மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் த.வெ.க வெற்றி பெற்றது. கடந்த பொதுத்தேர்தலில் இந்த இரண்டு தொகுதிகளிலும் வென்றிருந்த அ.தி.மு.க, இந்த தேர்தலில் இந்த தொகுதிகளை இழந்தது மட்டுமின்றி மூன்றாவது இடத்திற்கும் தள்ளப்பட்டது. தாராபுரம் தொகுதியில் முதல் 4 சுற்றுகளில் முதல் இடத்தில் இருந்த அ.தி.மு.க பின்னர் பின்னடைவை சந்தித்து, இறுதியில் மூன்றாம் இடத்திற்கு சென்றது. இது அ.தி.மு.க தொண்டர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், எஸ்.பி. வேலுமணியின் ஆதரவாளர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையேயான உட்கட்சி பூசல் உச்சத்தை எட்டியுள்ளது.
’எஸ்.பி.வேலுமணியின் முக்கியத்துவம் குறைப்பு’
இதுகுறித்து எஸ்.பி. வேலுமணி ஆதரவாளர்கள் கூறியதாவது, “த.வெ.க அரசிற்கான ஆதரவு நிலைப்பாடு காரணமாமக் பிரிந்திருந்த எஸ்.பி. வேலுமணி மீண்டும் இணைந்தபிறகும் அவருக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. அவரிடம் இருந்த பழைய பதவிகள் வழங்கப்படவில்லை. அவரது சொந்த தொகுதிக்கே வேறு ஒருவர் மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டார். துணை பொதுச்செயலாளர் என்ற அதிகாரமற்ற டம்மி பதவியை எடப்பாடி பழனிசாமி வழங்கினார். எஸ்.பி.வேலுமணி ஆதரவாளர்களின் கட்சி பதவிகள் பறிக்கப்பட்டன. பலர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.

கடந்த பொதுத்தேர்தலில் தாராபுரம் தொகுதி தேர்தல் பொறுப்பாளராக எஸ்.பி.வேலுமணி இருந்தார். அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க வெற்றி பெறவும் காரணமாக இருந்தார். ஆனால் இந்த இடைத்தேர்தலில் அவரை தேர்தல் பொறுப்பாளராக நியமிக்காமல், வெறும் 4 வார்டுகளுக்கு மட்டுமே பொறுப்பாளராக போட்டு அவமானப்படுத்தினார்கள். அதனால் அவர் நேரடி தேர்தல் பணிகளில் இருந்து ஒதுங்கியே இருந்தார். எடப்பாடி பழனிசாமி தான் மட்டுமே பெரிய தலைவர் என இருக்கிறார். எஸ்.பி. வேலுமணி போன்றவர்களை அரவணைத்து செல்ல மறுக்கிறார். மற்றவர்கள் கூறுவதை எதையும் அவர் கேட்பதில்லை. அதனால்தான் தாராபுரத்தில் அ.தி.மு.க. தோல்வியடைந்தது மட்டுமின்றி, மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது.
‘தலைமையை மாற்ற வேண்டும்’
தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க தோல்வியடைந்து வருகிறது. இது 13வது தோல்வி மட்டுமின்றி, எந்த தேர்தலிலும் அவரால் அ.தி.மு.க-வை வெற்றி பெறச் செய்ய முடியவில்லை. இதனால் அ.தி.மு.க தொண்டர்கள் வேதனையில் இருக்கின்றனர். கட்சி தோல்விக்கான காரணம் குறித்து ஆராய வேண்டும் என கூறுபவர்களை, கட்சியில் இருந்து நீக்குகிறாரே தவிர வேறு எதையும் செய்வதில்லை. கட்சியின் பொதுக்குழுவை கூட்டி தொடர் தோல்விக்கான காரணம் குறித்து ஆராய வேண்டும். எஸ்.பி. வேலுமணி போன்ற ஒருவரை பொதுச்செயலாளராக்க வேண்டும். அதற்காக நாங்கள் தொடர்ந்து குரல் கொடுப்போம். இல்லையெனில் அ.தி.மு.க-வில் இருந்து விலகி, த.வெ.க-வில் இணைய வேண்டிய சூழல் ஏற்படும்” என்றனர்.

‘உள்ளடி வேலைகளே தோல்விகளுக்கு காரணம்’
இது குறித்து எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களிடம் கேட்டபோது, “தாராபுரம் அ.தி.மு.க-வின் பலமான பகுதிகளில் ஒன்று. இடைத்தேர்தல்கள் ஆளுங்கட்சிக்கு சாதகமாக இருக்கும் என்றாலும், கடந்த முறை வென்ற அ.தி.மு.க-வால் இரண்டாம் இடத்திற்கு கூட வர முடியாததற்கு என்ன காரணம்? தப்பித்தவறி கூட அ.தி.மு.க வெற்றி பெற்றுவிட்டால், எடப்பாடி பழனிச்சாமி தலைமையை ஏற்க வேண்டி வரும் என்பதால், அ.தி.மு.க தோற்க வேண்டும் என எஸ்.பி. வேலுமணி தரப்பினர் உள்ளடி வேலைகளை செய்ததே இதற்கு காரணம். இருந்தாலும் அ.தி.மு.க டெபாசிட் இழந்துவிடவில்லை. தி.மு.க, அ.தி.மு.க-விற்கு இடையேயான வாக்கு வித்தியாசம் குறைவுதான். எனவே அ.தி.மு.க தனது பலத்தை இழந்துவிடவில்லை. மீண்டும் அ.தி.மு.க பலம் பெற்று வரும். ஆனால் எஸ்.பி.வேலுமணி போன்றோர் தங்களது சுயநலத்திற்காக, கட்சி தலைமையை மாற்ற வேண்டுமென்ற கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். இதை உண்மையான அ.தி.மு.க தொண்டர்கள் யாரும் ஏற்க மாட்டார்கள்” என்றனர்.
டாஸ்மாக் ஊழியர்களுக்கு குட் நியூஸ்…ரூ.50 லட்சம் வரை காப்பீடு வழங்க ஏற்பாடு!
October 12, 2026
மது பாட்டில்களை திரும்பப்பெறும் மெஷின்: டெண்டர் விவகாரத்தில் தமிழக அரசுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு!
October 12, 2026
SIR: "விஜய் ஏன் போராட்டத்தில் பங்கேற்கவில்லை? சொரணை இருந்தால் கேளுங்கள்"- காங்கிரஸுக்கு திமுக பதில்!
October 12, 2026
தாராவி மறுசீரமைப்புத் திட்டம்: மும்பை மாதுங்காவில் 10 டவர்கள் கட்டுமானப் பணிகள் தொடக்கம்!
October 12, 2026
மேஜர் சந்திரகாந்த் – ல் ரஜினிகாந்த்…த்ரில்லரில் ஸ்டைல் காட்டிய பாலசந்தர்!
October 12, 2026
மாணிக்கம் தாகூர் மிரட்டலுக்கு பயந்தவர் அல்ல, திருப்பி அடிக்கக்கூடியவர்.. திமுகவுக்கு காங்கிரஸ் பதிலடி
October 12, 2026
'A complete MESS!' – Rudoni gives Coventry lead from spot after Hornicek slow to challenge
October 12, 2026
'This could get very messy, very quickly!' – Carra on Man Utd's lack of intensity
October 12, 2026
Saracens sack academy player Auvaa after latest incident
October 12, 2026
Saracens sack academy player involved in Stokes-Atkinson fracas after new incident
October 12, 2026
Price rules out Shields but hints at big fight in 2027
October 12, 2026
Man City bananas 'brought fun back', says Varadi
October 12, 2026