இசையமைப்பாளர் ‘தேனிசைத் தென்றல்’ தேவா திடீர் உடல்நலக் குறைவு காரணமாக இன்று இயற்கை எய்தினார்.
அவருடைய மறைவுக்குத் திரைத்துறையினர், அரசியல் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் ரஜினிகாந்தும், தேவாவுக்கு இரங்கல் தெரிவித்துக் காணொளி ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

அதில் அவர், “என் அருமை நண்பர், இசையமைப்பாளர் தேவாவின் திடீர் மறைவு எனக்கு மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. என்னுடைய திரையுலகப் பயணத்தில் ‘அண்ணாமலை’, ‘பாட்ஷா’, ‘அருணாச்சலம்’ ஆகிய மூன்று முக்கியத் திரைப்படங்களுக்கு அவர்தான் இசையமைத்தார்.
அந்த மூன்று திரைப்படங்களுமே பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்றன. அதன்பிறகு ‘படையப்பா’ திரைப்படத்தை எடுக்கும்போது, எனது நண்பர்கள் அனைவரும் இத்திரைப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மானை இசையமைக்க அழைக்கலாம் என்றார்கள்.
நான் அரைமனதோடு தேவா அவர்களிடம் சென்று, ‘இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மானிடம் உதவி கேட்கலாம் என நினைக்கிறேன்’ என்று தயங்கியபடியே கூறினேன். உடனே அவர் எவ்வித தயக்கமும் இன்றி எழுந்து நின்று, என் கைகளைப் பிடித்துக்கொண்டு மிகுந்த சந்தோஷத்தோடு, ‘தாராளமாகப் பண்ணுங்கள் சார்!
ஏ.ஆர். ரஹ்மான் மிக நல்ல தம்பி, புதிதாக வந்து சாதித்துக் கொண்டிருக்கிறார். அதைப்பற்றி நீ தவறாக நினைக்கவே கூடாது. எனக்குக் கொடுத்த இந்த மூன்று படங்களே நான் செய்த பெரிய பாக்கியம்’ என்று மனப்பூர்வமாக வாழ்த்தினார். இப்படி ஒரு கள்ளம் கபடம், பொய், வஞ்சகம் இல்லாத ஒரு அருமையான மனிதர்; உண்மையான ‘சொக்கத்தங்கம்’ தேவா.
தேவா வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்பட்டு மேலே வந்தவர். ஐந்து சகோதரர்களில் இவர்தான் மூத்தவர். ஆரம்பகாலத்தில் தெருத் தெருவாகக் கச்சேரி செய்து, கல்யாண வீடுகளில் வாசித்துத் தன் தம்பிகளையும் அவர்களின் குடும்பங்களையும் காப்பாற்றினார்.
திரையுலகில் உச்சத்தைத் தொட்ட பிறகும் கூட, அவர் தன் தம்பிகளைக் கைவிடாமல் எப்போதும் கூடவே வைத்து அரவணைத்து வந்த ஒரு சிறந்த குடும்பஸ்தர்; நல்ல மனிதர்.
இசையுலகில் இசைஞானி இளையராஜா கொடிகட்டிப் பறந்த காலக்கட்டத்திலேயே, தனக்கென ஒரு தனி பாணியை உருவாக்கி மாபெரும் வெற்றி கண்டவர் தேவா. சுமார் இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு என்னைச் சந்தித்த தேவா, ‘எல்லாரும் இசை கச்சேரி செய்கிறார்கள், நானும் சிங்கப்பூரில் தொடங்கலாம் என இருக்கிறேன்.
நீங்கள் தான் அதைத் தொடங்கி வைக்க வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டார். நானும் மிகுந்த மகிழ்ச்சியோடு சென்று கலந்து கொண்டேன். அதன்பிறகு உலகளவில் பல நாடுகளுக்குச் சென்று அவர் நடத்திய இசை கச்சேரிகள் அனைத்தும் மிகப்பெரிய வெற்றி பெற்றன.
சுமார் மூன்று மாதங்களுக்கு முன்பு உலகப் பயணத்தை முடித்துவிட்டு என்னைச் சந்திக்க வந்திருந்தார். ‘எப்படி போய்க்கொண்டிருக்கிறது?’ என்று கேட்டேன். அதற்கு அவர் மிகவும் மகிழ்ச்சியோடு, ‘இன்றைய தலைமுறை இளைஞர்கள் என்னை இந்தளவுக்குக் கொண்டாடுவது எனக்குப் பெருத்த ஆச்சரியமாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறது சார்.
இதே சந்தோஷத்தோடு இன்னும் 10, 15 வருடங்கள் நான் நிம்மதியாக வாழ்ந்துவிடுவேன்’ என்று நெகிழ்ச்சியோடு கூறினார். ஆனால் ஆண்டவன், ‘நீ ரொம்ப நல்லவன்ப்பா… இந்த சந்தோஷமான மனநிலையிலேயே என் நிலைக்கு வந்துவிடு’ என்று சொல்லி அழைத்துக் கொண்டார் போல.
அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன். அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” எனத் தெரிவித்திருக்கிறார்.
Deva: "அஜித்தை பாட வைக்க முயற்சி பண்ணினேன்!" – தேனிசை தென்றல் தேவா ஷேரிங்ஸ்
October 17, 2026
Deva: "‘மீசைய முறுக்கு-2’-வுக்காக அவருடன் உரையாடிய அனுபவங்கள் மறக்க முடியாதவை!"- ஹிப் ஹாப் தமிழா ஆதி
October 17, 2026
சிக்மா படத்தில் குத்தாட்டம் போட்ட கேத்தரின் தெரசா.. இப்போ சந்தீப் கிஷனுக்கு ஜோடி.. கரிகாலா பூஜை!
October 17, 2026
ரஜினியை பார்த்ததும் கதறி அழுத தேவா மகள்.. ஆறுதல் சொல்லிவிட்டு தேவா உடலையே பார்த்து நின்ற ரஜினிகாந்த்
October 17, 2026
விஜய்யை பாடகராக்கிய தேவா.. 10 நிமிஷம் கூட பேசல… தங்கமான மனுஷன்ய்யா!
October 17, 2026
பேரிடியா இருக்கே.. இது பொய்யான செய்தியென வரக்கூடாதா.. தேவா மறைவால் மனம் வாடிய ராமராஜன்
October 17, 2026
Manav Suthar hopes to bank on adaptability in alien conditions
October 17, 2026
Bhuvneshwar makes T20I comeback after 4 years as India asked to bat first
October 17, 2026
'There's an aura': South Africa call on KG to bring the heat against Australia
October 17, 2026
டேய் மனசாட்சியே இல்லையாடா.. 8 மாதம் போராடி நதியை சுத்தப்படுத்திய இன்ஸ்டா பிரபலத்துக்கு அடுத்த அடி
October 17, 2026
Deva: "அஜித்தை பாட வைக்க முயற்சி பண்ணினேன்!" – தேனிசை தென்றல் தேவா ஷேரிங்ஸ்
October 17, 2026
மழை வருமா? வராதா? இந்தியா VS வெ.இண்டீஸ் 5வது டி20 பெங்களூரில் நடக்குமா? வானிலை நிலவரம்
October 17, 2026