தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொதுச்செயலாளர் கணபதி சிவக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆயுதப்போரை விட கொடூரமான ஒரு போரை சொந்த நாட்டு மக்கள் மீதே நடத்தியிருக்கிறது ஜனநாயக விரோத பா.ஜ.க அரசு. எஸ்.ஐ.ஆர் எனும் விஞ்ஞான ஆயுதத்தைக் கொண்டு உலகின் மிகப்பெரிய ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டுள்ளது.
இத்தனை நாட்கள் மோடி அரசின் மீது எழுப்பப்பட்ட அத்துனை தேர்தல் முறைகேடு குறித்த கேள்விகளும் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபணமாகும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதையே நேற்று உச்சநீதிமன்றம் எழுப்பிய கேள்விகள் காட்டுகின்றன. மோடியின் கைப்பாவையான இந்திய தேர்தல் ஆணையத்தின் சாயம் வெளுத்துள்ளது.
மாற்றப்பட்ட படிவம் 6க்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக உச்ச நீதிமன்றத்தின் பெயரைக் சொல்லி பொய் சொன்னது மட்டுமல்லாமல், அதைச் சர்வசாதாரணமாக பொதுவெளியில் வெளியிடும் துணிச்சல் இந்தத் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எங்கிருந்து வந்தது?
ஆனால், “மாற்றப்பட்ட படிவம் 6-க்கு நாங்கள் எந்த ஒப்புதலும் அளிக்கவில்லை” என்று தலைமை நீதிபதி சூர்யா காந்த் அமர்வு தேர்தல் ஆணையத்தின் முகத்தில் அடித்தாற்போல் உண்மையை உடைத்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் பெயரிலேயே தேர்தல் ஆணையம் இப்படி ஒரு பகிரங்கப் பொய்யை அவிழ்த்துவிட்டது ஏன்?
யாருடைய அரசியல் தேவைக்காக நீதிமன்றத்தையும் கூட்டு சேர்க்க துணிந்தீர்கள்? இது நீதிமன்ற அவமதிப்பு மட்டுமல்ல, இந்திய மக்களுக்கே இழைக்கப்பட்ட பச்சைத் துரோகம்.

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், மற்ற இரு ஆணையர்களான சுக்பீர் சிங் சாந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோரின் 14-க்கும் மேற்பட்ட ஆட்சேபனைகளையும், பரிந்துரைகளையும் ஓரங்கட்டிவிட்டு, தன்னிச்சையாக எஸ்.ஐ.ஆர் உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.
“சட்டத்தை மீறி முடிவுகள் எடுக்கப்பட்டிருந்தால், அதை ரத்து செய்வோம்” என உச்ச நீதிமன்றம் காட்டமாக எச்சரித்துள்ளது. ஒட்டுமொத்தத்தில் தேர்தல் ஆணையம் என்ற சுதந்திரமான அமைப்பை தனக்கான அடியாட்களாக மாற்றி இந்திய ஜனங்களின் மீது தாக்குதல் நடத்தியிருக்கும் மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களே உங்களுக்கு எதிராக இன்று நாடே வெகுண்டு எழுந்து போராடி கொண்டிருக்கிறது.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தியோடு ஒட்டுமொத்த ஜனநாயக சக்திகளும் அணிதிரண்டு நிற்கிறார்கள். ராகுல்காந்தி வழியில் மாணவர்களும் இளைஞர்களும் தேசத்தின் ஆன்மாவை காக்கும் களத்தில் போராடி வருகிறார்கள்.
உங்களின் எதேச்சதிகார போக்கிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நாள் நெருங்கிவிட்டது. இத்தனைக்குப் பிறகும் கள்ள மௌனம் காப்பது ஏன்? உங்களின் 56 இன்ச் மார்பில் துணிச்சல் இருந்தால், பதில் சொல்லுங்க மோடி சார்… வாயைத் திறங்க மோடி சார்…” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் அதிகரிக்கும் HIV தொற்று….டாட்டூ குத்திக் கொள்பவர்களுக்கு ஆபத்து?
October 7, 2026
மாத்திரை கவர் இந்தி சர்ச்சை : திமுகவுக்கு அமைச்சர் அருண்ராஜ் பதிலடி !
October 7, 2026
மக்களே உங்களுக்கு ஒரு ஷாக் நியூஸ்….ஏறுமுகமாக மாறிய தங்கம் விலை!
October 7, 2026
“ஏன் செல்லம், செய்தியாளர்களை சந்திக்க மாட்றீங்க?”… விஜயை வெளுத்து வாங்கிய பிரகாஷ் ராஜ்!
October 7, 2026
மொழிக்கொள்கை சர்ச்சை ! மாத்திரை கவர் விவாகரத்திற்கு தவெக கொடுத்த ரிப்ளை !
October 7, 2026
'இந்துவாக இருந்தும் செவ்வாய்க்கிழமை அசைவமா?' – ராகுல் குறித்து சர்ச்சை; கார்த்தி சிதம்பரம் பதிலடி
October 7, 2026
Russell to start from back of Singapore grid after penalty
October 7, 2026
South Korea to review military service exemption after Asian Games row
October 7, 2026
Young Tories say how Britain could be better
October 7, 2026
The candidates hoping to be London's second Tory mayor
October 7, 2026
Why you could represent GB in one of newest Olympic sports
October 7, 2026
Ex-Welsh Green Party deputy says Zionism motion 'pointless' after quitting party
October 7, 2026