சென்னை வண்டலூர் அருகே அரசுப் பள்ளி வளாகத்திலிருந்து பட்டப்பகலில் மாணவி ஒருவர் மர்ம நபர்களால் கடத்திச் செல்லப்பட்டு, கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

இந்தச் சம்பவத்திற்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டடிருக்கும் பதிவில், “சிங்கப்பெண் படை எங்கே? பெண்கள் பாதுகாப்பில் அண்ணனா இருப்பேன் – அரணா இருப்பேன் என்று வாய்கிழிய வசனம் பேசிய முதலமைச்சர் எங்கே?

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை

சென்னை வண்டலூர் அருகே அரசுப்பள்ளி மாணவியை மர்ம நபர்கள் சிலர் பட்டப்பகலில் பள்ளி வளாகத்தில் இருந்தே கடத்திச் சென்று கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

பெண்கள் பாதுகாப்பில் No compromise என்று சொல்லிக்கொள்ளும் Dummy முதலமைச்சரின் Circus ஆட்சியில், அரசுப்பள்ளி வளாகத்திலேயே பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு இல்லை என்பது வெட்கக்கேடு.

மதுராந்தகம் இடைத்தேர்தல் பிரச்சாரத்துக்காக முதலமைச்சர் வருகிறார் என்று சொல்லி, இந்த சம்பவத்தை காவல்துறையும் – அதிகாரிகளும் மூடி மறைக்க முயற்சி செய்வதும் – பாம்புக்கடி என்று மடைமாற்றுவதும், தமிழ்நாடு எவ்வளவு மோசமானவர்கள் கைகளில் சிக்கி இருக்கிறது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

குற்றவாளிகளைப் பிடிக்க வக்கின்றி பாதிக்கப்பட்ட பெற்றோரின் செல்போன்களை கைப்பற்றி இந்த சம்பவம் குறித்து பொது வெளியில் பேசக்கூடாது என்று போலீஸ் தரப்பில் மிரட்டல் விடுப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த Reels ஆட்சியாளர்களின் அராஜகப் போக்கு, குற்றவாளிகளுக்கு கூடுதல் தைரியத்தை அளிப்பதோடு, பாதிக்கப்பட்டவர்களை மேலும் சித்திரவதை செய்வது போல் இருக்கிறது.

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு உரிய சிகிச்சை அளிப்பதோடு அவருக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும்.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மேல் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசுப்பள்ளி உட்பட அனைத்துப்பள்ளி வளாகங்களிலும் பிள்ளைகளின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும்.

இடைத்தேர்தல் வருகிறது என்று இந்த கொடுமையை மூடி மறைக்க முயற்சித்தால், மக்கள் இந்த ஆட்சியாளர்கள் முகத்தில் கரியை பூசுவது உறுதி” என்று கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

More in TamilNews
BB Tamil: 'அந்த ஒருவரை ஜெயிக்க விடாதீங்க!' – வெளியேறும்போது அவினாஷை பார்த்து ஆவேசமான லட்சுமி பிரியா BB Tamil: 'அந்த ஒருவரை ஜெயிக்க விடாதீங்க!' – வெளியேறும்போது அவினாஷை பார்த்து ஆவேசமான லட்சுமி பிரியா September 25, 2026 திருவண்ணாமலை எம்.பி அண்ணாதுரையிடம் அதிரடி காட்டிய லஞ்ச ஒழிப்புத்துறை… அதிர்ச்சியில் திமுக-வினர் திருவண்ணாமலை எம்.பி அண்ணாதுரையிடம் அதிரடி காட்டிய லஞ்ச ஒழிப்புத்துறை… அதிர்ச்சியில் திமுக-வினர் September 25, 2026 “இரட்டை இலையும், விசில் சின்னமும் ஒன்று' என பேசுவதா? TVK அங்கீகாரம் Suspend?' – அதிமுக மூவ் “இரட்டை இலையும், விசில் சின்னமும் ஒன்று' என பேசுவதா? TVK அங்கீகாரம் Suspend?' – அதிமுக மூவ் September 25, 2026 ஜெம் வீரமணி: 'ஜூலை 5… அழைக்கப்பட்ட 3 அமைச்சர்கள் + சபாநாயகர்!' – சர்ச்சையாகும் விழாவின் பின்னணி! ஜெம் வீரமணி: 'ஜூலை 5… அழைக்கப்பட்ட 3 அமைச்சர்கள் + சபாநாயகர்!' – சர்ச்சையாகும் விழாவின் பின்னணி! September 25, 2026 மதுரை வரும் விஜய் : தகர சீட்டுகளால் மறைக்கப்பட்ட கழிவுநீர் கால்வாய்; பின் வாபஸ்! என்ன நடந்தது? மதுரை வரும் விஜய் : தகர சீட்டுகளால் மறைக்கப்பட்ட கழிவுநீர் கால்வாய்; பின் வாபஸ்! என்ன நடந்தது? September 25, 2026 சிக்கிமை புரட்டி போட்ட நிலச்சரிவு.. பாறைகள் சகதியில் மூழ்கிய கிராமங்கள் சிக்கிமை புரட்டி போட்ட நிலச்சரிவு.. பாறைகள் சகதியில் மூழ்கிய கிராமங்கள் September 25, 2026

See all 704 in TamilNews →

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *