தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் த.வெ.க வேட்பாளராக போட்டியிட்டுள்ள சத்தியபாமாவை ஆதரித்து முதலமைச்சர் விஜய் தாராபுரத்தில் நேற்று ரோடு ஷோ நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.
வாக்காளர்களைக் கவரும் வகையில் மாட்டு வண்டியில் பயணித்தும் விவசாயிகளுடன் முருங்கைக்காய் பறித்தும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில், முதலமைச்சர் விஜய்யின் மாட்டு வண்டி பயணித்தின்போது அஷோக் என்ற நபர் அந்த மாட்டு வண்டியை ஓட்டியுள்ளார்.
அ.தி.மு.க-வைச் சேர்ந்த அஷோக், சத்தியபாமாவைப் பிரசாரம் செய்ய விடாமல் தடுத்தார் என்ற காரணத்திற்காக அவர் மீது வழக்குப்பதிவு செய்திருக்கிறது காவல்துறை. கைது நடவடிக்கையில் இருந்து காப்பாற்றுகிறோம் என்கிற பெயரில் அவரை மிரட்டி த.வெ.க- வில் இணைத்துள்ளனர் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது குறித்து தெரிவித்த அ.தி.மு.க திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளர் செல்வகுமார், “பொட்டிக்காபாளையம் அஷோக் என்பவர் எங்கள் கட்சியில்தான் இருந்தார். சில தினங்களுக்கு முன்பு த.வெ.க வேட்பாளர் சத்தியபாமாவை தேர்தல் பிரசாரம் செய்ய விடாமல் தடுத்தார் என்ற காரணத்திற்காக அஷோக் உட்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மற்ற அனைவரும் சிறையில் இருக்கிறார்கள். அஷோக்கைத் தேடி வருவதாக காவல்துறை கூறியிருந்தது. ஆனால், அஷோக்கை மட்டும் இரவோடு இரவாக மிரட்டி த.வெ.க-வில் இணைய வைத்திருக்கிறார்கள். அதோடு விடமால், முதலமைச்சருக்கு மாட்டு வண்டியை ஓட்ட வைத்திருக்கிறார்கள். அதற்கு ஆடியோ ஆதாரம் இருக்கிறது. கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க கட்சி மாறினாலும் அவர் தேடப்படும் குற்றவாளிதான்” என்றார்.
இரவில் பதற்றம்.. சுகாதாரத்துறை செயலர் உத்தரவாதத்தை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்ட செவிலியர்கள்!
October 5, 2026
இன்று மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: வாக்காளர் அடையாள அட்டை இல்லாவிட்டால் எப்படி வாக்களிப்பது?
October 5, 2026
போக்குவரத்து வசதிகளை வேற லெவலில் விரிவுபடுத்தும் நவி மும்பை விமான நிலையம்!
October 5, 2026
SIR-ஆல் பலன் அடைந்த தவெக? தேர்தல் ஆணையத்தை கடுமையாக விமர்சித்த விசிக எம்.பி!
October 5, 2026
மதுராந்தகத்தில் மரகதம் குமரவேலுக்கு ஆதரவாக.. கடைசி நேரத்தில் விளையாடும் பணம்! அதிமுக பரபர புகார்
October 5, 2026
கைது செய்யப்பட்ட செவிலியர்களை உடனடியாக விடுவிக்கவேண்டும்.. தவெக அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கோரிக்கை
October 5, 2026
Caleb Flynn, ex-American Idol singer, sentenced to life without parole after being found guilty of wife Ashley’s murder
October 5, 2026
Mamardashvili's late penalty save denies Northern Ireland win vs Georgia
October 5, 2026
Yemen Says It’s Retaken Mocha as Battle for Bab El-Mandeb Looms
October 5, 2026
US DOJ moves to revoke citizenship of 40 naturalised Americans accused of hiding criminal pasts
October 5, 2026
Gauff receives racist abuse online after China Open incident
October 5, 2026
Trump says 'threat' led US to pull bombers from RAF Fairford
October 5, 2026