இந்திய சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 60-க்கும் மேற்பட்ட படங்களை இவர் இயக்கியிருக்கிறார். இவருக்கு வயது 95.

வயது மூப்பு காரணமாக இன்று இவர் இயற்கை எய்தியிருக்கிறார். தென்னிந்திய சினிமாவில் பல புதுமைகளை அறிமுகப்படுத்திய பெருமை இவருக்கு உண்டு.

சிங்கீதம் சீனிவாசராவ்
சிங்கீதம் சீனிவாசராவ்

இந்தியாவின் முதல் டைம் டிராவல் படமான ‘ஆதித்யா 369’ படத்தை இயக்கியவர் இவர்தான்.

இதுமட்டுமல்லாமல், கிராபிக்ஸ், அனிமேஷன் போன்றவை தென்னிந்திய சினிமாவுக்குப் பெரியளவில் பரிச்சயமில்லாத சமயத்திலேயே, அப்படியான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ்.

கமல்ஹாசனின் 100-வது படமான ‘ராஜ பார்வை’, ‘பேசும் படம்’, ‘அபூர்வ சகோதரர்கள்’, ‘மைக்கேல் மதன காமராஜன்’ ஆகிய கல்ட் கிளாசிக் படங்களை இயக்கியதும் இவர்தான்.

கமல், சிங்கீதம் சீனிவாசராவ்
கமல், சிங்கீதம் சீனிவாசராவ்

இந்தாண்டு இவர் இயக்கத்தில் ‘சிங் கீதம்’ திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. 94 வயதில் இப்படத்தை இயக்கி, ஹாலிவுட்டில் கிளிண்ட் ஈஸ்ட்வுட் செய்த சாதனையை முறியடித்தவர் இவர். இவருடைய மறைவுக்குத் திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

More in Cinema

See all 165 in Cinema →

Latest News
டிரெய்லர் மட்டும் தான் ஜெயிலர் 2வை ஹைப் ஆக்க கடைசி அஸ்திரம்.. நாளை நெல்சன் சம்பவம் இருக்குமா? டிரெய்லர் மட்டும் தான் ஜெயிலர் 2வை ஹைப் ஆக்க கடைசி அஸ்திரம்.. நாளை நெல்சன் சம்பவம் இருக்குமா? October 4, 2026 அவன் வல்கரா பண்ணல.. கன்னத்தை கிள்ளிய ரசிகர்.. ரச்சிதா ராம் என்ன சொல்லியிருக்காருன்னு பாருங்க! அவன் வல்கரா பண்ணல.. கன்னத்தை கிள்ளிய ரசிகர்.. ரச்சிதா ராம் என்ன சொல்லியிருக்காருன்னு பாருங்க! October 4, 2026 விஜய் மகனா? விஜய் சேதுபதியா?.. இந்த வாரம் பாக்ஸ் ஆபீஸ் வின்னர் யாரு?.. மற்றும் பலர் நிலைமை? விஜய் மகனா? விஜய் சேதுபதியா?.. இந்த வாரம் பாக்ஸ் ஆபீஸ் வின்னர் யாரு?.. மற்றும் பலர் நிலைமை? October 4, 2026 மகன் போட்ட பக்கா பிளான்.. அம்மா அமைதியாக காரணமே அதுதானாம்.. பயங்கர டென்ஷனில் நடிகை.. பல்பு தான்! மகன் போட்ட பக்கா பிளான்.. அம்மா அமைதியாக காரணமே அதுதானாம்.. பயங்கர டென்ஷனில் நடிகை.. பல்பு தான்! October 4, 2026 சர்தார் 2 எதிர்பார்த்த வரவேற்பு இல்லை.. பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் என்ன? சர்தார் 2 எதிர்பார்த்த வரவேற்பு இல்லை.. பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் என்ன? October 4, 2026 கைநிறைய சம்பளத்தில் வேலை வேண்டுமா? மாணவர்களுக்கு துபாய் பத்திரிகையாளர் சொன்ன முக்கிய வழிகள்! கைநிறைய சம்பளத்தில் வேலை வேண்டுமா? மாணவர்களுக்கு துபாய் பத்திரிகையாளர் சொன்ன முக்கிய வழிகள்! October 4, 2026

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *