபயங்கரை அட்டாக் செய்தாரா ஹிப்ஹாப் தமிழா ஆதி?.. மீசைய முறுக்கு 2 பஞ்சாயத்து! September 26, 2026 ஆணும் ஆணும் கிஸ்.. தியேட்டர்ல பார்க்கவே அருவருப்பா இருக்கு.. டோரதி படத்தை கிழித்த நெட்டிசன்கள்! ஆணும் ஆணும் கிஸ்.. தியேட்டர்ல பார்க்கவே அருவருப்பா இருக்கு.. டோரதி படத்தை கிழித்த நெட்டிசன்கள்! September 26, 2026 'நான் தமிழ் ஈழப்பெண்'- நடிகை மைத்ரேயி ராமகிருஷ்ணன் பேச்சுக்கு எழுந்த எதிர்ப்பு! பின்னணி என்ன? 'நான் தமிழ் ஈழப்பெண்'- நடிகை மைத்ரேயி ராமகிருஷ்ணன் பேச்சுக்கு எழுந்த எதிர்ப்பு! பின்னணி என்ன? September 26, 2026

See all 179 in Cinema →

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *