திருத்தணி பெரியார் நகரைச் சேர்ந்தவர் ராஜா. சினிமா தியேட்டர் ஊழியராகப் பணியாற்றி வருகிறார். இவரின் 17 வயது மகளை, அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருதலையாகக் காதலித்து வற்புறுத்தியுள்ளார்.

காதலை ஏற்க மறுத்த மாணவிக்கும், அவரது குடும்பத்திற்கும் அச்சிறுவன் தன் ஆதரவாளர்களுடன் சேர்ந்து கொலை மிரட்டல் விடுத்துள்ளான். இதுகுறித்து மாணவியின் தாய் துர்கா திருத்தணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், மிரட்டலில் ஈடுபட்ட லாரன்ஸ் என்பவரை நேற்று காலை கைது செய்தனர். இதனால் ஆத்திரமடைந்த அவரது சகோதரர் சுசில் தன் நண்பர்களுடன் சேர்ந்து, ராஜாவை பட்டாகத்தியால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டுத் தப்பினார்.

இந்த விவகாரம் குறித்து பாஜக தலைவர் வானதி சீனிவாசன் தன் எக்ஸ் பக்கத்தில், “சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது CM Sir..! திருத்தணி பெரியார் நகரில் தனது 17 வயது மகளுக்கு காதல் தொந்தரவு கொடுத்த இளைஞர்கள் மீது காவல்துறையில் மாணவியின் தாய் புகார் அளித்த நிலையில், மாணவியின் தந்தையை இளைஞர்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.

அரசில் புகார் அளிப்பவர்களுக்கே பாதுகாப்பில்லாத நிலை ஏற்பட்டிருக்கும் சூழலில் பெண்களுக்கு இந்த அரசில் எப்படி பாதுகாப்பினை எதிர்பார்க்க முடியும்?

பெண்களைக் காப்பதற்கு சிங்கப் பெண் படை, அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் என இருந்தும் புகார்களை சரியாகக் கையாளகாததன் விளைவாக குற்றவாளிகள் வெளியில் சுதந்திரமாகச் சுற்றித் திரிந்து, மேலும் பல குற்றங்களைப் புரிவதும், ஆனால் புகார் கொடுத்தவர்களோ பயந்து கொண்டு உயிரைக் கையில் பிடித்துக் கொண்டே வாழும் சூழலை ஏற்படுத்தியிருப்பதுதான் தவெக அரசின் சாதனை” எனக் காட்டமாக விமர்சித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

More in TamilNews
தேர்தல் ஆணையர் விவகாரம்: “விரிவாக விசாரிக்க உள்ளோம்" – உச்ச நீதிமன்ற நீதிபதி தேர்தல் ஆணையர் விவகாரம்: “விரிவாக விசாரிக்க உள்ளோம்" – உச்ச நீதிமன்ற நீதிபதி October 5, 2026 தாராபுரம் இடைத்தேர்தல்: தவெக vs திமுக vs அதிமுக.. களத்தில் முந்துவது யார்? வெற்றி யாருக்கு? தாராபுரம் இடைத்தேர்தல்: தவெக vs திமுக vs அதிமுக.. களத்தில் முந்துவது யார்? வெற்றி யாருக்கு? October 5, 2026 ஆளை கொல்லும் ஜாம்பி வைரஸ்! எல்லையை மூடி சீல் வைக்க ரெடியாகும்.. ரஷ்யாவின் பக்கத்து நாடுகள்! ஆளை கொல்லும் ஜாம்பி வைரஸ்! எல்லையை மூடி சீல் வைக்க ரெடியாகும்.. ரஷ்யாவின் பக்கத்து நாடுகள்! October 5, 2026 மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் உட்பட 8 சிட்டிங் எம்பிக்களை கழற்றிவிட்ட பாஜக! உ.பியில் அதிரடி திருப்பம் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் உட்பட 8 சிட்டிங் எம்பிக்களை கழற்றிவிட்ட பாஜக! உ.பியில் அதிரடி திருப்பம் October 5, 2026 எதிர்பாராத நேரத்தில் உடைந்த டெஸ்ட் டியூப்.. பரவும் ஆபத்தான பிளாக் தொற்று? 200+ பேர் கண்காணிப்பு எதிர்பாராத நேரத்தில் உடைந்த டெஸ்ட் டியூப்.. பரவும் ஆபத்தான பிளாக் தொற்று? 200+ பேர் கண்காணிப்பு October 5, 2026 “முதல்வர் விஜய் சென்ற மாட்டுவண்டியை ஓட்டிச் சென்றவர் யார்?" – ஆர்.எஸ்.பாரதி கேள்வி “முதல்வர் விஜய் சென்ற மாட்டுவண்டியை ஓட்டிச் சென்றவர் யார்?" – ஆர்.எஸ்.பாரதி கேள்வி October 5, 2026

See all 686 in TamilNews →

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *