கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்துக்கு அருகிலிருக்கிறது குரால் கிராமம். அங்கு தனிநபர் ஒருவரின் நிலத்தில் பழமையான ஸ்ரீ கலியுக சீனுவாசப் பெருமாள் கோயில் அமைந்திருக்கிறது. அந்தக் கோயிலுக்கு, தலித் மக்கள் சென்று வழிபடுவதற்கு பிற சமூகத்தினர் அனுமதி மறுத்து வந்தனர்.

அதனால் கோயிலின் வாசலில் நின்றே வழிபட்டு வந்த தலித் சமூகத்தினர், கோயிலுக்குள் சென்று வழிபட அனுமதிக்க வேண்டும் என்று கடந்த 50 வருடங்களுக்கும் மேலாகப் போராடி வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கோயில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. அதன்பிறகும் அந்த கிராமத்தைச் சேர்ந்த தலித் மக்களை கோயிலுக்குள் அனுமதிக்க மறுத்தனர் மாற்று சமூகத்தினர்.

கள்ளக்குறிச்சி பெருமாள் கோயில்

அப்போது தங்களை கோயிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தனர் தலித் மக்கள். ஆனால் அந்தக் கோரிக்கை மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில்தான் கடந்த 3-ம் தேதி புரட்டாசி மாதம் மூன்றாவது சனிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. வழக்கம்போல தலித் மக்கள் அதை வெளியில் நின்று தரிசிக்க முயற்சித்தனர்.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்த மாற்று சமூகத்தினர், பூஜை முடிந்ததும் கோயிலைப் பூட்டினர். அதனால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது. தகவலறிந்து அன்று இரவே அங்கு சென்ற கள்ளக்குறிச்சி பெண் எஸ்.பி ஷானஸ், மாற்று சமூகத்தைச் சேர்ந்த மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

ஆனால் அவர்கள், தலித் சமூக மக்களை கோயிலுக்குள் அனுமதிக்க முடியாது என்று, எஸ்.பியிடம் வாக்குவாதம் செய்தனர். குறிப்பாக மாற்று சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது, `கோயில் பூர்வீகமாக இருந்தாலும், வழிபாட்டுக்கு யாரும் யாரையும் தடை செய்ய முடியாது!’ என்றார். அப்போது கூட்டத்தில் இருந்த யாரோ ஒருவர், `அது சரி….’ என்று குரலெழுப்பினார்.

அதற்கு, `அது சரி என்று சொல்பவர் யாராக இருந்தாலும், தைரியமாக முன்னால் வந்து பேசுங்கள்’ என்று ஆவேசமானார் எஸ்.பி ஷானஸ். அதன்பிறகு அங்கிருந்த யாரும் பேச முன்வரவில்லை. தொடர்ந்து, கோயிலை திறக்கும்படி உத்தரவிட்டார் எஸ்.பி. ஆனால் அதற்கு யாரும் முன்வரவில்லை.

கள்ளக்குறிச்சி பெருமாள் கோயில்

அதன்பிறகு கோயில் சாவியைக் கொண்டு வருமாறு கூறினார். அப்போதும், `சாவியைத் தர முடியாது’ என்றனர் மாற்றுச் சமூகத்தினர். அதையடுத்து கோயிலின் கதவுகளை உடைக்கும்படி காவலர்களுக்கு உத்தரவிட்டார் எஸ்.பி. அதன்பிறகு அங்கு கூடியிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட தலித் மக்களை கோயிலுக்குள் அழைத்துச் சென்று வழிபட வைத்தார் எஸ்.பி ஷானஸ்.

அதன்பிறகு அவரது உத்தரவுப்படி, கோயிலின் கதவுகளைப் பூட்டி எதிர்ப்பு தெரிவித்த 16 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 50 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த தலித் மக்களின் கோரிக்கையை, ஒரே நாள் இரவில் முடிவுக்கு கொண்டு வந்த எஸ்.பி ஷானஸ்க்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

More in TamilNews
தேர்தல் ஆணையர் விவகாரம்: “விரிவாக விசாரிக்க உள்ளோம்" – உச்ச நீதிமன்ற நீதிபதி தேர்தல் ஆணையர் விவகாரம்: “விரிவாக விசாரிக்க உள்ளோம்" – உச்ச நீதிமன்ற நீதிபதி October 5, 2026 தாராபுரம் இடைத்தேர்தல்: தவெக vs திமுக vs அதிமுக.. களத்தில் முந்துவது யார்? வெற்றி யாருக்கு? தாராபுரம் இடைத்தேர்தல்: தவெக vs திமுக vs அதிமுக.. களத்தில் முந்துவது யார்? வெற்றி யாருக்கு? October 5, 2026 ஆளை கொல்லும் ஜாம்பி வைரஸ்! எல்லையை மூடி சீல் வைக்க ரெடியாகும்.. ரஷ்யாவின் பக்கத்து நாடுகள்! ஆளை கொல்லும் ஜாம்பி வைரஸ்! எல்லையை மூடி சீல் வைக்க ரெடியாகும்.. ரஷ்யாவின் பக்கத்து நாடுகள்! October 5, 2026 மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் உட்பட 8 சிட்டிங் எம்பிக்களை கழற்றிவிட்ட பாஜக! உ.பியில் அதிரடி திருப்பம் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் உட்பட 8 சிட்டிங் எம்பிக்களை கழற்றிவிட்ட பாஜக! உ.பியில் அதிரடி திருப்பம் October 5, 2026 எதிர்பாராத நேரத்தில் உடைந்த டெஸ்ட் டியூப்.. பரவும் ஆபத்தான பிளாக் தொற்று? 200+ பேர் கண்காணிப்பு எதிர்பாராத நேரத்தில் உடைந்த டெஸ்ட் டியூப்.. பரவும் ஆபத்தான பிளாக் தொற்று? 200+ பேர் கண்காணிப்பு October 5, 2026 “முதல்வர் விஜய் சென்ற மாட்டுவண்டியை ஓட்டிச் சென்றவர் யார்?" – ஆர்.எஸ்.பாரதி கேள்வி “முதல்வர் விஜய் சென்ற மாட்டுவண்டியை ஓட்டிச் சென்றவர் யார்?" – ஆர்.எஸ்.பாரதி கேள்வி October 5, 2026

See all 683 in TamilNews →

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *