சென்னை வண்டலூர் அருகே அரசுப் பள்ளி வளாகத்திலிருந்து பட்டப்பகலில் மாணவி ஒருவர் மர்ம நபர்களால் கடத்திச் செல்லப்பட்டு, கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

இந்தச் சம்பவத்திற்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டடிருக்கும் பதிவில், “சிங்கப்பெண் படை எங்கே? பெண்கள் பாதுகாப்பில் அண்ணனா இருப்பேன் – அரணா இருப்பேன் என்று வாய்கிழிய வசனம் பேசிய முதலமைச்சர் எங்கே?

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை

சென்னை வண்டலூர் அருகே அரசுப்பள்ளி மாணவியை மர்ம நபர்கள் சிலர் பட்டப்பகலில் பள்ளி வளாகத்தில் இருந்தே கடத்திச் சென்று கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

பெண்கள் பாதுகாப்பில் No compromise என்று சொல்லிக்கொள்ளும் Dummy முதலமைச்சரின் Circus ஆட்சியில், அரசுப்பள்ளி வளாகத்திலேயே பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு இல்லை என்பது வெட்கக்கேடு.

மதுராந்தகம் இடைத்தேர்தல் பிரச்சாரத்துக்காக முதலமைச்சர் வருகிறார் என்று சொல்லி, இந்த சம்பவத்தை காவல்துறையும் – அதிகாரிகளும் மூடி மறைக்க முயற்சி செய்வதும் – பாம்புக்கடி என்று மடைமாற்றுவதும், தமிழ்நாடு எவ்வளவு மோசமானவர்கள் கைகளில் சிக்கி இருக்கிறது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

குற்றவாளிகளைப் பிடிக்க வக்கின்றி பாதிக்கப்பட்ட பெற்றோரின் செல்போன்களை கைப்பற்றி இந்த சம்பவம் குறித்து பொது வெளியில் பேசக்கூடாது என்று போலீஸ் தரப்பில் மிரட்டல் விடுப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த Reels ஆட்சியாளர்களின் அராஜகப் போக்கு, குற்றவாளிகளுக்கு கூடுதல் தைரியத்தை அளிப்பதோடு, பாதிக்கப்பட்டவர்களை மேலும் சித்திரவதை செய்வது போல் இருக்கிறது.

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு உரிய சிகிச்சை அளிப்பதோடு அவருக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும்.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மேல் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசுப்பள்ளி உட்பட அனைத்துப்பள்ளி வளாகங்களிலும் பிள்ளைகளின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும்.

இடைத்தேர்தல் வருகிறது என்று இந்த கொடுமையை மூடி மறைக்க முயற்சித்தால், மக்கள் இந்த ஆட்சியாளர்கள் முகத்தில் கரியை பூசுவது உறுதி” என்று கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

More in TamilNews
8 வருடங்களில் முதல்முறை.. கோவை தூய்மை பணியாளர்கள் தகர கொட்டகையில் அதிகாரிகள் ஆய்வு 8 வருடங்களில் முதல்முறை.. கோவை தூய்மை பணியாளர்கள் தகர கொட்டகையில் அதிகாரிகள் ஆய்வு September 26, 2026 CJP-ஐ ஓவர்டேக் செய்த கம்யூனிஸ்ட் கட்சிகள்! ஞானேஷ் குமாருக்கு எதிராக தமிழகத்தில் போராட்டம் அறிவிப்பு CJP-ஐ ஓவர்டேக் செய்த கம்யூனிஸ்ட் கட்சிகள்! ஞானேஷ் குமாருக்கு எதிராக தமிழகத்தில் போராட்டம் அறிவிப்பு September 26, 2026 பரம எதிரிகளை ஒன்றிணைத்த தேர்தல் ஆணையம்.. மம்தா – மா.கம்யூனிஸ்ட் கைகோர்ப்பு.. பெரிய ட்விஸ்ட் பரம எதிரிகளை ஒன்றிணைத்த தேர்தல் ஆணையம்.. மம்தா – மா.கம்யூனிஸ்ட் கைகோர்ப்பு.. பெரிய ட்விஸ்ட் September 26, 2026 2021ல் கருப்பு- சிகப்பு சைக்கிளில் போய் திமுகவுக்கு வாக்களித்தவராச்சே விஜய்! அதிமுக மாஜி 2021ல் கருப்பு- சிகப்பு சைக்கிளில் போய் திமுகவுக்கு வாக்களித்தவராச்சே விஜய்! அதிமுக மாஜி September 26, 2026 வங்கக்கடலில் அடுத்த 12 மணி நேரத்தில் நடக்கும் மாற்றம்.. சென்னையில் நல்ல மழைக்கு வாய்ப்பு! வங்கக்கடலில் அடுத்த 12 மணி நேரத்தில் நடக்கும் மாற்றம்.. சென்னையில் நல்ல மழைக்கு வாய்ப்பு! September 26, 2026 ஸ்டாலின் மதுராந்தகத்தில் போட்ட 2 தூண்டில்: அன்புமணியை வளைக்கும் விஜய்… குறுக்கே விசிக ஸ்டாலின் மதுராந்தகத்தில் போட்ட 2 தூண்டில்: அன்புமணியை வளைக்கும் விஜய்… குறுக்கே விசிக September 26, 2026

See all 695 in TamilNews →

Latest News

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *