நேற்று (அக்டோபர் 6) டெல்லியில், இந்தியாவின் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி ‘இந்தியா’ கூட்டணியின் தலைவர்கள், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் தலைமையில் பேரணி நடந்தது.

இந்தப் பேரணி இந்தியத் தேர்தல் ஆணைய அலுவலகம் நோக்கி நடைபெற்றது.

அந்தப் பேரணியின்போது, ராகுல் காந்தி ஞானேஷ் குமாரைச் சந்திக்க நேரம் கேட்டதாகவும், ஆனால், நேரம் கொடுக்கப்படவில்லை என்றும் கூறப்பட்டது.

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார்
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார்

இது குறித்து தேர்தல் ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில்…

> இன்று (அதாவது நேற்று) மாலை 4 மணி வரை எந்தவொரு அரசியல் கட்சியும் தேர்தல் ஆணையரை நேரில் சந்திப்பதற்கான நேரத்தை ஒதுக்கக் கேட்கவில்லை.

> இதன் தொடர்ச்சியாக, மாலை சுமார் 4 மணியளவில், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் எம்பிக்கள் அடங்கிய குழு ஒன்று தேர்தல் ஆணையத்தைச் சந்தித்து மனு அளிக்க விரும்புவதாக டெல்லி காவல்துறையிடமிருந்து தகவல் கிடைத்தது.

என்ன நடைமுறை?

> இந்தியத் தேர்தல் ஆணையம் 2025-ஆம் ஆண்டில் அரசியல் கட்சிகளுடனான சந்திப்புகளுக்கான ஒரு குறிப்பிட்ட வழிகாட்டு நடைமுறையை உருவாக்கியது.

இது அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் முறைப்படி தெரிவிக்கப்பட்டு, அவர்களும் இதையே பின்பற்றி வருகின்றனர்.

எந்தவொரு அரசியல் கட்சியின் பிரதிநிதிகள் குழுவோ அல்லது பல கட்சிகளின் கூட்டுக் குழுவோ தேர்தல் ஆணையத்தைச் சந்திக்க விரும்பினால்,

அவர்கள் தங்களது முறைப்படி அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்ட பிரதிநிதி மூலம் ஆணையத்திடம் முன்அனுமதி பெற வேண்டும்.

அதன் பிறகு, இரு தரப்பினரின் ஒப்புதலோடு முடிவு செய்யப்படும் நேரத்தின் அடிப்படையில் இச்சந்திப்பு நடைபெறும்.

இந்திய தேர்தல் ஆணையம்
இந்திய தேர்தல் ஆணையம்

ஏன் சந்திக்கவில்லை?

> மாலை 4 மணிக்கு மேல், எம்பிக்களின் இந்தச் சந்திப்பு கோரிக்கை குறித்து தேர்தல் ஆணையம் பரிசீலித்துக் கொண்டிருந்தபோது, இந்தக் கோரிக்கை 240 எம்பிக்கள் அடங்கிய குழுவிற்கானது என்றும்,

இச்சந்திப்பிற்காக முன்மொழியப்பட்ட இடம் ‘நாடாளுமன்ற இணைப்புச் செயலகம்’ என்றும் டெல்லி காவல் துறை டிசிபி மூலம் தெரிவிக்கப்பட்டது.

இந்தக் கோரிக்கை மிகவும் அசாதாரணமானது என்றும், இதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தேர்தல் ஆணையம் கருதியது. ஏனெனில், நடைமுறை விதிகளின்படி இத்தகைய சந்திப்புகள் இந்தியத் தேர்தல் ஆணைய வளாகத்திற்குள்ளேயே நடைபெறும்.

எம்.பிக்கள்தான் நிராகரித்துவிட்டனர்…

> எம்பிக்களின் மனுவைப் பெற்றுக்கொள்வதற்காக தேர்தல் ஆணையத்தின் மிக மூத்த அதிகாரியைச் சந்திப்பு நடைபெறும் இடத்திற்கே அனுப்பலாம் என்று தேர்தல் ஆணையம் முன்மொழிந்தது. இதுவே வழக்கத்திற்கு மாறான ஒரு தனித்துவமான நடவடிக்கையாக இருந்திருக்கும். இருப்பினும், இந்த முன்மொழிவையும் எம்பிக்கள் நிராகரித்து விட்டனர்.

> நாட்டின் நாடாளுமன்ற மற்றும் ஜனநாயக நடைமுறைகளைத் தேர்தல் ஆணையம் பெரிதும் மதிக்கிறது. அதேவேளையில், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தனது சொந்த நடைமுறை விதிகளையும் மரபுகளையும் அது மதித்துப் போற்றுகிறது.

எந்தவொரு அரசியல் கட்சியும், எந்த நேரத்திலும் தேர்தல் ஆணையத்தைச் சந்திக்க அனுமதி கோரலாம். சூழ்நிலைக்கும் நேரத்திற்கும் ஏற்ப, தேர்தல் ஆணையமும் சந்திப்பிற்கான தேதி மற்றும் நேரத்தைத் தீர்மானிக்கலாம். இது ஒரு இயல்பான நடைமுறையாகும்.

– என்று கூறப்பட்டுள்ளது.

More in TamilNews
'இந்துவாக இருந்தும் செவ்வாய்க்கிழமை அசைவமா?' – ராகுல் குறித்து சர்ச்சை; கார்த்தி சிதம்பரம் பதிலடி 'இந்துவாக இருந்தும் செவ்வாய்க்கிழமை அசைவமா?' – ராகுல் குறித்து சர்ச்சை; கார்த்தி சிதம்பரம் பதிலடி October 7, 2026 SIR விவகாரம்: "துணிச்சல் இருந்தால் பதில் சொல்லுங்க மோடி சார்" – காங்கிரஸ் சரமாரி கேள்வி SIR விவகாரம்: "துணிச்சல் இருந்தால் பதில் சொல்லுங்க மோடி சார்" – காங்கிரஸ் சரமாரி கேள்வி October 7, 2026 தாராபுரம்: இளம் தலைமுறை முதல் மூத்த குடிமக்கள் வரை குறையாத ஆர்வம்; வாக்குப்பதிவின் Highlights|Photos தாராபுரம்: இளம் தலைமுறை முதல் மூத்த குடிமக்கள் வரை குறையாத ஆர்வம்; வாக்குப்பதிவின் Highlights|Photos October 7, 2026 கச்சத்தீவு விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை..தமிழக மீனவர்கள் கைதை உச்சநீதிமன்றத்தில் நியாயப்படுத்திய மத்திய அரசு கச்சத்தீவு விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை..தமிழக மீனவர்கள் கைதை உச்சநீதிமன்றத்தில் நியாயப்படுத்திய மத்திய அரசு October 6, 2026 இனி மேற்குவங்காளம் என்ற பெயர் கிடையாது.. மாநிலத்தின் பெயரை மாற்ற ரெடியான பாஜக அரசு! பின்னணி இனி மேற்குவங்காளம் என்ற பெயர் கிடையாது.. மாநிலத்தின் பெயரை மாற்ற ரெடியான பாஜக அரசு! பின்னணி October 6, 2026 ஒரு வழியா.. நல்ல செய்தியை சொன்ன WHO! ரஷ்யாவை நினைத்து உலக மக்கள் கவலைப்பட வேண்டாம்! ஒரு வழியா.. நல்ல செய்தியை சொன்ன WHO! ரஷ்யாவை நினைத்து உலக மக்கள் கவலைப்பட வேண்டாம்! October 6, 2026

See all 680 in TamilNews →

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *