ரஜினிகாந்த் நடித்திருக்கும் ‘ஜெயிலர் 2’ திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் நாளை வெளியாகிறது.

‘ஜெயிலர்’ முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து இரண்டாம் பாகத்தை எடுத்து, நாளை திரைக்குக் கொண்டு வருகிறார் இயக்குநர் நெல்சன்.

Jailer 2
Jailer 2

சன் பிக்சர்ஸ், அனிருத் என முதல் பாகத்தின் குழு இதிலும் தொடர, புதிதாகச் சிலரும் இரண்டாம் பாகத்தில் நடித்திருக்கிறார்கள்.

படம் நாளை வெளியாகவிருக்கும் நிலையில் திரைப்படம் குறித்து, ரஜினி குறித்து இசையமைப்பாளர் அனிருத் அவருடைய சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு பதிவிட்டிருக்கிறார்.

அந்தப் பதிவில் அவர், “தலைமுறைகளைக் கடந்து, மகிழ்ச்சியையும், சிரிப்பையும், சிலிர்ப்பையும், வாழ்நாள் முழுவதுக்குமான நினைவுகளையும் நமக்கு ரஜினி சார் கொடுத்துக்கொண்டிருக்கிறார்.

76 வயதிலும், கடந்த 51 ஆண்டுகளாகவும், இன்றும் திரையில் மாயாஜாலங்களை உருவாக்கி வரலாற்றை மீண்டும் மீண்டும் மாற்றி எழுதி வருகிறார்.

நாளை, மீண்டும் ஒருமுறை, அதாவது 172-வது முறையாக, திரையரங்குகள் வெளிச்சத்தால் ஒளிரும்.

உங்கள் அனைவரின் நல்வாழ்த்துகளோடு, ஒவ்வொரு இந்தியனின் இதயத்திலும் வாழும் ஒரு மனிதனுக்கான அன்பை இந்த உலகம் மீண்டும் பார்க்கும். ஒரே ஒரு சூரியன். ஒரே ஒரு சந்திரன். ஒரே ஒரு தலைவன்.” எனக் குறிப்பிட்டுப் பதிவிட்டிருக்கிறார்.

More in Cinema
குணசேகரன் நல்லா இருக்க கூடாது.. ஈஸ்வரி அப்பா விட்ட அதிரடி டயலாக்.. எதிர்நீச்சல் தொடர்கிறது! குணசேகரன் நல்லா இருக்க கூடாது.. ஈஸ்வரி அப்பா விட்ட அதிரடி டயலாக்.. எதிர்நீச்சல் தொடர்கிறது! October 14, 2026 கல்யாணம் நடக்கப்போறது சுவாதிக்கு இல்ல ரேவதிக்கு.. ஜோசியர் சொன்ன அதிரடி உண்மை.. கார்த்திகை தீபம்! கல்யாணம் நடக்கப்போறது சுவாதிக்கு இல்ல ரேவதிக்கு.. ஜோசியர் சொன்ன அதிரடி உண்மை.. கார்த்திகை தீபம்! October 14, 2026 Jailer 2 Box Office: கூலி வசூல் கன்ஃபார்ம் காலி.. ஜெயிலர் 2 முதல் நாள் வசூல் கணிப்பு இதோ! வேறமாறி! Jailer 2 Box Office: கூலி வசூல் கன்ஃபார்ம் காலி.. ஜெயிலர் 2 முதல் நாள் வசூல் கணிப்பு இதோ! வேறமாறி! October 14, 2026 என்கிட்ட மேட்டர் வீடியோவும் இல்ல.. ஆதாரமும் இல்ல.. வாகிதா வெளியிட்ட அடுத்த அதிரடி! என்கிட்ட மேட்டர் வீடியோவும் இல்ல.. ஆதாரமும் இல்ல.. வாகிதா வெளியிட்ட அடுத்த அதிரடி! October 14, 2026 திருநங்கைகள் குறித்து சர்ச்சை பேச்சு: "நாய்கூடத்தான் குட்டி போடுது” – கார்த்திக் சுப்புராஜ் கண்டனம் திருநங்கைகள் குறித்து சர்ச்சை பேச்சு: "நாய்கூடத்தான் குட்டி போடுது” – கார்த்திக் சுப்புராஜ் கண்டனம் October 14, 2026 நாய், பன்னி குட்டி போடுது.. திருநங்கைகளை அசிங்கப்படுத்திய மோகன் ஜி.. கார்த்திக் சுப்புராஜ் கண்டனம் நாய், பன்னி குட்டி போடுது.. திருநங்கைகளை அசிங்கப்படுத்திய மோகன் ஜி.. கார்த்திக் சுப்புராஜ் கண்டனம் October 14, 2026

See all 164 in Cinema →

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *